Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா?
குருவின் ஆசியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு வருமாம்...
2020ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மூன்றாவது வாரத்தில் வரப்போகிற இந்த ஏழு நாட்களும் எப்படி இருக்கும் பணவருமானம் வருமா? வேலையில் ஏதாவது சிக்கல் வருமா?
2020ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மூன்றாவது வாரத்தில் வரப்போகிற இந்த ஏழு நாட்களும் எப்படி இருக்கும் பணவருமானம் வருமா? வேலையில் ஏதாவது சிக்கல் வருமா? வீட்டில் சண்டை சச்சரவு வருமா என்றெல்லாம் எதிர்பார்க்கிறீர்களா? உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் இந்த வார ராசி பலன்களின் மூலம் விடை கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், இந்த வார ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், போகப் போக நிலைமை சரியாகிடும். சாப்பாட்டு விஷயத்துல வாயை கட்டுப்படுத்தி, உங்க ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. தேவையில்லாம மத்தவங்க விஷயத்துல தலையிடாதீங்க. வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சாதகமாவே இருக்கும். ப்ரமோஷன் கிடைக்கவும் வாய்ப்பிருக்குது. பிசினஸ் பண்றவங்களுக்கும் இந்த வாரம் நல்ல விதமா இருக்க வாய்ப்பிருக்கு. பழைய விஷயம் ஒண்ணு இந்த வாரக் கடைசியில உங்க குடும்பத்துக்கு தொந்தரவா அமைய வாய்ப்பிருக்குது, கவனமா இருக்குறது நல்லது. உங்க ஒய்ஃப் உங்களுக்கு சப்போர்ட்டிவா இருப்பாங்க. பணப்புழக்கமும் இந்த வாராம் நார்மலாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

ரிஷபம்
இந்த வாரம் உங்க குடும்பத்துல கொஞ்சம் சிக்கல் உண்டாகி உங்க பொறுமையை சோதிக்கலாம். அமைதியா இருந்தா, சிக்கல் பெருசாகாம தப்பிக்கலாம். இருந்தாலும், உங்க ஒய்ஃப் கூட நிம்மதியா பொழுதை கழிக்கலாம். கூடவே ஒய்ஃபோட ஹெல்த் கண்டிஷன்லயும் கொங்சம் அக்கறை காட்டுறது நல்லது. லவ் பண்றவங்க ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து போவீங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கும் நல்ல விதமா இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு திருப்பு முனையா இருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். கை காசை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

மிதுனம்
மிதுன ராசிக் காரங்களுக்கு இந்த வாரம் முழுக்க யோகம் தான். குடும்பத்தோட, ஃப்ரண்ட்ஸுங்க கூட நல்ல என்ஜாய் பண்ணுவீங்க. ஒய்ஃப் கூடவும் ரிலேஷன்சிப் நல்ல விதமா நகரும். கூடவே உங்களோட பொறுப்புங்களும் கூடத் தான் செய்யும். லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்குது. நீங்க சொல்றது தான் சரின்னு உங்க லவ்வர் கூட மல்லுக்கு நிக்காதீங்க. பண விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது. சமீப காலமா செலவுங்களும் கூடிட்டே போறது உங்களுக்கு கவலையை கொடுக்கலாம். இந்த வாரம் ஹெல்த் கண்டிஷன் நார்மலாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை

கடகம்
இந்த வாரம் லவ் பண்றவங்களுக்கு நல்லதொரு ஆரம்பமா இருக்க வாய்ப்பிருக்குது. இருந்தாலும் பொறுமையா இருக்குறது நல்லது. வீட்டுல ஒரு சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகலாம். வேலை பாக்குறவங்களுக்கு ஆஃபீஸ்ல கூட வேலை பாக்குறவங்க உங்களைப் பத்தி மேலிடத்துல போட்டுக்கொடுக்கலாம். அதனால கவனமா இருக்குறது நல்லது. பிசினஸ் பண்றவங்க பார்ட்னர் கிட்ட இருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். இந்த வாரம் பிசினஸ் நல்ல விதமா டெவலப் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. பண விஷயத்தை பொருத்தவரை ரொம்ப நாளாவே எதிர்பார்த்த வருமானத்தை கூட்டுறதுக்கான வழி பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

