For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வார ராசிபலன் (20.11.2022-26.11.2022) - இந்த வாரம் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி கொள்ளாதீர்கள்...

|

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது நவம்பர் 20, 2022 முதல் நவம்பர் 26, 2022 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குறிப்பாக, வணிகர்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்க போகிறது. உங்கள் பழைய நட்பு வட்டங்களால் நீங்கள் நல்ல பலனைப் பெறலாம். உங்களின் தற்போதைய வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்தால், நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். இந்த காலகட்டத்தில், உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இதனால் உங்களின் பெரிய கவலை நீங்கும். இந்த வாரம் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டின் அலங்காரத்தில் சில மாற்றங்களைச் செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் மீது அதிக வேலை அழுத்தத்தை எடுத்து கொள்ளதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவ்வளவு சிறப்பாக இருக்காது. வாரத்தின் தொடக்கத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கான வித்தியாசமான அடையாளத்தை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், உங்கள் கடின உழைப்பை முதலாளி கவனிக்க முடியும். இதனால் விரைவில் நீங்கள் உயர் பதவியைப் பெறுவதோடு, உங்கள் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கலாம். வார இறுதியில் வேலை நிமித்தமாகவும் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். பொருளாதார ரீதியாக, இந்த வாரம் உங்களுக்கு சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். குழந்தைகளின் கல்வி போன்றவற்றிற்காக அதிக பணம் செலவழிக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், சில நாள்பட்ட நோய்களும் வெளிப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வீட்டுச் சூழலை மேம்படுத்துவதற்காக, சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களை அன்புடனும் பணிவுடனும் நடத்த முயற்சி செய்யுங்கள். உங்களின் கோபமான இயல்பு உங்கள் உறவில் கசப்பை உண்டாக்கும். உங்கள் துணைக்கு போதுமான நேரத்தை ஒதுக்க ளமுயற்சி செய்யுங்கள். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் துணையின் மனதைப் புண்படுத்தும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக செயல்படுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய நேரமிது. வார இறுதியில் சில நல்ல செய்திகளையும் நீங்கள் பெறலாம். மிதுன ராசி மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கல்வி தொடர்பான புதிய முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறலாம். உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். குறிப்பாக நீங்கள் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கடகம்

கடகம்

இந்த வாரம் கடக ராசிக்காரர்கள் பிரச்சனைகளால் சூழப்படுவார்கள். காதல் விஷயத்தில் இந்த வாரம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவை வலுவாக வைத்திருக்க முயற்சிக்கவும். எந்த விஷயத்திற்காகவும் பொய்யை நாட வேண்டாம். இல்லையெனில் உங்களுக்கிடையே தூரம் அதிகரிக்கலாம். திருமணமானவர்களுக்கு, இந்த நேரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் துணையின் முரட்டுத்தனமான நடத்தை உங்களைத் தொந்தரவு செய்யலாம். நிதி நிலையில் சரிவு ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் எதிர்பாராத நிதி இழப்பால் கவலையடைவீர்கள். பணம் சம்பந்தமான எந்த வேலையையும் அவசர அவசரமாக செய்யாதீர்கள். அலுவலக வேலையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரியாக இருந்தாலும் சரி, எந்த வித அலட்சியத்தையும் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வணிகர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய வாரமாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சமநிலையுடன் நடந்து கொள்ளுங்கள். வீண் ஆணவத்தைத் தவிர்த்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனையை மட்டும் பின்பற்றுங்கள். வேலை தொடர்பாக அவர்கள் ஏதேனும் ஆலோசனை வழங்கினால், அதை கருத்தில் கொள்வது நல்லது. இல்லையெனில், இழப்பு உங்களுக்கு தான். ஆன்லைன் வணிகம் செய்பவர்கள் இந்த வாரம் மிகவும் லாபகரமானதாக இருக்கும். உங்கள் வணிகத்தை மேற்கொண்டு முன்னேற்றவும் நீங்கள் முடிவு செய்யலாம். இதில் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். கவனமாக யோசித்து எடுத்த முடிவுகளினால் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் சிந்திக்காமல் அவசர அவசரமாக பெரிய செலவுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. எனினும், நீங்கள் ஓய்வில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் சமீபத்தில் ஏதேனும் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இதனால் விரைவில் அதன் சரியான பலனைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவல்கள் இந்த காலகட்டத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் நீங்கள் எல்லா சிரமங்களையும் சமாளிக்க முடியும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால், உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். எதிர்காலத்தில், நீங்கள் எந்த வகையான நிதி பரிவர்த்தனையையும் புத்திசாலித்தனமாக செய்தால் நல்லது. வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் காணப்படும். உங்கள் உடன்பிறப்புடனான உறவில் உங்களுக்கு விரிசல் இருந்தால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் வரலாம். இதெல்லாம் உங்கள் கவனக்குறைவின் விளைவு. எனவே, கவனமாக இருக்க முயலுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேற போகும் நேரமாகும். புதிய வாகனம் அல்லது விலையுயர்ந்த பொருட்கள் வாங்க நீண்ட நாட்களாக நினைத்திருந்தால், இந்த வாரம் உங்கள் விருப்பம் நிறைவேற போகிறது. நிதி நிலையிலும் ஏற்றமான சூழலே நிலவும். புதிய வருமான ஆதாரங்களும் கிடைக்க பெறுவீர்கள். இதுதவிர, பழைய குடும்ப கடனைகள் இந்த நேரத்தில் நீங்கள் திருப்பி செலுத்திட முடியும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்கள், தங்கள் குடும்பத்தாரின் முழு ஆதரவையும் பெறலாம். விரைவில் உங்கள் திருமணம் கைக்கூடும். வாரத்தில் ஆரம்பம் உத்தியோகஸ்தர்களுக்கு சற்று பரபரப்பாகவே இருக்கும். ஆனால், அதன் பிறகு மிகவும் சிறப்பாக இருக்கும், அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பதோடு, குடும்பத்தாருடனும் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். எலக்ட்ரானிக்ஸ், போக்குவரத்து, சொத்து, பங்குச் சந்தை தொடர்பான பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. உங்களுக்கு இதயம் தொடர்பான நோய் ஏதேனும் இருந்தால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது. அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்கள் வீண் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், அவமானகரமான சூழலை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, இதுபோன்ற எந்த வேலையையும் செய்யாதீர்கள். குறிப்பாக உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் பேசும்போது, ​​உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். வணிகர்கள் பெரிய லாபம் ஈட்டுவதற்காக சிறிய லாபத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வணிகத் திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய நினைத்தால், இந்த நேரம் அதற்கு பொருத்தமானது. இந்த நேரத்தில் வீட்டின் சூழல் அவ்வளவு சரியாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருக்கலாம். வார இறுதியில் தந்தையின் திடீர் உடல்நிலை குறைவு அனைவரையும் வருத்தமடைய செய்யும். இந்த நேரத்தில், நீங்கள் மருத்துவர் மற்றும் மருத்துவமனைக்கு நிறைய அலைய வேண்டியிருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களின் பழைய சொத்துக்களின் ஏதேனும் ஒன்றை விற்க திட்டமிட்டிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள்: புதன்

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. வணிகர்கள் கடின உழைப்பின் பலனாக, வெளிநாட்டு நிறுவனங்களுடனான தொடர்பும், பெரிய லாபமும் கிடைக்கலாம். இந்த வாரம் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். திடீர் வேலைப்பளுவால் உடல் சோர்வடைந்தாலும், மனதளவில் தைரியமாக உழைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றத்தையோ அல்லது பதவி உயர்வையோ பெற்றிடலாம். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்களையே கொடுக்கும். வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். வார இறுதியில் திடீர் வருமான ஆதரவைப் பெற வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உடன்பிறந்தவர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்களின் முழு ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சவால்கள் நிறைந்த காலமாகவே இருக்க போகிறது. எதிர்பார்த்த பணம் கிடைக்காததால், பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் செல்வது நல்லது. இந்த காலகட்டத்தில் உங்கள் பணம் திருட போகலாம். கூடுதல் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. தொழிலதிபர்கள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தவிர, எந்த முக்கிய வணிக முடிவுகளையும் இந்த நேரத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையை முடிக்காமல், பிறகு பார்த்து கொள்ளலாம் என்று இருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் வரும் நாட்களில் உங்கள் மீதான அழுத்தம் கணிசமாக அதிகரிக்கக்கூடும். இது உங்கள் முன்னேற்றத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனான உறவில் மனகசப்பு ஏற்படலாம். உங்களுக்குள் மனஅழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தசைகள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கும்பம்

கும்பம்

கும்ப ராசிச்காரர்கள் இந்த வாரம் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டியது நேரமிது. இல்லையெனில், நீங்கள் ஏமாற்றப்படலாம். வேலை அல்லது வணிகம், எதுவாக இருந்தாலும் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கூடுதல் பணிகள் ஒதுக்கப்படலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. வணிகர்கள் சிறிய பணிகளை முடிக்க கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் உதவியால், உங்களின் எந்த பெரிய பிரச்சனையும் சுலபமாக தீர்க்கப்படும். இந்த காலக்கட்டத்தில் ஆரோக்கியத்தில் திடீர் சரிவு ஏற்படலாம். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இலக்கு சார்ந்த வேலைகளை செய்பவர்கள், நேரத்தை கவனத்தில் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும். அதிகப்படியான வேலைப்பளு உங்களை சோர்வடைய செய்யலாம். நேரமின்மையால் பல பிரச்சனைகளை அலுவலகத்தில் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழலில், சிறப்பான திட்டமிடல் தேவை. திட்டமிட்டு வேலை செய்தால் பிரச்சனைகளைத் தவிர்த்திடலாம். வணிகர்களுக்கு, தொழில் மேம்பாட்டிற்காக பல நல்ல வாய்ப்புகள் தேடி வரலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் வீட்டில் இந்த வாரம் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம். இந்த காலம் அன்புக்குரியவர்களுடன் மறக்க முடியாத காலமாக இருக்கும். பண விஷயத்தில் சற்று விலையுயர்ந்ததாகவே இருக்கும். இருப்பினும், நிதி நிலையில் எந்த பாதிப்பும் இருக்காம். யோசிக்காமல் செலவு செய்வதை மட்டும் தவிர்த்து கொள்ளுங்கள். இந்த வாரம் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இதனால், உங்கள் வேலை திட்டங்கள் பாதிக்கப்படலாம். எனவே, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நேரமிது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weekly Horoscope For 20 November 2022 To 26 November 2022 In Tamil

Check out the weekly horoscope for 20 november 2022 to 26 november 2022 in tamil for all zodiac signs. Read on.
Story first published: Sunday, November 20, 2022, 6:00 [IST]
Desktop Bottom Promotion