Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 24 நாட்கள் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்க போறாங்க...
சுக்கிரன், 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி குரு ஆளும் மீன ராசிக்கு சென்றார். இந்த மீன ராசியில் சுக்கிரன் மார்ச் 12 ஆம் தேதி வரை இருப்பார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். அதில் சிலருக்கு நல்லதாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அந்த வகையில் ஆடம்பரம், செல்வம், அழகு, காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி குரு ஆளும் மீன ராசிக்கு சென்றார். இந்த மீன ராசியில் சுக்கிரன் மார்ச் 12 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுவும் ஏற்கனவே மீன ராசியில் குரு பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரனும் மீனத்திற்கு சென்று குருவுடன் பயணிக்கிறார். இப்போது மீன ராசிக்கு சென்ற சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். திட்டமிட்டு செலவு செய்யாவிட்டால், நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். காதல் விஷயத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மனம்விட்டு பேசினால் பிரச்சனைகள் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக இக்கால கட்டத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால், உங்கள் பேச்சாலேயே பிரச்சனைகள் வரலாம். இக்காலத்தில் உங்களுக்கு எதிராக பல சதி செய்யக்கூடும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் உங்கள் ஆசைகளை நிறைவேற்ற முயற்சித்தால் அதில் தோல்வி தான் காண்பீர்கள். நீங்கள் நினைத்த காரியம் நடக்காவிட்டால், உடனே மனம் தளர்ந்துவிடாதீர்கள். முக்கியமாக எந்த ஒரு புதிய விஷயத்தையும் முயற்சிக்காதீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் சுக்கிரன் நல்ல பலனைகளை வாரி வழங்கினாலும், குருவுடன் சுக்கிரன் இணைவதால், கெடுபலன்கள் தான் அதிகம் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், பண பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
