For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...

மார்ச் மாதத்தின் கடைசி வாரமும் ஏப்ரல் மாதத்தின் முதல்வாரமும் இணைந்த இந்த வாரம் இன்னும் என்னென்ன மாற்றங்களை மக்களுக்கு கொண்டு வரப்போகிறதோ தெரியவில்லை.

|

மார்ச் மாதத்தின் கடைசி வாரமும் ஏப்ரல் மாதத்தின் முதல்வாரமும் இணைந்த இந்த வாரம் இன்னும் என்னென்ன மாற்றங்களை மக்களுக்கு கொண்டு வரப்போகிறதோ தெரியவில்லை. கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும் அதனால் வீட்டில் தனித்திருப்பதும் அவசியமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் முழுக்க வீட்லதான் ரெஸ்ட் எடுக்கப்போறீங்க. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வேலையும் நல்லா போகும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். வீட்ல இருந்து வேலை செய்றவங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில இருக்கிறவங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் வியாபாரம் செய்றவங்களுக்கு வருமானம் அதிகமாகும். சிலருக்கு இந்த வாரம் இடமாற்றம், ஊர்மாற்றம் கூட வரலாம் ஆனா யோசிச்சு முடிவு பண்ணுங்க. சாப்பாடு விசயத்தில கவனமாக இருங்க காரமான உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்க. இருக்கிற வேலையை விட நினைக்காதீங்க அது உங்களுக்கு நல்லதில்லை. உங்க லைப்பார்ட்னர் மூலம் பணம் கிடைக்கும். சிலருக்கு திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடையும். காதலிப்பவர்கள் கவனமாக இருங்க. டிஸ்டென்ஸ் மெயின்டென் பண்ணுங்க. வேலையில முக்கிய பொறுப்புகள் வரும். நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க இரவு நேரத்தில் அதிகம் கண் விழிக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நாள் : திங்கட் கிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு முகத்தில பொலிவு அதிகமாக இருக்கும். சுக்கிரனால தெம்பும் தைரியமும் கூடும். நோய் பற்றிய பயமெல்லாம் உங்களுக்கு வேண்டாம். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குருவின் பார்வையால் நீங்க குதூகலமாக இருப்பீங்க. பிசனஸ் இப்போதைக்கு முடங்கினாலும் பிரச்சினைகள் தீர்ந்து லாபம் அதிகமாகும். உங்க பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில கவனமாக இருங்க திடீர் வருமானம் வரும். இதனால் கடன் பிரச்சினைகள் தீரும். சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருங்க. தெம்பும் தைரியமும் அதிகமாகும். நோய் பற்றிய பயமெல்லாம் வேண்டாம் சத்தான உணவுகளை சாப்பிடுங்க. கணவன் மனைவி உறவில் ரொம்ப நெருக்கம் அதிகமாகும். காதல் விசயத்தில கவனமாக இருங்க. அதிக நெருக்கம் வேண்டாம் அப்புறம் பிரச்சினையாகிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நாள் : வியாழன் கிழமை

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் உங்க ராசிக்கு அஷ்டம சனி, அஷ்டம குரு இருப்பதாலே நீங்க கவனமாக இருங்க. உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வீட்ல வீண் வாக்குவாதங்கள் எதுவும் வேண்டாம். பேச்சில கவனமாக இருங்க. கோபப்பட்டு பேசாதீங்க. வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே போகாதீங்க. ஆரோக்கியமும், பாதுகாப்பும் ரொம்ப முக்கியம். எதையும் பாசிட்டிவ் ஆக யோசிங்க. நெகடிவ் ஆக யோசிக்காதீங்க. வண்டி வாகனத்தில அவசர வேலையாக போறப்ப கூட நிதானமாக போங்க. கடன் தொல்லை வரலாம் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்க. என்ன பிரச்சினை வந்தாலும் நீங்க கண்டுக்காதீங்க. உங்க வேலையை மட்டும் பாருங்க. எதிலும் தலையிடாதீங்க. அதுதான் உங்களுக்கு ரொம்ப நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நாள் : ஞாயிறு கிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம் குருவோட பார்வை உங்களுக்கு கிடைப்பதால நோய் நொடிகள் நீங்கும். உங்களுக்கு தெம்பும் தைரியமும் கூடும். உங்க வருமானமும் அதிகமாகும். வியாபாரத்தில லாபம் கிடைக்கும் வாங்கி வைத்திருந்த சரக்குகள் விற்றுத்தீரும். உங்க நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களுடைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும் என்றாலும் வீட்ல இருக்கிறவங்க பேச்சில கவனமாக இருங்க. பெர்சனல் லைப்ல பிரச்சினை வரலாம். விட்டுக்கொடுத்து போங்க. கொஞ்ச நாளைக்கு வீட்டுக்குள்ளே இருக்கிறதுதான் எல்லோருக்கும் நல்லது ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. அரசு வேலை செய்றவங்க கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ நிறம்

