Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க
கும்பம் செல்லும் சுக்கிரனால் ஜனவரி 22 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
2023 ஜனவரி 22 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் அழகு, காதல், ஆடம்பரம், புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதபடுபவர் தான் சுக்கிரன். வேத ஜோதிடத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது சுக்கிரன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2023 ஜனவரி 22 ஆம் தேதி மாலை 3.34 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.

கும்பம் சனி பகவானின் ராசி. சனியும், சுக்கிரனும் நண்பர்கள். எனவே இந்த சுக்கிர பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. குறிப்பாக அந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகும், தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். இப்போது 2023 ஜனவரி 22 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சமூகத்தில் நல்ல செல்வாக்குமிக்கவர்களுடன் தொடர்பு கிடைக்கும். இதன் காரணமாக தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்ய இது சிறந்த காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையைப் பெற வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் எழுத்து தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கப் போகிறது. இக்காலத்தில் இவர்களின் எழுத்து திறன் மேம்படும். குடும்பத்தினருடன் பயணம் செய்ய வாய்ப்புக்கள் அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் பெற்றோரின் முழு ஆசியும் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அந்த பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைப்போரின் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் மேம்படும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
