For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஜாதகத்துல செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி தரும் பஞ்சமகா புருஷ யோகம் இருக்கா?

உங்க ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கு என்று பார்த்தாலே உங்களுக்கு எந்த மாதிரியான அதிர்ஷ்டங்கள் தேடி வரும் என்று பார்க்கலாம். தலைமை பதவியும், செல்வமும் செல்வாக்கும் உங்களுக்கு தேடி வரப்போகிறது.

|

ஒருவருக்கு பஞ்சமகா புருஷ யோகங்கள் இருந்தால் அவர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் தலைமை பதவியும் தேடி வரும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன், ராகு கேது தவிர செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களினால் பஞ்சமகா புருஷ யோகங்கள் உண்டாகின்றன.

What Are The Pancha Mahapurusha Yogas And Benefits

செவ்வாயினால் ஏற்படும் ருசக யோகம், புதனால் ஏற்படும் பத்திர யோகம், குருவினால் ஏற்படும் ஹம்சா யோகம், சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம், சனியால் ஏற்படும் சச யோகம் போன்றவையோ பஞ்சமகா புருஷ யோகங்கள்.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

நாட்டின் பிரதமர் மோடி ஜாதகத்தில் பல யோகங்கள் இருந்தாலும் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகத்தில் ஹம்ச யோகமும் மாளவியா யோகமும் அமைந்துள்ளது. உலகப்புகழ் பெற்ற பில்கேட்ஸ் ஜாதகத்தில் சச யோகமும் மாளவியா யோகமும் அமைந்துள்ளது.

MOST READ: மார்ச் மாதம் குரு, செவ்வாய் பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பு வரும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செவ்வாய் தரும் ருசக யோகம்

செவ்வாய் தரும் ருசக யோகம்

நவகிரகங்களில் அங்காரகன், மங்கள காரகன், பூமி காரகன் என போற்றப்படும் செவ்வாய் பகவான் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் ஏதாவது ஒன்றில் அமயப்பெற்றால் ருசக யோகம் உண்டாகிறது.பூமி, மனை போன்றவற்றால் லாபத்தை அள்ளி தருவது ருசக யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு துணிவும், தைரியமும் சிறப்பாக இருக்கும். திறமைசாலிகளாகவும் நல்ல அறிவாற்றல், பேச்சுத் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பெண்களுக்கு இந்த யோகம் இருந்தால் நல்ல தேக ஆரோக்கியம், மண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அற்புதங்களை தரும்.

குரு தரும் ஹம்ச யோகம்

குரு தரும் ஹம்ச யோகம்

பொன்னவனான குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமைய பெற்றவர்கள் சுமுதாயத்தில் பலர் போற்ற கூடிய அளவிற்கு பெயரும் புகழும் பெறுவார்கள். பணபுழக்கம் அதிகமுள்ள இடங்களில் உயர்வான பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். கமிஷன், ஏஜென்ஸி, வட்டித் தொழில் போன்றவற்றில் ஈடுபடக்கூடிய யோகமும் அவற்றால் நல்ல அனுகூலங்களும் உண்டாகும். பெரியோர்களின் நட்பும், சான்றோர்களின் ஆசி போன்றவையும் ஹம்ச யோகம் பெற்றவர்களுக்கு சிறப்பாக அமையும்.

புதன் தரும் பத்திர யோகம்

புதன் தரும் பத்திர யோகம்

கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். நீண்ட ஆயுளையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் அழகான உடலமைப்பையும் பத்திர யோகம் கொடுக்கும். பத்தர யோகம் அமையப்பெற்றவர்களுக்கு வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் கிடைக்கும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிப்பார்கள்.

சுக்கிரன் தரும் மாளவியா யோகம்

சுக்கிரன் தரும் மாளவியா யோகம்

காதல் நாயகன் சுக்கிர பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானமான 1,4,7,10 ல் அமையப் பெற்றால் மாளவியா யோகம் உண்டாகிறது. மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமைந்து தாம்பத்திய வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். செல்வம், செல்வாக்கு உயர்வடையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். வண்டி, வாகனச் சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு போன்ற யாவும் மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு மிகச் சிறப்பாக அமையும்.

சனி தரும் சச யோகம்

சனி தரும் சச யோகம்

ஆயுள்காரகன், ஜீவனகாரகன் என்று அழைக்கப்படக்கூடிய சனி பகவான் ஆட்சியோ உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 1,4,7,10 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சச யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு நீணட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடகாத்திரமான உடல் அமைப்பு உண்டாகும். அரசாங்க வழியில் உயர்பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் அமையும். சமுதாயத்தில் கௌரவமான நிலையை உண்டாக்கும். நல்ல குடும்ப வாழ்க்கையும், மனைவி பிள்ளைகளால் அனுகூலங்களும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are The Pancha Mahapurusha Yogas And Benefits

Pancha Mahapurusha Yoga, means combinations producing five different types of great persons. Pancha means Five and Mahapurusha means Great persons. The different types are governed by Mars, Mercury, Jupiter, Venus and Saturn.
Story first published: Tuesday, March 3, 2020, 13:32 [IST]
Desktop Bottom Promotion