For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த ராசிக்காரங்க எல்லாம் எச்சரிக்கையாக இருக்கணும்...

2020ஆம் ஆண்டின் புதிய தொடக்கமாக இந்த வாரம் பிறந்துள்ளது. இந்த புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் முதல்வாரம் நமக்கு எப்படி இருக்கும். பணவருமானம் வருமா? வேலையில் ஏதாவது சிக்கல் வருமா?

|

2020ஆம் ஆண்டின் புதிய தொடக்கமாக இந்த வாரம் பிறந்துள்ளது. இந்த புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் முதல்வாரம் நமக்கு எப்படி இருக்கும். பணவருமானம் வருமா? வேலையில் ஏதாவது சிக்கல் வருமா? வீட்டில் சண்டை சச்சரவு வருமா என்றெல்லாம் எதிர்பார்க்கிறீர்களா? உங்களுடைய சின்ன கேள்விகளுக்கும், பெரிய எதிர்பார்ப்புகளுக்கும் இந்த வார ராசி பலன்கள் பதில் சொல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, நீங்க இந்த வாரம் ரொம்ப கவனமா உஷாரா இருக்க வேண்டிய வாரம். அதிகப்படியான கோபம் வேலைக்கு உதவாதுங்குறதை புரிஞ்சி நடந்துக்கோங்க. அதே மாதிரி ரொம்ப உற்சாகமான மனநிலையில எந்த முடிவும் எடுக்காதீங்க. இந்த நேரத்துல வீட்டு சூழ்நிலையும் உங்களுக்கு பாதகமாவே இருக்கும. அதனால நீங்க எதுலயும் பட்டும் படாம நடந்துக்கோங்க. இல்லேன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க. ஆபீஸ் வேலையையும் ரொம்ப கஷ்டப்பட்டு பார்ப்பீங்க. இருந்தாலும் சின்னதா ஒரு தப்பு செஞ்சாலும் அது உங்க வேலையை பாதிக்க வாய்ப்பிருக்குது, கவனமா இருங்க. இந்த சமயத்துல உங்க ஃபைனான்ஸ் பொஷிசனும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. தேவையில்லாததுக்கு எல்லாம் பணத்தை செலவழிக்காதீங்க. உங்க ஹெல்த் கண்டிஷனும் கொஞ்சம் டல்லாவே இருக்கும். இது உங்களை மனசளவுல பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு அமோகமா இருக்கும். வேலை பார்ப்பவரா இருந்தா, உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு வந்து சேரும். இதனால உங்களுக்கு இன்னும் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பிருக்குது. பிசினஸ் பண்றவங்களுக்கு ரொம்ப லாபகரமா இருக்கலாம். சின்ன சின்னதா இடைஞ்சல் இருந்தாலும் கூட லாபத்தை எதிர்பார்க்கலாம். வேலை விஷயத்திலயும் ஒரு முக்கியமான முடிவெடுக்க வாய்ப்பிருக்கு. ஃபைனான்ஸ் பொஷிசனை கூட்டிக்குறதுக்கு புதுசா ப்ளான் பண்ணுவீங்க. ஃபேமிலி லைஃப்லயும் உங்களுக்கு எல்லோருமே சப்போர்ட் பண்ணுவாங்க. படிக்குற பசங்களா இருந்தா பெரிசா இடைஞ்சல் ஏற்பட்டு தொந்தரவு கொடுக்கும். அதனால ரொம்ப அக்கறை எடுத்து படிக்குறது நல்லது. ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மிதுனம்

மிதுனம்

ரொம்ப நாளா இருந்து வந்த பிரச்சனை இந்த வாரம் முடிவுக்கு வரலாம். உங்க லைஃப் சரியான திக்குலதான் நகருதுங்குறதை நீங்க நம்புவீங்க. உங்களுக்கு நெருக்கமானவங்களோட அன்புனால, மனசலவுல ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபீல் பண்ணுவீங்க. நீங்க எடுக்குற முக்கிய முடிவுகளுக்கு வீட்டுல இருக்குறவங்களும் சப்போர்ட்டிவா இருப்பாங்க. மேரேஸ் லைஃபை பொறுத்த வரை, உங்க மனைவியோட பேச்சை உதாசீனப்படுத்தி பேசிட்டு பின்னாடி அதுக்காக வருத்தப்படுவீங்க. உங்க அப்போவோட ஹெல்த் கண்டிஷன்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். வேலை பாக்குற இடத்துலயும் கொஞ்சம் ஏத்த இறக்கமாவே இருக்கலாம். உங்க சீனியர் கொஞ்சம் கடுமையா நடந்துக்கலாம். அதனால கவனமா நடந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் எதிரிகளால உங்களுக்கு தொல்லை அதிகரிக்க வாய்ப்பிருக்கு. அதனால எந்த வேலையை செஞ்சாலும் கொஞ்சம் கவனமா இருக்க பாருங்க. இல்லாட்டி சிக்கல்ல மாட்டிக்குவீங்க. உங்களோட தன்னம்பிக்கையையும் கொஞ்சம் கூட்டிக்கோங்க. பிசினஸ் பண்றவங்க பிசினஸ் பரிவர்த்தனையை கவனமா பாத்துக்குறது நல்லது. இந்த வாரம் பணப்பிரச்சனை இருக்காது. ரொம்ப நாளா ஏதாவது ஒரு ப்ளான்ல இண்வெஸ்ட் பண்ற ஐடியா இருந்தா அது இன்னிக்கு நல்லவிதமா முடியலாம். உங்க மனைவியோட இருந்துட்டு வர்ற பிரச்சனை நீடிக்கலாம். அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருக்குறது நல்லது. ஹெல்த் கண்டிஷனும் அவ்வளவு நார்மலே இல்லை. இன்ஃபெக்சன் ஆகுறதுக்கு வாய்ப்பிருக்கு, கவனமா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள் : திங்கட்கிழமை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, இந்த வாரம் உங்களுக்கு அருமையான வாரமா இருக்கக்கூடும். எல்லாமே நல்லவிதமா முடியும். வேலை தேடிட்டு இருக்குறவரா இருந்தா வேலை கிடைக்க வாய்ப்பிருக்குது. அது ஒருவேளை கவர்மெண்ட் வேலையா கூட இருக்கலாம். அதனால ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கும் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. உங்களோட ஃபைனான்ஸ் பொஷிசனும் இந்த வாரம் நல்லாவே இருக்கும். லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் ரொம்பவே சுவராஸ்யமா இருக்கலாம். உங்க ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் நார்மலா இருக்கும். வண்டியில போகும்போது கொஞ்சம் கவனமா ட்ராவல் பண்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள் : வியாழன்கிழமை

கன்னி

கன்னி

லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் ஏமாற்றமா இருக்க வாய்ப்பிருக்கு. உஙக்ளோட சந்தேக புத்தியால உங்களோட லவ்வர் உங்களை விட்டு பிரியவும் வாய்ப்பிருக்கு. அதனால சந்தேகப்படுறதை அவாய்ட் பண்ணுங்க. கல்யாணம் பண்ணுனவங்களுக்கு இந்த வாரம் நல்லாவே இருக்கு. பெத்தவங்களோடயும் சுமூகமான உறவே இருக்கும். அவங்க கூட எங்கயாவது ட்ராவல் பண்றதுக்கும் சான்ஸ் கிடைக்கும். ஃபைனான்ஸ் பொஷிசனும் இந்த வாரம் நார்மலா இருக்கும். எந்த நிதித் திட்டத்துலயாவது இண்வெஸ்ட் பண்ற ஐடியா இருந்தா பண்றது நல்லது. இந்த வாரம் ஷாப்பிங் பண்றதுக்கும் டைம் கிடைக்கும். இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலாவே இருக்கும். படிக்குற பசங்க படிப்புல மட்டும் கவனம் செலுத்துறது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் பண விஷயத்துல ரொம்ப கவனமா செயல்பட வேண்டிய வாரம். ரொம்ப நாளா வரவேண்டிய பணம் வராம இழுத்துட்டே இருந்தா ரொம்ப நிதானமா புத்திசாலித்தனமா நடந்து பணத்தை வாங்க பாருங்க. லாபம் கம்மியா கிடைச்சாலும் பணத்தை வாங்குற வழிய பாருங்க. அதனால அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. லவ் பண்றவங்களுக்குள்ள இந்த வாரம் நெருக்கம் அதிகரிக்கலாம். கல்யாணம் ஆனவங்களுக்கு இந்த வாரம் மந்தமாவே நகரும். மனைவி கிட்ட வாய்த் தகறாரு ஏற்பட வாய்ப்பிருக்கு, கவனமா பேசப்பாருங்க. இல்லாட்டி உங்களுக்கு தான் சேதாராம் ஜாஸ்தி இருக்கும். வார கடைசியில குடும்பத்தோட எங்காவது ட்ராவல் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஆஃபீஸ் வேலையும் இந்த வாரம் நார்மலாவே நகரும். ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்க சாப்பாட்டுல வாயை கட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் குடும்பத்துல மகிழ்ச்சி தாண்டவமாடும். உங்க பசங்க கிட்ட இருந்து நல்ல செய்தி வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. படிக்குற பசங்களுக்கு படிக்குறதுல இருந்த இடைஞ்சல் காணாம போகும். காலேஜ் அட்மிஷன் சம்பந்தமா முட்டுக்கட்டை இருந்தா அது ஓடிப்போயிடும். மேரேஜ் லைஃப்ல சந்தோஷம் பொங்கும். ரொம்ப நாளா பாக்கமா இருந்த ஃப்ரண்ட்ஸுங்களை பாத்து பேசுவீங்க. வெளியூர் ட்ராவல் பண்றதுக்கும் நீங்க ப்ளான் பண்ணுவீங்க. பிசினஸ் பண்றவங்க நல்ல முடிவா எடுப்பாங்க. அது நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் நல்லவிதமா நகரும். ஃபைனான்ஸ் பொஷிசனும் இந்த வாரம் நல்லா இருக்கும். செலவை கண்ட்ரோல் பண்ணி சேமிக்குற வழியைப் பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நாள் : திங்கட்கிழமை

தனுசு

தனுசு

ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் அருமையா நகரும். உங்க வேலையை பாத்து உங்க சீனியரும் பாராட்டுவாரு. அதனால கூடுமானவரை உங்க வேலையை ரசிச்சி நல்லவிதமா பொறுமைய செய்ய பாருங்க. உங்க ஃபேமிலி லைஃபும் சந்தோஷமா நகரும். உங்க வீட்டுக்கு திடீர்னு கெஸ்டுங்க வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. இதனால உங்க பட்ஜெட் எகிறிடும். இருந்தாலம் சமாளிச்சிடுவீங்க. லவ் பண்றவங்களா இருந்தா, உங்க லவ்வரோட நடவடிக்கையில கொஞ்சம் சேஞ்சஸ் தெரியும். உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லவே இருக்கும். அதனால மனசளவுளயும் சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறுகிழமை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரக்களுக்கு இந்த வாரம் தொட்டதெல்லாம் துலங்கும். உங்க எதிரிங்க ஓடிப்போவாங்க. வாழ்க்கையில முன்னேறுறதுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைக்கும். வேலை விஷயமா வெளியூர் ட்ராவல் பண்றதுக்கு சான்ஸ் இருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் கொட்டும். பார்ட்னர்ஷிப் பிசினஸ் பண்றவங்க பிசினஸை டெவலப் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமா நகரும். வரன் பார்த்துக்கிட்டு இருந்தா நல்ல வரன் கிடைக்க வாய்ப்பிருக்கும். லவ் பண்றவங்க தன்னோ லவ் ப்ரபோஸலை வீட்டுல சொன்னா, அதுக்கு வீட்டுல பச்சை கொடி காட்டுவாங்க. பண விஷயத்தை பொறுத்த வரை வார தொடக்கத்துல சின்ன செலவுங்க உங்க கையை கடிக்க கூடும். அதனால அவசரப்பட்டு எதுலயும் இண்வெஸ்ட் பண்ணிடாதீங்க. ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் நார்மலாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நாள் : வியாழன்கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் ஆரம்பம் கொஞ்சம் சிரமமா இருக்கும். ஃபேமிலி மெம்பர்ஸ் கூட மனக்கசப்பு ஏற்பட்டு களேபரமாகிடும். இருந்தாலும் நீங்க ரொம்ப முயற்சி எடுத்து மனக்கசப்பு எல்லாத்தையும் சரிக்கட்டிடுவீங்க. லவ் பண்றவங்க ஒருத்தருக்கொருத்தர் ரொம்பவும் கனிவா நடந்துக்குறது நல்லது. மேரேஜ் ஆனவங்க ஒய்ஃப் கிட்ட ரொம்பவும் அந்நியோன்யமா இருப்பீங்க. வேலை விசயமா வெளிநாட்டுக்கு போறதுக்கும் சான்ஸ் கிடைக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க ரொம்பவும் சின்சியரா வேலை பாப்பீங்க. இந்த வாரம் உங்க செலவுகள் கையை கடிக்க கூடும். குடும்ப தேவையை நிறைவேத்துறதுக்கு யோசிக்காம செலவழிப்பீங்க. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷனும் கொஞ்சம் இடைஞ்சல் பண்ணலாம். கவனமா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மீனம்

மீனம்

உங்களோட வாழ்க்கையோட முன்னேற்றத்தை உங்களோட காலகட்டத்துலயும் நீங்க ஃபீல் பண்ணுவீங்க. வேலை பாக்குறவரா இருந்தா, அந்த வேலையை ரொம்ப சந்தோஷமா பண்ணுவீங்க. அது உங்களோட வாழ்க்கையில முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். இருந்தாலும் அதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு வேலை பாக்க வேண்டியதிருக்கும். அதனால எக்ஸ்ட்ரா வேலையைம் சேந்துடும். இருந்தாலும் ரொம்ப சந்தோஷமா வேலை பாத்து முடிச்சிடுவீங்க. படைப்பு சம்பந்தப்பட்ட வேலையில இருக்குறவங்களுக்கு ரொம்ப நல்ல பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். ஓவர் சந்தோஷம் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. அதனால சந்தோஷத்துல கண்ணுமண்ணு தெரியாம எந்த முடிவும் எடுக்காதீங்க. வீட்டு சூழ்நிலையும் சந்தோஷமா இருக்கும். கல்யாணம் ஆகாதவங்களா இருந்தா வீட்டுல கல்யாணம் பண்றதுக்கு ப்ரஷர் கொடுப்பாங்க. இந்த வாரம் பணப்புழக்கமும் நார்மலா இருக்கும். வாரக் கடைசியில சில சங்கடங்கள் உண்டாக வாய்ப்பிருக்கு. அதனால கவனமா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 5 January 2020 To 11 January 2020 In Tamil

Check out the weekly horoscope for 5th january to 11th january for all zodiac signs.
Story first published: Sunday, January 5, 2020, 13:07 [IST]
Desktop Bottom Promotion