வார ராசிபலன் (05 March to 11 March 2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...

அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

Weekly Horoscope For 05 March 2023 To 11 March 2023 In Tamil

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 மார்ச் 05 முதல் 2023 மார்ச் 11 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் செலவுகள் குறையும் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் நம்பிக்கை மற்றும் தைரியத்தால் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் சற்று பிஸியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் போக போக பணிச்சுமை குறையும். இந்த வாரத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் இழப்பை சந்திக்க நேரிடும். வணிகர்கள் குறுக்கு வழிகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறிது பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பட்ஜெட்டிற்கு ஏற்ப செலவு செய்யாவிட்டால், பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகள் மற்றும் பணிபுரிபவர்கள், தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். வணிகர்களுக்கு வாரத்தின் நடுப்பகுதியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: புதன்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எப்பேற்பட்ட சூழ்நிலையையும் புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். தொழிலதிபராக இருந்தால், உங்கள் நஷ்டத்தை ஈடுசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் பண விஷயத்தில் அதிர்ஷ்டமானதாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கடனை இந்த வாரத்தில் அடைப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு அதிகரிக்கும். வேலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் சற்று பிஸியாக இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 42

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் பண விஷயத்தில் நன்றாக இருக்கும். புதிய வருமானத்தை பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் கடின உழைப்பால் பெரிய வெற்றியைக் காண்பார்கள். வணிகர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் புதிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்காதீர்கள். அவசரப்பட்டு எடுக்கும் முடிவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் அதிக பொறுப்புக்களால் சற்று சோர்வாக இருக்கும். வணிகர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வங்கியில் கடன் வாங்க திட்டமிட்டால், தேவைக்கு அதிகமாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். வேலையுடன் உங்கள் குடும்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நிதி ரீதியாக இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! நீங்கள் தொழிலதிபராக இருந்தால், இந்த வாரத்தில் உங்கள் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்ல நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்கள் இந்த வாரத்தில் கடின உழைப்புடன் ஒரு புதிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பீர்கள் மற்றும் அதில் நல்ல பலனைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிடுவதைத் தவிர்க்கவும். கல்லீரல் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், இந்த வாரத்தில் உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். இந்த வாரத்தில் புனித யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் நன்றாக இருக்கும். தொழிலதிபர்கள் கடந்த காலத்தில் செய்த முதலீட்டின் பலனைப் பெறுவார்கள். வியாபாரத்தில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரியின் சகவாசம் கிடைக்கும். நீங்கள் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வார இறுதியில் நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். கடனில் இருந்து விரைவில் விடுபட, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த வாரத்தில் கடின உழைப்பின் பலன் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: புதன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, March 5, 2023, 6:00 [IST]
Desktop Bottom Promotion