இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது தெரியுமா?

இது டிசம்பர் மாதத்தின் முதல் வாரம் இந்த வாரம் என்ன சிறப்பு ஏழு நாட்களும் எந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும் என்று இந்த வார ராசி பலன்களை படிச்சு தெரிஞ்சுக்கங்க.

இந்த வாரம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரம். இந்த ஆண்டின் கடைசி மாதத்தின் முதல் வாரத்தில் வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்படி இருக்கும், பணவரவு வருமா? எந்த நாள் நமக்கு நல்லா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை வார ராசிபலன் மூலம் சொல்லியிருக்கிறோம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் ஆஃபீஸ் வேலை விஷயத்துல உங்களுக்கு சாதகமா இல்லை. ஆஃபீஸ்லயும் பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. உங்க சீனியர் கூட பேசும் போது கொஞ்சம் கவனமா பேசுறது நல்லது. தேவையில்லாத விஷயங்களை வேலை நேரத்துல பேசி டையத்தை வீணடிக்காதீங்க. அதே மாதிரி கூட வேலை பாக்குறவங்க கிட்டயும் சண்டை போடாதீங்க. உங்க மனசுல இருக்குற ஃபீலிங்சை உங்க ஒய்ஃப் கிட்ட சொல்றதுக்கு இது தான் சரியான தருணம். குடும்பத்துல இருக்குற பொம்பளைங்களும் உங்களுக்கு ஆறுதலாவே இருப்பாங்க. இந்த வாரம் உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலாவே இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் நார்மலா இருக்கும். சின்னதா ஒரு டூர் போய்ட்டு வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நாள் : சனிக்கிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வார தொடக்கத்துலயே சின்னதா சிக்கல் எழ வாய்ப்பிருக்குது. உங்களுக்கு வேண்டாதவங்க தப்பான தகவலை கொடுத்து உங்களை குழப்புறதுக்கும் சான்ஸ் இருக்கு. அவங்ககிட்ட இருந்து விலகி உஷாரா இருக்குறது நல்லது. ஆஃபீஸ்லயும் சில சிக்கல் வர வாய்ப்பிருக்குது. ரொம்ப டென்ஷனா ஃபீல் பண்ணினா, உங்க சீனியர் கிட்ட கண்ஷல்ட் பண்றது நல்லது. இந்த வாரம் முக்கியமான வேலைங்களை முடிக்க முயற்சி பண்ணுவீங்க. கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சா நீங்க ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு. உங்க ஒய்ஃப் கூடவும் ரொம்பவே அந்நியோன்யமா இருப்பீங்க. கஷ்ட காலத்துலயும் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவாங்க. ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நாள் : புதன் கிழமை

மிதுனம்

மிதுனம்

போன வாரத்தை விட, இந்த வாரம் உங்களுக்கு நல்லா இருக்கும். ஆஃபீஸ்ல உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுப்பாங்க. சரியா ப்ளான் பண்ணி புத்திசாலித்தனமா வேலை செஞ்சீங்கன்னா, ப்ளான் பண்ணின மாதிரியே அந்த வேலையை சரியான நேரத்துல முடிச்சி, உங்க சீனியர் கிட்டயும் பாராட்டு வாங்குவீங்க. அவங்களும் உங்களை சப்போர்ட் பண்ணுவாரு. பெர்சனல் லைஃப்ல சில சிக்கல் வர வாய்ப்பிருக்கு. வீட்டுல உங்க ஒய்ஃப் கிட்ட உங்க மனசுல இருக்குறதை அப்பிடியே கொட்டிடுங்க. அப்பதான் அவங்களைப் பத்தி நீங்க நினைக்கிறதை புரிஞ்சிக்குவாங்க. இந்த வாரம் ஒய்ஃப் கூட சின்னதா ஒரு பிக்னிக் போய்ட்டு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நல்லா இருக்கும். லாங் டெர்ம் இண்வெஸ்ட்மெண்ட் பண்றதுக்கும் இந்த வாரம் அருமையா இருக்கும். சுகர் பேஷண்ட் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க பாருங்க. ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நாள் : ஞாயிற்றுக்கிழமை

கடகம்

கடகம்

சமீப காலமா ரொம்ப சோர்வா இருக்குற மாதிரி ஃபீல் பண்றிங்க. செய்யுற வேலையிலும் தோல்வி தான் கிடைக்குதுங்கிறதனாலயே டல்லா ஃபீல் பண்ணுவீங்க. அதனால வேலையிலும், பிசினஸிலும் ரொம்ப அக்கறை காட்டவேண்டிய நேரம். உங்க டேலண்ட்டை எல்லாருக்கும் நிரூபிக்க பாருங்க. அப்ப தான் அவங்க உங்களை நம்புவாங்க. ரொம்பவே டென்ஷனா இருந்தா யோகா, தியானம் பண்றது நல்லது. குடும்பத்துலயும் அமைதியும் சந்தோஷமும் நிலைச்சி நிக்கும். உங்களோட பெர்சனல் மேட்டர்ல வெளியாளுங்களை தலையிட விடாதீங்க. ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நல்லா இருக்கும். ஏற்கனவே பண்ணியிருக்குற இண்வெஸ்ட்ல இருந்த லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. நீங்க ஒண்டிக்கட்டையா இருந்தா, கல்யாணத்துக்கு அவசரப்படாதீங்க. இன்னும் கொஞ்ச காலம் வெய்ட் பண்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நாள் : செவ்வாய்க் கிழமை

 சிம்மம்

சிம்மம்

கல்யாணம் ஆன தம்பதிங்களுக்கு இந்த வாரம் நல்லா இருக்கும். உங்க ஒய்ஃப் உங்ககிட்ட இருந்து ஏதோ ஒரு கிஃப்ட் எதிர்பாக்குறாங்க போல. லவ் பண்றவங்க லவ்வரை மீட் பண்ணி பேசி பழைய நினைவுங்களை அசை போடுவீங்க. உங்களோட டேலண்ட்டை பாத்து மத்தவங்க பாராட்டுவாங்க. ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நார்மலா இருக்கும். உங்க ஃபைனான்ஸ் பிளானும் சக்ஸஸ்ஃபுல்லா முடியும். அதனால உங்க சந்தோஷம் ரெட்டிப்பாகிடும். அதே சமயம் உங்களோட ஐடியாவை மத்தவங்க குறை சொன்னாலும் கூட, உங்களோட திறமையை மெச்சுவாங்க. ஆஃபீஸ்லயும் இந்த வாரம் வேலைங்க நார்மலாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நாள் : சனிக்கிழமை

கன்னி

கன்னி

ரொம்ப நாளைக்கு பின்னாடி, வேலை வசதியாவும் பாதுகாப்பாவும் இருக்குற மாதிரி ஃபீல் பண்ணுவீங்க. அதனால உங்க தன்னம்பிக்கையும் டேலண்ட்டும் இன்னும் ஜாஸ்தியாகிடும். உங்களோட டேலண்ட்டும், எதையும் ஈஸியா புரிஞ்சிக்கிற பக்குவமும், கஷ்டமான சூழ்நிலையை ஈஸியா மாத்திடும். உங்க சீனியரும் உங்களை பாராட்டுவார். பிசினஸ் பண்றவங்க பிசினஸை டெவலப் பண்றதுக்காக முக்கியமான ஒரு விஐபியை மீட் பண்றதுக்கு சான்ஸ் இருக்கு. உங்க குடும்ப உறுப்புனர்களோட தேவையை நிறைவேத்துறது முக்கியம். அவங்களுக்கு உங்களோட அரவணைப்பும் ஆதரவும் தேவைப்படுது. பண விஷயத்தைப் பொருத்த வரைக்கும், செலவழிக்கிறதை விட சேமிச்சி வைக்கிறது தான் உங்களோட திறமை. அதனால பணத்தை சம்பாதிக்க பல சான்ஸஸ் இருக்கு. சில முக்கியமான வேலையை முடிக்க முடியாம சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கு. கவனமா இருக்க பாருங்க. படிக்கிற பசங்களுக்கு இந்த வாரம் அமோகமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நாள் : செவ்வாய் கிழமை

துலாம்

துலாம்

ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் இன்னும் ஸ்ட்ராங்காகிடும். புதுசா ஏதாவது வேலையை ஆரம்பிச்சீங்கன்னா, லாபம் அப்பிடியே ரெட்டிப்பாகிடும். யாருக்காவது கடன் கொடுத்திருந்தீங்கன்னா, அது இந்த வாரம் திரும்ப வந்திடும். நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளிலும் நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஜெயிக்க வாய்ப்பிருக்குது. வயசுல மூத்தவங்களும் உங்களை பாராட்டி என்கரேஜ் பண்ணுவாங்க. ஆஃபீஸ்லயும் உங்க வேலையை எல்லோரும் பாராட்டுவாங்க. பாலிடிக்ஸ்ல இருக்குறவங்களுக்கு இந்த வாரம் நிலைமை சாதகமா இருக்கும். அதே சமயத்துல தனிப்பட்ட லைஃப்லயும் சின்னதா ஒரு சேன்ஜ் இருக்கலாம். புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பிருக்குது. ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நாள் : திங்கள் கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் முழுக்க ரொம்ப பரபரப்பா இருப்பீங்க. லவ் பண்றவரா இருந்தா லவ்வர் கூட எங்காவது பிக்னிக் போய்ட்டு வர்றதுக்கு டைம் கிடைக்கும். சிலருக்கு தான தர்மம் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். பிசினஸ் பண்றவங்க, ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, புது ஆர்டர் கிடைக்கவும் வாய்ப்பிருக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க, வேலையை பெண்டிங்க வைக்கிறதுனால, சீனியர் கடுப்பாக வாய்ப்பிருக்குது. அதனால எந்த வேலையையும் உடனுக்குடனே முடிக்க பாருங்க. உங்க ஒய்ஃப் உங்களுக்கு நல்லா சப்போர்ட் பண்றதுனால, ரெண்டு பேரோட ரிலேஷன்சிப் ரொம்பவே அந்நியோன்யமா இருக்கும். ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் நல்லாவே இருக்கும். அவசரப்பட்டு எதையும் பண்றது நல்லதில்லை. உங்களோட கேரக்டரை கொஞ்சம் மாத்திக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நாள் : வெள்ளிக் கிழமை

தனுசு

தனுசு

இந்த வாரம் பணத்தைப் பத்தின கவலை உங்களை ரொம்பவே வாட்டி வதைக்கலாம். எதையும் முயற்சி எடுத்து செஞ்சா ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கும். அவசரத் தேவையை பூர்த்தி செய்யுறதுக்கு வெளியில கடன் வாங்க வேண்டியதிருக்கும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனை மேம்படுத்த நினைச்சீங்கன்னா, ஏதாச்சும் ஒரு முதலீட்டுல பணத்தை போடுறது நல்லது. அது நிச்சயம் உங்க எதிர்காலத்துக்கு பிரயோஜனமா இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு கவலைங்க வரிசை கட்டி நிக்கும். இருந்தாலும், கவலைப்படுறதுனால பிரச்சனை எதுவும் தீராதுங்கிறதை புரிஞ்சிக்கோங்க. அதனால தைரியமா இருந்து எதையும் ஃபேஸ் பண்றதுக்கு தயாரா இருக்க பாருங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க பாக்கி வைக்காமா எல்லா வேலையையும் முடிப்பீங்க. ரொம்பவே டல்லா ஃபீல் பண்ணுனீங்கன்னா ஒய்ஃபை கூட்டிட்டு எங்கயாச்சும் வெளியில போய்ட்டு வர்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீல வானம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நாள் : வியாழக் கிழமை

