Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சுக்கிர பெயர்ச்சியால் மார்ச் மாசம் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கப் போகுது...
சுக்கிரன் கும்ப ராசிக்கு மார்ச் மாதத்தின் இறுதியில் செல்லவிருப்பதால், ஒரு மாத காலம் சுக்கிரனால் 4 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
ஜோதிடத்தில், குருவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது சுப மற்றும் பெரிய கிரகமாக கருதப்படுகிறது. இத்தகைய சுக்கிரன் அழகு, காதல் ஆகியவற்றின் கிரகமாக கூறப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, உறவுகள், திருமணம் மற்றும் சிற்றின்பங்களுக்கு சுக்கிரனின் நிலை முக்கிய காரணியாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் தான் ஒரு உறவின் தரத்தை தீர்மானிக்கிறது.

எந்த கிரகம் ராசியை மாற்றினாலும், அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கை. சுக்கிரன் 2022 பிப்ரவரி 27 ஆம் தேதி தனது நட்பு ராசியான மகர ராசிக்கு இடம் மாறியது. நட்பு ராசிக்குள் சென்றதால் அனைத்து ராசிகளிலும் சற்று நல்ல தாக்கம் இருக்கும். இருப்பினும் 4 ராசிகள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுகிறார்கள். இந்த சுக்கிரன் கும்ப ராசிக்கு மார்ச் மாதத்தின் இறுதியில் செல்லவிருப்பதால், ஒரு மாத காலம் சுக்கிரனால் 4 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார், எம்மாதிரியான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், தொழில் வாழ்க்கையில் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வம், சொத்துக்கள் குவிய அதிக வாய்ப்புள்ளது. அன்பானவர்களுடன் நீண்ட நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை இம்மாதத்தில் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகளை சந்திக்கலாம். நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சி செய்து வந்தால், ஆரோக்கியத்தை சிறப்பாக பேணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இது மனதிற்கு நல்ல அமைதியைத் தரும். நிதி ரீதியாக, இக்காலம் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல முதலீடுகளை செய்ய முடியும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். இம்மாதம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

தனுசு
தனுசு ராசியின் 6 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 2 ஆவது வீட்டில் இருப்பதால், நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சற்று உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசியின் 3 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 11 ஆவது வீடான லாப வீட்டில் இருப்பதால், பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். இம்மாதத்தில் காதல் மலரும். ஏழை மக்களுக்கு உதவுவதற்கு பணத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