அதிர்ஷ்ட எண் : 25

சாதகமான நாள் : செவ்வாய் கிழமை

சிம்மம்

சிம்மம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம். வீட்ல இருக்கிறவங்க கிட்ட கோபமாக பேசாதீங்க. சண்டை சச்சரவு வரலாம். வீண் வம்பு வழக்குகள் வேண்டாம். வண்டி வாகனங்களில் போகும் போது கூட நீங்க கவனமாக இருங்க. பயமோ, பீதியோ கூட வேண்டாம். பிசினஸ் செய்றவங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். பணவருமானமும் அதிகமாகும். அதிக முதலீடுகள் இப்போதைக்கு வேண்டாம். சில நேரங்களில் ஏற்ற இறக்கமாக இருக்கும் எனவே குழம்பாதீங்க. தனியா வீட்டுக்குள்ள இருக்கிறவங்க சிலருக்கு மன அழுத்தம் வரலாம் நல்ல இசையை கேளுங்க சத்தான சாப்பாடுகளை சாப்பிடுங்க இதுவும் கடந்து போகும். கணவன் மனைவி பேசும் போது விட்டுக்கொடுத்து போங்க. காதலர்கள் இப்போதைக்கு சந்திப்பு வேண்டாம் ஒத்திப்போடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் : 09

சாதகமான நாள் : செவ்வாய்க்கிழமை

கன்னி

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு தெம்பும் தைரியமும் கூடும். திடீர் அதிர்ஷ்டம் வரலாம். உங்க வாழ்க்கை துணை மூலம் உதவிகள் கிடைக்கலாம். திடீர் பண வருமானம் வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சொந்த பந்தங்களுடன் கூடி இருக்கும் நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. நன்மைகள் நிறைந்த வாரம். மனதளவில் சில குழப்பங்கள் வரும். எதையும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசிச்சு முடிவு பண்ணுங்க. திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஆனால் இப்போதைக்கு எதுவும் வேண்டாம். பயணங்கள் வேண்டாம் வீட்டோட இருங்க கவனமாக பேசுங்க. பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம். சத்தான உணவுகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நாள் : வியாழன்கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க அடுத்தவங்க விசயத்தில தலையிடாதீங்க. பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரமாக பார்த்துக்கங்க. நீங்க சவால்களை சந்திக்க தயாராகுங்க. வலிகளையும் சமாளிக்க பழகுங்க. முக்கிய முடிவுகளை எதுவும் இந்த வாரம் எடுக்காதீங்க. எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. மருத்துவ உதவி தேவைப்படும் கவனமாக இருங்க. அம்மா உடன் பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க. உறவினர்கள் கிட்ட கவனமாக இருங்க. இப்போதைக்கு திருமண பேச்சுவார்த்தை எதுவும் வேண்டாம் பொறுமையாக இருங்க. கணவன் மனைவி இடையே நெருக்கம் இருந்தாலும் பேச்சில கவனமாக இருங்க. சின்ன பிரச்சினை கூட பெரிசாக வாய்ப்பு இருக்கு கவனம். வருமானம் வந்தாலும் செலவும் கூடவே வரும் சமாளிங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நாள் : ஞாயிறுகிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப உற்சாகமான நாளாக இருக்கும் உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்க லைப் பார்ட்னர் உங்களுக்கு நிறைய உற்சாகத்தை கொடுப்பார். உதவி செய்வார். வீட்ல இருந்தாலும் வேலையில கூட மாட ஒத்தாசை செய்வாங்க இல்லத்தரசிகள் அதனால ஜாலியாக என்ஜாய் பண்ணுவீங்க. திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நேர்ல போக முடியாவிட்டாலும் ஆன்லைன் வீடியோ கால் மூலமாக நீங்க பார்த்து பேசி முடிவு பண்ணுவீங்க. உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். உங்க நிதி நிலைமையும் ரொம்ப நல்லா இருக்கும். பணம் பல வழிகளில் வரும் வியாபாரத்தில் நீங்க ஸ்டாக் வாங்கி வச்சிருந்த சரக்குகள் எல்லாம் விற்று தீரும். சத்தான உணவுகளை சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. உங்க ஆரோக்கியத்தில எந்த பிரச்சினையும் இருக்காது. ஜாலியாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நாள் : சனிக்கிழமை