மகரம்

மகரம்

ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் அமோகமா இருக்கும். ஏதாவது இண்வெஸ்ட்மென்ட்ல பணத்தை போடுறதுக்கு முன்னாடி, யோசிச்சி ப்ளான் பண்ணிட்டு அதுக்கப்புறமா இண்வெஸ்ட் பண்றது நல்லது. உங்க ஒய்ஃபோட மனசை புரிஞ்சிக்க முடியாம திண்டாடிட்டு இருக்கீங்க. அதனால கொஞ்சம் அவங்க கூட உக்காந்து மனசு விட்டு பேசுறது நல்லது. வீட்டு பிரச்சனையை தீக்குறதுக்கு பெரியவங்க கூட உக்காந்து பேசுனீங்கன்னா பிரச்சனை தீருறதுக்கு வாய்ப்பிருக்கு. இந்த வாரம் பொது நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக்க வாய்ப்பிருக்கும். வீட்டுலயும் சரி, ஆஃபீஸ்லயும் சரி ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமா எடுத்து வைக்கிறது நல்லது. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் நல்ல வாரம் தான். லவ்வர் கூட பேசும் போது கவனமா பேசுறது நல்லது. இந்த வார கடைசியில வெளியூர் பிரயாணம் பண்றதுக்கும் சான்ஸ் கிடைக்கும். இதனால ரொம்பவே டையர்டு ஆகிடுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நாள் : திங்கள் கிழமை

கும்பம்

கும்பம்

கல்யாணமான தம்பதிங்களுக்கு இந்த வாரம் அவ்வளவு நல்லதா இல்லை. ஆனாலும் உங்க குழந்தைங்க படிப்புல சுட்டியா இருக்குறது உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும். வேலை விசயத்துல சில சிக்கலும் வர வாய்ப்பிருக்குது. பிசினஸ் பண்றவங்களுக்கு சில சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்குது. பிசினஸ் தவிர்த்து தனிப்பட்ட விஷயத்துலயும் கொஞ்சம் கவனம் செலுத்துறது நல்லது. உங்க பகையாளிங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா நடந்துக்கிறது நல்லது. எப்படா உங்களை கவுக்குறதுன்னு காத்துக்கிட்டு இருக்காங்க. அதனால கவனமா இருக்க பாருங்க. புதுசா ஃபைனான்ஸியல் ப்ளான் பண்ணுவீங்க. ஹெல்த் கண்டிஷன் வார தொடக்கத்துல மந்தமா இருந்தாலும் போகப்போக சரியாகிடும். அதனால எதை செஞ்சாலும் உற்சாகமா செய்வீங்க. உங்க ஃபைனான்ஸ் பொசிஷனை இம்ப்ரூவ் பண்றதுக்கு எடுக்குற முயற்சி நல்லவிதமா முடியுறதுக்கு வாய்ப்பிருக்கும். இந்த வாரம் ஒரு விலை உயர்ந்த பொருள் ஒண்ணு உங்க கைக்கு வந்து சேர வாய்ப்பிருக்கும். வெளியூர் பிரயாணத்தை தவிர்க்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நாள் : ஞாயிற்றுக் கிழமை

மீனம்

மீனம்

இந்த வாரம் பெர்சனல் லைஃப்லயும் பிசினஸிலும் பல நல்ல விஷயங்கள் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. வீட்டுல சுப நிகழ்வு நடக்க ஏற்பாடு செய்யலாம். அதனால வீட்டுல சந்தோஷம் பொங்கும். குடும்பத்துலயும் எல்லோருமே சந்தோஷமா அன்பா இருப்பாங்க. லவ் பண்றவங்களுக்குள்ள இருந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துடும். ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் அபாரமா இருக்கும், எக்ஸ்ட்ரா வருமானத்துக்கும் வழி கிடைக்கும். அதனால, கொஞ்சம் சேமிக்கிறதுக்கும் வழி கிடைக்கும். ஆஃபீஸ்ல இந்த வாரம் ரொம்ப ஏத்த இறக்கமாவே இருக்கும். பிசினஸ் பண்றவங்க, புதுசா ஒண்ணுல இண்வெஸ்ட் பண்ணலாம். கல்யாணம் ஆன தம்பதிங்களுக்கு மனசு விட்டு பேச இன்னிக்கு டைம் கிடைக்கும். ஒய்ஃபோட அன்புல அப்படியே மெர்சலாகிடுவீங்க. குழந்தைங்க சைடுல இருந்தும் சந்தோஷமான செய்தி வர்றதுக்கு வாய்ப்பிருக்கும். கல்யாணம் ஆகாதவங்களுக்கு நல்ல வரண் கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. உங்க ஹெல்த் கண்டிஷனம் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நாள் : வியாழக் கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, December 1, 2019, 9:31 [IST]
Desktop Bottom Promotion