Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சுக்கிரனால் ஏப்ரல் மாதத்தில் இந்த ராசிக்காரங்க நிறைய சவால்களை சந்திக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிரன் கும்ப ராசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இருந்து, பின் குரு ஆளும் மீன ராசிக்கு செல்வார். சுக்கிரன் கும்ப ராசியில் இருப்பதால் சிலருக்கு நல்ல காலமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சவாலான காலமாக இருக்கும்.
நவகிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் சுக்கிரன், 2022 மார்ச் 31 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறினார். இந்த கும்ப ராசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இருந்து, பின் குரு ஆளும் மீன ராசிக்கு செல்வார். சுக்கிரன் கும்ப ராசியில் இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சவாலான காலமாக இருக்கும்.

இப்போது சுக்கிரன் கும்ப ராசியில் இருப்பதால், மீனம் செல்லும் வரை எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் மற்றும் சவால்கள் நிறைந்த காலமாக இருக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடகம்
சுக்கிரன் கடக ராசியின் 8 ஆவது வீடடில் இருப்பதால், இந்த ராசியைச் சேர்ந்த சிலரது வாழ்க்கை திடீரென மாறலாம். ஏன் சிலருக்கு வாழ்க்கை பிடிக்காமலே போகலாம். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் இடமாற்றம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில் வயிறு தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் சிலரை தேவையற்ற பயம் ஆட்டிப்படைக்கும். அதோடு நிதி பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே இக்காலத்தில் சரியாக திட்டமிட்டு செலவுகளை செய்யுங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், பணியிடத்தில் எதிர் பாலினத்தவரிடம் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏதேனும் நாள்பட்ட நோய் இருந்தால், அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திக்கக்கூடும். திருமணமானவர்கள் இக்காலத்தில் மாமியாரின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற படாத பாடுபட வேண்டியிருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் பேசும் போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சிலருக்கு தொண்டை சம்பந்தமான கோளாறுகள் வரலாம். தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். அதே வேளையில் உங்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். இக்காலத்தில் உங்கள் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே அவர்களிடம் பேசும்போது உங்கள் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.

சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான தீர்வுகள்:
* சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, லட்சுமி தேவியை வழிபட வேண்டும். இது மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் பொருள் செல்வத்தை தரும்.
* சுக்கிரனின் தோஷங்கள் விலகுவதற்கு வைர ஆபரணங்களை அணியலாம். இல்லாவிட்டால், தங்கம் அல்லது வெள்ளியால் ஒரு மோதிரத்தை உருவாக்கி, அதை மோதிர விரலில் அணியவும். இருப்பினும், அதை அணிவதற்கு முன் ஜோதிடரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
* ஏழு முகத்தைக் கொண்ட ருத்ராட்சம் அணிவதால் சுக்கிரனால் ஏற்படும் தடைகளும் நீங்கும்.
* சுக்கிரனின் தோஷத்திற்கு மற்றொரு பரிகாரம் லட்சுமி தேவியை வணங்கி லட்சுமி ஸ்துதி அல்லது துர்கா சாலிசாவை உச்சரிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications