Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
சனி-சுக்கிர சேர்க்கையால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சனை இருக்குமாம்..
சனி-சுக்கிர சேர்க்கையானது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருக்கும். இதனால் பிப்ரவரி 15 வரை சில ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும்.
வேத ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். சில சமயங்களில் கிரக மாற்றங்களின் போது, கிரக சேர்க்கைகளும் நிகழும். அந்த வகையில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்கு சென்றார். பொதுவாக சனியின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சுக்கிரனும் கும்ப ராசிக்கு சென்று, சனியுடன் இணைந்து பயணிக்கிறார்.

ஜோதிடத்தில் சுக்கிரனும், சனியும் நண்பர்களாக கருதப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த சனி-சுக்கிர சேர்க்கையால் பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த சனி-சுக்கிர சேர்க்கையானது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருக்கும். இதனால் பிப்ரவரி 15 வரை சில ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது சனி-சுக்கிர சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் அதிக பண பிரச்சனையை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் இந்த சனி-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் கடக ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பயணத்தின் போது தங்களின் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். சட்டத்திற்கு புறம்பான எந்த வேலையையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள். கடன் வாங்கியிருந்தால், அதை இக்காலத்தில் திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். இல்லையெனில் பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இருப்பினும் சிலருக்கு சுக்கிரனின் அருளால் திடீர் பணம் கிடைக்கலாம்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் குடும்ப வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பிடிக்காத விஷயங்களை செய்யாதீர்கள். இல்லாவிட்டால், அதுவே பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி, விரிசலை உண்டாக்கிவிடும். இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் சற்று கலவையான பலன்கள் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் அலட்சியமாக இருந்தால், பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். வயிறு தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பேச்சே உங்களுக்கு பிரச்சனையை இழுத்துவிடும். இக்காலத்தில் தவறான தொடர்பு உங்களுக்கு தீங்கை விளைவிக்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். முக்கியமாக இக்காலத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications