Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மார்ச் மாதத்தில் இந்த ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்... உஷாரா இருங்க...
2022 மார்ச் மாதத்தில் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவிருக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்களில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மார்ச் மாதத்தில் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது 2022 மார்ச் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! மாதத்தின் தொடக்கத்தில் உங்கள் மனம் அமைதியிழந்து இருக்கும். உங்கள் மீது நம்பிக்கை குறைவு ஏற்படும். பணியிடத்தில் உடன்பணிபுரிபவர்களுடன் இணக்கம் காணப்படும். ஆனால் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கை குழப்பம் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்பில் விழிப்புடன் இருங்கள். வாகனங்களுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் மனம் அமைதியற்று சஞ்சலத்துடன் இருக்கும். வியாபாரத்தில் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை குழப்பம் நிறைந்திருக்கும். மார்ச் 15 ஆம் தேதி முதல் பொறுமையாக இருக்க வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இம்மாதத்தில் உங்கள் மனம் அமைதியின்றி இருக்கும். மன அமைதிக்காக சற்று பாடுபடுங்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனங்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் வாழ்க்கை ஒருவித குழப்பம் நிறைந்ததாகவே இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இம்மாதம் நீங்கள் நம்பிக்கையின்மையுடன் இருப்பீர்கள். மார்ச் 7 ஆம் தேதியில் இருந்து வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மார்ச் 16 ஆம் தேதியில் இருந்து உங்கள் பொறுமை குறையும். குடும்பத்தில் அமைதி நிலவ பாடுபடுங்கள். வீட்டுப் பராமரிப்பு மற்றும் அலங்காரத்திற்காக அதிக செலவுகளை செய்யக்கூடும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
