Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
மேஷம் செல்லும் சுக்கிரனால் மார்ச் 12 முதல் இந்த 3 ராசிக்காரங்களோட அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
சுக்கிரன், 2023 மார்ச் 12 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சுக்கிரனின் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் நல்ல பணத்தைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள்.
வேத ஜோதிடத்தின் படி கிரங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும் போது, அந்த ராசி மாற்றத்தின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும். இதனால் ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், குறிப்பிட்ட கிரக பெயர்ச்சிக்கு பின் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள். ஆனால் கிரக பெயர்ச்சிகளால் கிடைக்கும் பலன்களானது, ஒரு ராசியில் அந்த கிரகம் இருக்கும் நிலையைப் பொறுத்தது. அதில் சுப நிலையில் இருந்தால் நற்பலன்களும், அசுப நிலையில் இருந்தால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அந்த வகையில் ஆடம்பரம், காதல், அழகு, வியாபாரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன், 2023 மார்ச் 12 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சுக்கிரனின் பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் நல்ல பணத்தைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது மேஷம் செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சுக்கிரன் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கூட்டு தொழில் தொடங்க இது சிறந்த காலம். மேலும் இக்காலத்தில் திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்க நல்ல வரன் கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது வருமான வீடு என்பதால், இக்காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும் புதிய வருமானத்தைப் பெறுவதற்கான வழிகளையும் உருவாக்குவீர்கள். திருமணமானவர்கள் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, இக்காலம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் இருப்பவர்கள், இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்தால், நல்ல லாபத்தைக் காணலாம்.

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவார்கள். மேலும் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் இக்காலகட்டத்தில் பல வழிகளில் பணத்தை சம்பாதிப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வுடன், சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இக்காலத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
