Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
Shukra Gochar March 2023: சுக்கிர பெயர்ச்சியால் மார்ச் 12 முதல் இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப் போகுது...
மார்ச் 12 ஆம் தேதி மேஷம் செல்லும் சுக்கிரன், அந்த ராசியில் ஏப்ரல் 02 ஆம் தேதி வரை இருந்து, பின் ரிஷப ராசிக்கு செல்வார். இப்போது மேஷம் செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
Venus Transit in Aries on 12 March 2023: நவகிரகங்களில் ஆரம்பரம், அழகு, காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் தற்போது மீன ராசியில் குரு பகவானுடன் இணைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2023 மார்ச் 12 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதனால் சுக்கிர பெயர்ச்சிக்கு பின், மேஷத்தில் சுக்கிரன் ராகுவுடன் இணைந்து பயணிப்பார்.

பொதுவாக சுக்கிர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். மார்ச் 12 ஆம் தேதி மேஷம் செல்லும் சுக்கிரன், அந்த ராசியில் ஏப்ரல் 02 ஆம் தேதி வரை இருந்து, பின் ரிஷப ராசிக்கு செல்வார். இப்போது மேஷம் செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களுக்கும் மார்ச் 12 முதல் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படும். இக்காலத்தில் உங்களின் பேச்சானது முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். உங்களிடம் யாரேனும் தங்கள் காதலை முன்மொழிய வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சில தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறுநீர் தொற்று இருப்பவர்கள், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்கள் பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக ரிஷப ராசி பெண்கள் இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சிக்கு பின் நல்ல பண பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் சில முக்கியமான பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இக்காலத்தில் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் காதலை முன்மொழிய இது சிறந்த காலம்ம். ஷேர் மார்கெட்டில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் அரசியலில் இருப்பவர்கள் இந்த காலத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சொந்தமாக வேலையை தொடங்க நினைப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இக்காலத்தில் இருப்பார்கள். திருமணமாகாதவராக இருந்தால், இக்காலத்தில் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவரின் மேல் காதலில் விழ வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் உருவாகும் மற்றும் இந்த பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பெண்கள் தங்கள் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.

கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு நிதி பரிவர்த்தனைகளையும் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நோய்களால் அவதிப்பட நேரிடும். இக்காலத்தில் உங்களுக்கு பாலியல் ஆசை அளவுக்கு அதிகமாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் துணையுடன் நல்ல இன்பத்தை அனுபவிப்பீர்கள். இக்காலத்தில் பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அசிங்கப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். உங்களின் தடைபட்ட வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். எதிரிகள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். சர்க்கரை நோய் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். காதல் தொடர்பான விஷயங்கள் வெற்றி பெறும். வியாபாரத்தில் ஒரு பெண்ணின் உதவியால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணமானவர்கள் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக காதல் நிறைந்திருக்கும். குழந்தைகளுடனான உறவு அருமையாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வீட்டின் வசதிக்காக நிறைய பணத்தை செலவிடுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தாயாரிடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நல்ல மரியாதையைப் பெறுவீர்கள். வேலை காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்புக்கள் உள்ளன.

கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். எழுத்து தொடர்பான வேலையில் இருப்பவர்களால் இக்காலத்தில் சிறப்பாக செயல்பட முடியும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பண விஷயங்கள் உங்களை தொந்தரவு செய்யும். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், கவனமாக இருங்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











