Latest Updates
-
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது!
உங்க பெட்ரூம்ல கண்ணாடி இருந்தா உடனடியா அத எடுத்துடுங்க... இல்லனா உங்களுக்குத்தான் பிரச்சினை...!
நமது வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க பல வழிகள் உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின் படி நம் வீட்டின் நேர்மறை ஆற்றலை சில பொருட்கள் மூலமாகவும், மாற்றங்கள் மூலமாகவும் அதிகரிக்கலாம்.
பல பாரம்பரிய நம்பிக்கைகளின் படி ஒவ்வொரு வீட்டிற்கும் அதற்கென ஒரு வகை ஆற்றல் உள்ளது. ஒருவர் ஒரு வீட்டில் வாழத் தொடங்கும்போது அவர்கள் அந்த வீட்டின் ஆற்றல் மட்டத்திற்கு கீழ் வந்து விடுகிறார்கள். இந்த ஆற்றல் அவர்களின் மீது நல்ல பாதிப்புகளையோ அல்லது தீய பாதிப்புகளையோ ஏற்படுத்துகிறது. எனவே நமது வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

நமது வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க பல வழிகள் உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின் படி நம் வீட்டின் நேர்மறை ஆற்றலை சில பொருட்கள் மூலமாகவும், மாற்றங்கள் மூலமாகவும் அதிகரிக்கலாம். இதனால் நமது வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இந்த பதிவில் நம் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

முதல் வழி
நமது வீட்டின் வாசலில் பெயர் பலகைகளை மாட்டி வைப்பது நமது அடையாளமாக இருப்பது மட்டுமின்றி நம் வீட்டின் ஆற்றலை அதிகரிக்கும் ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழி என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு வைக்கும்போது உங்களை வாய்ப்புகள் தேடிவரும், வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

இரண்டாவது வழி
நெருப்பு எதிர்மறை ஆற்றலை அழிக்கும் ஒரு மிகச்சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. எனவே தினமும் காலையும், மாலையும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பது உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவும்.

மூன்றாவது வழி
உங்கள் சமையலறையை உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்திருப்பது நல்லது. ஒருவேளை அது முடியாவிட்டால் அடுப்பை உங்கள் சமையலறையின் தென்கிழக்கு திசையில் வைக்க முயலுங்கள். இது உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும்.

நான்காவது வழி
எலுமிச்சை ஒரு சிறந்த நிவாரணியாகும். இது உங்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் வீட்டின் ஆற்றலுக்கும்தான். எனவே ஒரு டம்ளரில் தண்ணீரை நிரப்பி அதில் ஒரு எலுமிச்சை பழத்தை போட்டு வைக்கவும். ஒவ்வொரு சனிக்கிழமையும் இதனை மாற்றவும். இது உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டும்.

ஐந்தாவது வழி
மருந்துகள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருட்களாகும். எனவே அவற்றை உங்கள் வீட்டின் சமையலறையில் ஒருபோதும் வைக்காதீர்கள். இது உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பை அதிகரிக்கும்.

ஆறாவது வழி
படுக்கையறையிலிருந்து அனைத்து கண்ணாடிகளையும் வெளியேற்றவும். ஒருவேளை அது முடியாவிட்டால் அவற்றை உங்கள் படுக்கையை விட்டு தள்ளியோ அல்லது தூங்கும்போது உங்கள் முகம் அதில் தெரியாதபடியோ தள்ளி வைக்கவும். வாஸ்துவின் படி தூங்கும்போது உங்கள் முகம் கண்ணாடியில் தெரிவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

ஏழாவது வழி
உங்கள் வீட்டின் மூலைகள் மற்றும் இருளான இடங்கள்தான் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை உற்பத்தி செய்யும் இடங்களாகும். எனவே அந்த இடங்களில் புனித நீரை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். வாரமொரு முறை அதனை மாற்றவும்.

எட்டாவது வழி
மணிகளில் இருந்து எழும் ஓசைகள் உங்கள் ஆற்றல் வடிவங்களை உடைத்து நேர்மறை ஆற்றலை உங்கள் வீட்டிற்குள் வரவேற்கும். எனவே உங்கள் வீட்டின் வாசலில் சில வெண்கல மணிகளை கட்டித் தொங்கவிடுவது நல்லது.

ஒன்பதாவது வழி
உங்கள் வீட்டின் அனைத்து மூளைகளிலும் ஒரு கப்பில் உப்பைப் போட்டு வைக்கவும். உப்பிற்கு எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் திறன் உள்ளது. எனவே இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலின் அளவை குறைக்கும்.

பத்தாவது வழி
உங்கள் வீட்டில் வைக்கும் பொருட்கள் அதன் ஆற்றல் மட்டத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் அழும் பெண்ணின் படம், போர் காட்சிகள், கோபமான ஓவியங்கள், ஆந்தை, கழுகு போன்றவை எதிர்மறை ஆற்றலின் சின்னங்களாகும். எனவே இதுபோன்ற படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிவிடவும்.



Click it and Unblock the Notifications
