வார ராசிபலன் (22 to 28 January 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...

அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

Weekly Horoscope For 22 January 2023 To 28 January 2023 In Tamil

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே ஜனவரி 22, 2023 முதல் ஜனவரி 28, 2023 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பேச்சு மற்றும் நடத்தையை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வியாபாரிகள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதியைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல், சளி, இருமல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள்: புதன்

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கும். திடீரென்று கைக்கு பணம் வரும். பழைய கடனை அடைப்பூர்கள். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில பெரிய மற்றும் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். அலுவலக சூழல் சற்று அழுத்தமாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரிகள் குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகமாக இருக்கும். குழந்தைகளின் கல்விக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களின் வேலையில் பல தடைகளை சந்திப்பீர்கள். மனதளவில் வருத்தப்படுவீர்கள். முடிவுகளை எடுக்க சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையை நீங்கள் பெற வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. துணையுடனான உறவு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. திடீரென்று ஆரோக்கியத்தில் பெரிய சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். கடன் வாங்கவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் இந்த வாரத்தில் பொறுமையாக பணியாற்ற வேண்டும். உயர் அதிகாரிகளின் நடத்தை உங்களிடம் சரியாக இருக்காது. நீங்கள் கடினமாக உழைத்து, உங்கள் நல்ல செயல்திறனின் அடிப்படையில் அனைவரின் மனதையும் வெல்ல முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்கள் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணப் பற்றாக்குறையால் சில வேலைகள் தடைபடலாம். வீட்டின் சூழல் சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் எல்லா வேலைகளும் உங்கள் திட்டப்படியே முடிவடையும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிறுசிறு ஆதாயங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வசதிகள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி நிலை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். அதே சமயம் தொழிலதிபர்கள் அதிகம் ஓட வேண்டியிருக்கும். ஆனால் வார இறுதியில் லாபம் கிடைக்கும். துணையுடன் போதுமான நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்காது. சிறு பிரச்சனை என்றாலும் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் படிப்படியாக நிலைமை மேம்படும். தொழிலதிபர்ள் வார இறுதியில் நல்ல முதலீட்டு வாய்ப்பைப் பெறுவார்கள். பெற்றோருடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தந்தை வழியில் லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நாள்: புதன்

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அலட்சியமாக இருந்தால், உங்களின் முன்னேற்றம் தடைபடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். துணையுடனான உறவை வலுவாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். கடனில் இருந்து விரைவில் விடுபட முயற்சிப்பீர்கள். ஆரோக்கியமாக இருக்க மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு ரொமான்டிக்காக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, அதிக செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலட்சியமாக இருந்தால் கஷ்டங்கள் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலையுடன், உங்கள் நடத்தையையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். கோபம் மற்றும் ஆணவத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த நேரம் சராசரியாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் அற்புதமாக இருக்கும். பெரிய நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான வியாபாரம் செய்பவராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த வாரம் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் திடீர் பின்னடைவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சொத்து தொடர்பான நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். இந்நிலையில் கடினமாக உழைக்க வேண்டும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைத்தால், உடனே ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion