வார ராசிபலன் (04.12.2022-10.12.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா நஷ்டத்தை சந்திக்கக்கூடும்..

இந்த வாரம், அதாவது டிசம்பர் 04, 2022 முதல் டிசம்பர் 10, 2022 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...

Weekly Horoscope For 04 December 2022 To 10 December 2022 In Tamil

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது டிசம்பர் 04, 2022 முதல் டிசம்பர் 10, 2022 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த வாரம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இது உங்கள் உறவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பண நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வெளியே சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று பிஸியாக இருப்பீர்கள். வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருகும். வேலையுடன், ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமான வாரமாக இருக்கும். பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். தாமதம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும். ஆரோக்கியமாக இருக்க உணவுப் பழக்கத்தை மாற்றுவதோடு, ஓய்விலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும். துணையுடனான உறவு வலுவாக இருக்கும். இந்த வாரம் திருமணம் முடிவாக வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் அது வேலையை பாதிக்கும். வணிகர்கள் எந்த பெரிய நிதி பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நாள்: புதன்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வருமானம் நன்றாக இருக்கும். அதே வேளையில் அதிகரிக்கும் செலவுகள் உங்கள் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். மார்க்கெட்டிங்கில் பணிபுரியும் நபர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தங்கம், வெள்ளி, சொத்துக்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்த்தபடி பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறுவார்கள். வியாபாரிகள் பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறவில்லை என ஏமாற்றமடையக்கூடும். இருப்பினும், அதற்கு கவலைப்படத் தேவையில்லை. வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சவாலாக இருக்கும். நிதி இழப்பும் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். மிகவும் மன அழுத்தத்தில் இருப்பீர்கள். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வேலை அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: மெரூன்

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! நீங்கள் மாணவராக இருந்தால் இந்த வாரம் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திடீரென்று பணம் சேரும். பரம்பரை தொழிலில் நீங்கள் இணைந்திருந்தால், நீங்கள் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். மறுபுறம், வேலை செய்பவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பாதகமான சூழ்நிலைகளிலும் தைரியமாக செயல்பட வேண்டும், இல்லையெனில் உங்கள் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வை சந்திப்பீர்கள். எனவே ஓய்வெடுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலதிபர்களுக்கு நன்றாக இருக்கும். நிதி பிரச்சனை தீரும். வேலைகள் தடையின்றி முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். நீங்கள் புதிய வேலை தேடிக்கொண்டிருந்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பரம்பரை தொழிலில் தொடர்புடையவராக இருந்தால், தந்தையின் அறிவுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் ஒரு புதிய நபரை சந்திப்பீர்கள். அந்த சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டால், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். பண நிலைமை நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.மொத்தத்தில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவ்வளவு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் ரொமான்டிக்கான வாரமாக இருக்கும். உங்களுக்கு பிடித்த பரிசை உங்கள் துணையிடமிருந்து பெறவும் வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். மற்றவர்களை கவர அதிக செலவு செய்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக திடீர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வணிகர்கள் லாபத்தைப் பெற கடினமாக போராட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு ஓரளவாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் கடுமையான குணம் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டம் உங்களுக்குத்தான் ஏற்படும். வணிகர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். கூட்டு முயற்சியில் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் அதில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வீட்டின் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். சண்டைகள் மற்றும் தொந்தரவுகள் உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கை கால் வலியால் அவதிப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானநீலம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion