Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
வரலட்சுமி விரதத்தின் பூஜைக்கான செயல்முறை மற்றும் அதன் சடங்குகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
வரலட்சுமி விரதம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விழாவை மகாலட்சுமி விரதம் என்றும் அழைக்கிறார்கள்.
வரலட்சுமி விரதம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விழாவை மகாலட்சுமி விரதம் என்றும் அழைக்கிறார்கள். இதற்காக பெண்கள் அனைவரும் முதல் நாளே வீட்டைச் சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு, அம்மனை வீட்டிற்கு அழைத்திருப்பார்கள்.சுமங்கலிப் பெண்களுக்காக இந்த பூஜையானது நடத்தப்படுகிறது. அதாவது மகாலட்சுமியை நினைவுகூறும் வகையில் திருமணம் ஆன பெண்கள் கொண்டாடும் பண்டிகையே வரலட்சுமி விரதமாகும். 'வர' என்ற வார்த்தைக்கு வரம் என்று பொருளாகும். எனவே தான், வரலட்சுமியானவர் வரம் தரும் கடவுளாக கருதப்படுகிறார்.

இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குவது அஷ்டலட்சுமியான 8 லட்சுமிகள் அதாவது பூமி, செல்வம், கற்றல், காதல், புகழ், அமைதி, இன்பம், மற்றும் வலிமை போன்றவற்றை வணங்குவதற்குச் சமம். மேலும் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காகவும், கணவரின் வாழ்க்கைக்காகவும், குழந்தைகளைப் பெறுவதற்கும் வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இது பௌர்ணமி தினத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை கொண்டாப்படுகிறது.

வரலாறு
சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கி வந்தாள். அப்போது ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி சித்திரநேமிக்கு குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி தனது தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தாள். மனம் இறங்கிய பார்வதி தேவி வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் சாபவிமோசனம் நீங்கும் என அருள்புரிந்தார். எனவே சித்திரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.

அதிகாலை குளியல்
வரலட்சுமி பூஜை அன்று கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று ஒரு கூற்றுண்டு. அப்படி முடியாதவர்கள், அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தம் என்பபடும் வேளையில் குளித்துவிட்டு பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்
திருமணமான பெண்கள் பூஜை முடிக்கும் வரை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ரங்கோலி வரைவதற்கு அரிசி மாவு தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு பெரிய தாம்பூலம் அல்லது பெரிய தட்டு மற்றும் சில வாழை இலைகள், ஒரு குடம் அல்லது கலசம் அது வெள்ளி, வெண்கலம் அல்லது செம்பு எது உங்களிடம் உள்ளதோ அதைப் பயன்படுத்தலாம். பின்பு ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமம், மஞ்சள் தூள், கற்பூரம், கிராம்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பால், உலர் பழங்கள், எள்ளு, கொழுக்கட்டை, இனிப்பு, மேலும் கலசம் நிரப்பச் சிறிது மா இலைகள் அதன் மேல் வைக்க ஒரு தேங்காய், மஞ்சள் பூசப்பட்ட அரிசிகள், தாமரை மலர், தெய்வத்திற்கு அணிய ஆடைகள், நகைகள், மாலைகள், மஞ்சள் தூள் பூசப்பட்ட ஒரு புனித நூல் இவற்றையெல்லாம் தயார் செய்து கொள்ளுங்கள்.

பூஜைக்கு முன்
முதலில் அனைத்து பூஜை பாத்திரங்களையும் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். கலசம், விளக்குகளை நன்றாக கழுவி சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து அழகு படுத்துங்கள். கலசத்தில் நூல்களை சுற்றி வையுங்கள். மேலும் பயன்பாட்டிற்கு தேவையான எண்ணெயை ஊற்றி வையுங்கள். கொழுக்கட்டைக்கு தேவையானவற்றையும் தயார் செய்து கொள்ளலாம். வீட்டின் எல்லா வாசலிலும் மஞ்சள் கோடுகளை இட்டு அழகு படுத்துங்கள்.

பூஜையை தொடங்குதல்
பூஜையை தொடங்கும் போது விநாயகரை வழிபட்டு தொடங்குவது நல்லது. விநாயகரே அனைத்திற்கும் முதல் கடவுள். அதன் பின்னர் லட்சுமி தேவியைப் பற்றிய ஸ்லோகங்கள் பாட வேண்டும். ஆரத்தி எடுக்கப்பட்டு, புளியோதரை, கொழுக்கட்டை மற்றும் இனிப்புகள் போன்றவை லட்சுமி தேவிக்கு படைத்து, பின்னர் தேவியை வழிபட்டு கட்டப்படும் மஞ்சள் கயிற்றை சில பெண்கள் தங்களுடைய கைகளில் அல்லது கழுத்துகளில் கட்டிக் கொள்வார்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து வரும் பெண்களுக்கு வெற்றிலை-பாக்கு, குங்குமம், மஞ்சள், மஞ்சள் கயிறு, பழம் ஆகியவற்றைக் கொடுத்து, மாலையில் ஆரத்திக்கு வருமாறு கேட்டுக் கொள்வார்கள்.

பூஜை நிறைவு செய்தல்
கலசத்தில் உள்ள நீரை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். எதையாவது செய்ய தவறிவிட்டால் ஒன்றும் தப்பு இல்லை. மற்ற செயல்களைச் செய்யும் போது மன நிறைவுடன் முழு பக்தியுடன் செய்யுங்கள். சிலரால் இந்த நடைமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை என்றால் வீட்டில் விளக்கு ஏற்றி மகாலட்சுமி துதி பாடி மிக எளிமையான முறையில் பூஜை செய்யுங்கள். எளிய பிரார்த்தனை கூட லட்சுமி தேவியின் அருளை உங்களுக்குப் பெற்றுத்தரும்.



Click it and Unblock the Notifications