தனுசு

தனுசு

நீங்க உங்க பேச்சில நிதானமாக இருங்க. கோபப்பட்டு பேசாதீங்க. பண வருமானம் வரும். இருக்கிற பணத்தை சேமிங்க. சிக்கனமாக செலவு பண்ணுங்க. உங்களுக்கு நெகட்டிவ் எண்ணங்கள் நீங்கி பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகமாகும். உங்க தன்னம்பிக்கை அதிகமாகும். சுகமான வாரமாக அமையும். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு புதிய வேலைகள் ஆன்லைன் மூலம் தேடி வரும் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் நீங்கும். நெருக்கம் அதிகமாகும். இந்த வாரம் குடும்பம் குழந்தைகள் என்று குதூகலமாக இருப்பீங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்கள். நிறைய நன்மைகள் நடைபெறும் வாரம் இதுவாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நாள் : திங்கள்கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம். நிறைய யோகங்கள் கிடைக்கப் போகிறது. பணம் செலவுக்கு இல்லையே என்று சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் அக்கவுண்ட்டில் பணம் தேடி வரும். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது சில நேரங்களில் மன அழுத்தங்கள் கொடுத்தாலும் குடும்பம் குழந்தைகள் என்று குதூகலமாக இருப்பீர்கள். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்க வேலையில் நிம்மதியும் இடமாற்றமும் கிடைக்கும். சுக்கிரன் தரும் யோகங்கள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். சிக்கலான நேரத்திலும் செய்யும் தொழிலில் லாபம் கொடுக்கும். உங்களுக்கு சந்தோஷமான வாரமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நாள் : ஞாயிறுகிழமை

கும்பம்

கும்பம்

நிறைய விரைய செலவுகள் வரலாம் என்றாலும் பண வருமானம் வருவதால் அந்த செலவுகளை சமாளிப்பீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். அதற்கான நிறைய கடன்பட வேண்டாம். எந்த புது ஒப்பந்தங்களும் போட வேண்டாம். வீட்டோட இருங்க நல்லா ரெஸ்ட் எடுங்க சத்தான உணவுகளை சாப்பிடுங்க ஏன்னா உங்க வயிறுல பிரச்சினை வர வாய்ப்பு இருக்கு. புதிய முதலீடுகள் எதுவும் நீங்க பண்ண வேண்டாம். யார் கிட்டையும் நீங்க வம்பு வச்சிக்காதீங்க. பேச்சில கவனமாக இருங்க சாதாரணமாக பேசும் பேச்சு உங்களுக்கு பிரச்சினையை தரலாம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். என்னதான் தலை போகிற காரியமாக இருந்தாலும் பயணங்கள் வேண்டாம் ஒத்திப்போடுங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் வாங்கி போடாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் : 09

சாதகமான நாள் : செவ்வாய்க்கிழமை

மீனம்

மீனம்

நீங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. பிசினஸ், வியாபாரம் பண்றவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாங்கி வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் விற்று தீரும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் நீங்க அதை லாவகமாக சமாளிப்பீங்க. திருமண பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் வேண்டாம் ஒத்திப்போடுங்க. புது வேலைக்கு அப்ளை செய்திருந்தவங்க ஆன்லைன் இன்டர்வியூவில நல்லா வேலை செய்வீங்க. காதல் வாழ்க்கையில கவனமாக இருங்க. சுப நிகழ்ச்சிகளை ஒத்திப்போடுங்க வேண்டவே வேண்டாம். உங்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகமாகும். டேக் ரெஸ்ட் இப்போதைக்கு அதுதான் ரொம்ப நல்லது. வங்கிக்கடன் கிடைக்கும் இப்போதைக்கு பிசினஸ்ல புதுசா எந்த முதலீடும் பண்ணாதீங்க அதுதான் உங்களுக்கு ரொம்ப நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நாள் : வியாழன்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 29th March 2020 To 4th April 2020 In Tamil

Check out the weekly horoscope for 29th march to 4th april for all zodiac signs.
Story first published: Sunday, March 29, 2020, 15:05 [IST]
Desktop Bottom Promotion