Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
வார ராசிபலன் (12 February to 18 February 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் ஆசை நிறைவேறப் போகுது...
அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 பிப்ரவரி 12 முதல் 2023 பிப்ரவரி 18 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் அதிக செலவுகளை சந்திப்பீர்கள். பழைய கடனை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: புதன்

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். அலுவலகத்தில் உங்களின் நிலை வலுவாக இருக்கும். வணிகர்களுக்கு வாரத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். பெரிய நிதி ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சித்தால் அதில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் அலுவலக சூழல் நன்றாக இருக்காது. பணிச்சுமை அதிகரிக்கும். உங்களின் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்களுக்கு இக்காலம் சவாலாக இருக்கும். எளிதில் முடிக்கக்கூடிய வேலைகளிலும் தடைகள் ஏற்படும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்யுங்கள். சிறுநீரக பிரச்சனை இருந்தால், இக்காலத்தில் அப்பிரச்சனை தீவிரமாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு சாதகமாக இருக்கும். முன்னேற்றத்தின் பாதை திறக்கப்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையால் ஈர்க்கப்படுவார்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். கடன் வாங்கியிருந்தால், இந்த வாரத்தில் கட்ட வேண்டியதை தவறாமல் கட்டிவிடுங்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நீண்ட நாட்களாக சொத்து சம்பந்தமான எந்த விஷயமும் உங்களை தொந்தரவு செய்து கொண்டிருந்தால், இந்த வாரத்தில் அதிலிருந்து விடுபடுவீர்கள். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். கடன் பரிவர்த்தனைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம். தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சுமாராக இருக்கும். இந்த வாரத்தில் சில புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் சமூக வட்டம் அதிகரிக்கும். நிதி விஷயங்களில் அவசரம் வேண்டாம். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பணத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். பணப்பிரச்சனையால் உங்களின் சி வேலைகள் பாதியில் நின்று போகலாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். இந்த வாரத்தில் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வீர்கள். வணிகர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அதிக செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதிக செலவுகள் உங்கள் கவலைகளை அதிகரிக்கலாம். இருப்பினும் நல்ல பண பலன்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில், உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் எந்த வேலையையும் மற்றவர்களுக்கு விட்டுவிடாதீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் மன அழுத்தமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டு வசதிகள் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்க ஆசை இருந்தால், அந்த ஆசை நிறைவேறும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதே சமயம் வேலை செய்பவர்களும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் நீண்ட கால ஆசை நிறைவேறவுள்ளது. பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். இந்த வாரத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்கள் வாரத்தின் தொடக்கத்தில் நல்ல லாபத்தைக் காணலாம். ஆனால் அதன் பிறகு கடினமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்கள் வேலையில் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவின்மையால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த ஒரு நல்ல வாய்ப்பைப் பெறலாம். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிப் பக்கத்தை வலுப்படுத்த விரும்பினால், உங்கள் செலவுகளின் பட்டியலைக் குறைக்க வேண்டும். உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் முயற்சிக்க வேண்டும். இந்த வாரம் உங்கள் துணையுடன் மிகவும் ரொமான்டிக் ஆக இருக்கும். உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் உங்களின் செயல்பாடு பாராட்டுக்குரியதாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்லைனில் வணிகம் செய்தால், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணைடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனை ஏதும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்



Click it and Unblock the Notifications