சிம்மம்
இந்த வாரம் வயிறு சம்பந்தமா பிரச்சனை ஏற்படலாம். அதனால ரொம்ப எளிமையான உணவுங்களை சாப்பிடுறது நல்லது. படிக்குற பசங்க எக்ஸாம் எழுதுறதுல தடுமாற வாய்ப்பிருக்குது. கவனமா இருந்து எக்ஸாம் எழுதினா தேறலாம். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மந்தமாவே நகரும். உங்க சீனியர் கிட்ட பக்குவமா நடந்துகிட்டா, ரொம்ப நல்லது. பணப்புழக்கம் இந்த வாரம் நல்லா இருக்கும். அத்தியாவசியமான செலவுக்கு மட்டுமே பணத்தை எடுப்பீங்க. ஃபேமிலி மெம்பர்ஸும் உங்க கூட நல்லவிதமா பேசி பழகுவாங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கன்னி
பிசினஸ் பண்றவங்க, பார்ட்னர் கிட்ட ரொம்ப கவனமா, பொறுமையா நடந்துக்குறது நல்லது. இல்லேன்னா பிசினஸும் பாதிக்கும். அமைதியா இருந்தா எதிர்காலத்துக்கு நல்லது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் நல்லவிதமா இருக்கும் கூட வேலை பாக்குறவங்களும், சீனியரும் உங்களுக்கு சப்போர்ட்டிவா இருப்பாங்க. படிக்குற பசங்களுக்கு இந்த வாரம் நல்ல விதமா இருக்கும். பணப்புழக்கமும் நல்லா இருக்கும். அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு ஃபிரண்ஸுங்க கூட டூர் போயிட்டு வர்றது நல்லது. ஃபேமிலி லைஃபும் நல்ல விதமா நகரும். உங்க ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் சாதாரணமாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நாள் : வியாழக்கிழமை

துலாம்
துலா ராசிக்காரங்களே, சிலபேர் இந்த வாரம் லவ்வுல விழுறதுக்கு வாய்ப்பிருக்குது. இருந்தாலும் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுறாதீங்க. ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சிகிட்டு அப்புறம் உங்க லவ்வை சொல்றது நல்லது. இந்த வாரம் உங்க குடும்பத்துலயும் கொஞ்சம் நிம்மதி இல்லாத சூழ்நிலையே இருக்கு. அதனால் உங்க பேச்சை கொஞசம் கண்ட்ரோல் பண்றது நல்லது. பணப்புழக்கமும் இந்த வாரம் அவ்வளவு திருப்திகரமா இருக்காது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் நிலைமை சாதகமாவே இருக்கும். பிசினஸ் பண்றவங்க அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. ஹெல்த் கண்டிஷனும் நல்லாவே இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

விருச்சிகம்
நீங்க எடுக்குற முயற்சிங்க எல்லாமே தோல்வியுல முடியுறதுனால ரொம்பவே அப்செட்டா இருப்பீங்க. இருந்தாலும் உங்க முயற்சியை கைவிட மாட்டீங்க. இந்த நேரத்துல உங்க பேச்சை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்குறது நல்லது. இல்லேன்னா அது உங்க வேலைக்கே உலை வச்சிடும்கிறது மனசுல வச்சிக்கிட்டு நடந்துக்கோங்க. ரொம்ப டிப்ரஸனா ஃபீல் பண்ணுனீங்கன்னா உங்க நெருக்கமான ஃப்ரண்ஸுங்க கிட்ட மனசு விட்டு பேசறது நல்லது. ஃபேமிலி லைஃபும் நல்லவிதமா நகரும். பணப் புழக்கமும் நல்ல விதமா இருக்கும். கடன் வாங்கி இருந்தா அதை இந்த வாரம் பைசல் பண்ணுவீங்க. ஹெல்த் கண்டிஷனம் இந்த வாரம் நார்மலா இல்லை.
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 09
அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்று கிழமை

தனுசு
தனுசு ராசிக்காரங்க இந்த வாரம் எதை பண்றதா இருந்தாலும் நல்லா யோசனை பண்ணி செய்யுறது நல்லது. கோவப்பட்டா எல்லாமே கெட்டுடும். கவனமா இருங்க. பிசினஸ் பண்றவங்க இந்த வாரம் முக்கிய முடிவு எடுக்க வேண்டியதிருக்கும். இருந்தாலும் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். ஃபேமிலி லைஃப்ல உங்க கருத்தை அவங்க மேல திணிக்காதீங்க. அவங்க வார்த்தைக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்க. பணப்புழக்கம் இந்த வாரம் அமோகமா இருக்கும். எதிர்பாக்காத பணவரவும் வர்றதுக்கு வாய்ப்பிருக்குது.
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நாள் : சனிக் கிழமை

மகரம்
இந்த வாரம் குடும்பத்துல மகிழ்ச்சி தாண்டவமாடும். உங்களோட உழைப்புக்கு ஏத்த வெகுமதி இந்த வாரம் கிடைக்க வாய்ப்பிருக்குது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க சக பெண் ஊழியருங்க கிட்ட எச்சரிக்கையா கவனமா நடந்துக்குறது நல்லது. இல்லேன்னா விஷயம் விபரீதமா போயிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு லாபகரமா முடியும். மேரேஸ் லைஃப்ல சந்தோஷம் நிலைக்கணும்னா உங்க நடவடிக்கைய மாத்திக்குறது நல்லது. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் ரொம்ப மகிழ்ச்சிகரமா இருக்கும். இந்த வாரம் பணப்புழக்கம் கொஞ்சம் மந்தமாதான் இருக்கும். அதனால யோசனை பண்ணி செலவு பண்றது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண்: 07
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

கும்பம்
கும்ப ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் ஆரம்பத்துல நல்லவிதமா இருந்தாலும், வார மத்தியில கொஞ்சம் சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்குது. வேலை விஷயத்துலயும் கொஞ்சம் பதட்டமாவே இருப்பீங்க. கூட வேலை பாக்குறவங்க கூட வாக்குவாதம் வர்றதுக்கும் வாய்ப்பிருக்குது. அதனால கவனமா இருக்க பாருங்க. பிசினஸ் பண்றவங்க இந்த வாரம் ட்ராவல் பண்றதுக்கு வாய்ப்பிருக்கும். அதனால கொஞ்சம் பிஸியாவி இருப்பீங்க. எதிர்காலத்தை மனசுல வச்சிக்கிட்டு சில முக்கிய முடிவுங்களை எடுக்கலாம். வேலையில்லாதவங்க தேவையில்லாத விஷயத்துல தலையிடுறதை அவாய்ட் பண்ணிடுங்க. ஃபேமிலி மெம்பர்ஸுங்க கூட பேசி பழகுறதுக்கு டைம் கிடைக்கும். பண விஷயத்துல எதிர்பாக்காம பணம் கிடைக்க வாய்ப்பிருக்கும். உங்க ஹெல்த் கண்டிஷன் இந்த வாரம் ஏத்த இறக்கமாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

மீனம்
இந்த வாரம் உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் ஒருத்தரோட ஹெல்த் கண்டிஷன்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு நல்ல விதமா இருக்கும். வேலையில கவனமா இருப்பீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் ரொம்ப சாதகமாவே இருக்கும். பிசினஸ் பெருகி, லாபம் கொட்டும். வீட்டுல இருக்குறவங்ககிட்ட வாக்குவாதம் பண்ணி இருந்தீங்கன்னா மன்னிப்பு கேட்டு சமாதானமா போயிடறது நல்லது. உங்க ஒய்ஃபும் உங்களுக்கு நல்ல சப்போர்ட்டிவா இருப்பாங்க. லவ் பண்றவங்க இந்த வாரம் கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது. ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கு. கவனமா இருந்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண்: 08
அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை



Click it and Unblock the Notifications











