Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்க வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கணுமா? அப்ப இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..
வாஸ்து சாஸ்திரத்தின் படி வியாபாரம் செய்யும் இடம் இருந்தால், நல்ல வருமானமும், முன்னேற்றமும் ஏற்படும். மேலும் வியாபாரம் செய்யும் இடத்தில் ஒருசில தவறுகளை செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் வியாபாரத்தில் பெரிய லாபத்தைக் காணலாம்.
நாம் அனைவருமே வாழ்வில் முன்னேற்றத்தை காண விரும்புவோம். அதுவும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்த பல முயற்சிகளை எடுப்பார்கள். ஆனால் சில நேரங்களில் வியாபாரம் செய்யும் இடத்தில் உள்ள வாஸ்து குறைபாட்டினால் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியாமல் போகும். நாம் குடியிருக்கும் வீடு மட்டுமின்றி, வியாபாரம் செய்யும் இடமும் வாஸ்துப்படி இருந்தால் தான் நற்பலன்களைப் பெற முடியும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி வியாபாரம் செய்யும் இடம் இருந்தால், நல்ல வருமானமும், முன்னேற்றமும் ஏற்படும். மேலும் வியாபாரம் செய்யும் இடத்தில் ஒருசில தவறுகளை செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் வியாபாரத்தில் பெரிய லாபத்தைக் காண முடியும். இப்போது வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெற உதவும் சில வாஸ்து குறிப்புகளைக் காண்போம்.

கடைக்கான வாஸ்து டிப்ஸ்...
நீங்கள் கடை வைத்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் கடையில் நல்ல வியாபாரம் நடக்க வேண்டுமானால் பின்வரும் வாஸ்து டிப்ஸ்களைப் பின்பற்றுங்கள்.
* கடையின் ஓனர் எப்போதும் வடகிழக்கு, வடமேற்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி அமர்ந்திருக்கக்கூடாது. தென்மேற்கு, கிழக்கு அல்லது வடக்கு திசைகளை நோக்கியே கடையின் ஓனர் அமர்ந்திருக்க வேண்டும்.
* கிழக்கு திசை நோக்கிய கடையில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்
* மேற்கு திசை நோக்கிய கடையில் மெதுவான வளர்ச்சி மற்றும் தடைகள் அதிகம் ஏற்படும்.
* வடக்கு திசை நோக்கிய கடையில் செல்வம் பெருகும்.
* தெற்கு திசை நோக்கிய கடையில் இழப்பும், டென்சனும் தான் அதிகரிக்கும்.
* கடைகளில் படிகட்டுகள் வடமேற்கு திசையில் இருக்கக்கூடாது.
* கடையில் விற்பதற்கு வைத்துள்ள பொருட்களானது மேற்கு, தெற்கு, வடமேற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் தான் வைத்திருக்க வேண்டும்.

அலுவலகத்திற்கான வாஸ்து டிப்ஸ்...
* அலுவலகமானது வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருப்பதே நல்லது.
* அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு முன் வேறு எந்த கதவு அல்லது கழிப்பறையும் இருக்கக்கூடாது.
* அலுவலகத்தில் கழிவறை இருக்க சிறந்த திசை தெற்கு, தென்மேற்கு, வடக்கு அல்லது கிழக்கு. மைய பகுதியில் எக்காரணம் கொண்டும் கழிவறை இருக்கக்கூடாது.
* இயக்குனர், மேலாளர்கள் போன்றவர்கள் தென்மேற்கு, தெற்கு அல்லது மேற்கு அடிப்படையில் உட்கார வேண்டும்.
* அலுவலக ஊழியர்கள் வடமேற்கு திசையில் அமர வேண்டும்.

ரெஸ்டாரண்ட்டிற்கான வாஸ்து டிப்ஸ்...
* டெஸ்டாரண்ட் வைத்திருந்தால், டெஸ்டாரண்ட்டின் நுழைவு கதவு கவர்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம்.
* வரவேற்பு மேஜையானது நுழைவு வாயிலுக்கு இடது பக்கத்தில் இருக்க வேண்டும். கேஷ் கவுண்டரானது வலது பக்கத்தில் இருக்க வேண்டும். அதுவும் படக்கு அல்லது கிழக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்.
* சமையலறையானது தென் கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.
* பார் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்.
* ஸ்டோர் அறையை தென்மேற்கு திசையில் வைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
