Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
தனது மரணத்தை முன்கூட்டியே கனவில் பார்த்த அமெரிக்க ஜனாதிபதி...தீர்க்கதரிச கனவு என்றால் என்ன தெரியுமா?
நமக்கு வரும் ஒவ்வொரு கனவுக்குள்ளும் ஒரு செய்தி மறைந்துள்ளது. கனவுகளில் தீர்க்கதரிச கனவுகள் என்று சிலவற்றைக் கூறுவார்கள்.
நமக்கு வரும் ஒவ்வொரு கனவுக்குள்ளும் ஒரு செய்தி மறைந்துள்ளது. கனவுகளில் தீர்க்கதரிச கனவுகள் என்று சிலவற்றைக் கூறுவார்கள். இந்த கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதை குறித்து நமக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கும்.

நமது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய கனவுகள் பெரும்பாலும் நமக்கு வருவதில்லை. நமக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அதேசமயம் வித்தியாசமான சூழ்நிலைகளில் இருக்கும் கனவுகள்தான் பெரும்பாலும் வரும். இந்த கனவுகளுக்குள் இருக்கும் செய்தியை புரிந்து கொள்வதே உங்கள் வாழ்க்கையை எளிதாக்க உதவும்.

டைட்டானிக் மூழ்கியது
1912-ல் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது கப்பல் மூழ்குவது பற்றி முன்கூட்டியே கனவு கண்டதாக நூற்றுக்கணக்கான மக்கள் கூறினர். ஆச்சரியமளிக்கும் வகையில் அதில் 19 பேர் கப்பல் மூழ்கிய சரியான தேதியை முன்கூட்டியே குறித்து வைத்திருந்தனர். மனிதர்களின் ஆழ்மனதின் சக்தியை மறந்து விடக்கூடாது. அந்த காலக்கட்டத்தில் டைட்டானிக்தான் உலகின் மிகப்பெரிய கப்பலாக இருந்தது, அது மூழ்குவதற்கு முன்பு அனைத்து நாளிதழ்களிலும் அதுதான் தலைப்பு செய்தியாக இருந்தது. ஊடகங்கள் அதனை மூழ்கடிக்க முடியாத கப்பல் என்று கூறியிருந்தது.

ஆபிரகாம் லிங்கனின் மரணம்
உங்களின் மரணம் குறித்து எத்தனை முறை நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்? இது யாருமே விரும்பாத ஒரு நிகழ்வாகும். ஆனால் ஆபிரஹாம் லிங்கன் கண்ட அவரது மரணம் குறித்த கனவு நிறைவேறியது. 1865-ல் அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன், ஆபிரஹாம் லிங்கன் வெள்ளை மாளிகையில் ஒரு இறுதி சடங்கு நடப்பதுக் குறித்து கனவு கண்டார். கனவில் அவர் யாருடைய இறுதி சடங்கு என்று ஒருவரிடம் கேட்டபோது அவர் அமெரிக்க ஜனாதிபதியின் இறுதி சடங்கு என்று கூறினாராம். இந்த கனவை ஆபிரஹாம் லிங்கன் தன் மனைவியிடம் கூறியிருந்தார்.

கனவு எதிர்காலத்தை கூறுவதை எப்படி அறிவது?
நாம் தூங்கும்போது, நம்முடைய ஆழ் மனது நம் உணர்வுள்ள மனதுடன் போராடத் தேவையில்லை. எனவே நமது ஆழ்மனது அதன் தடைகளை தகர்த்து நடக்கப்போவதை முன்கூட்டியே நமக்கு கூறுவது எளிது. ஆனால் அது நம்மிடம் கூற முயற்சிப்பதை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆழ்மனது கனவுகளில் வரும் சம்பவங்கள் மற்றும் பொருட்களின் மூலம் செய்திகளை கூறுகிறது. சிலசமயம் வரும் வித்தியாசமான கனவுகள் அதற்குள் ஆழமான செய்திகளை கொண்டிருக்கும்.

விபத்தைப் பற்றிய கனவு
விபத்தில் சிக்குவது போல கனவு காண்பது உங்கள் கனவில் எந்த சூழ்நிலையில் ஈடுபட்டிருந்தாலும் அதை நிஜ வாழ்க்கையில் தவிர்க்க வேண்டியதற்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். உங்கள் கனவு காரைப் பற்றியதாக இருந்தால் முடிந்தளவு நீங்கள் நடந்து செல்வதும், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் இடத்தில் எச்சரிக்கையாகவும் இருங்க வேண்டியது அவசியம். படகு அல்லது நீர் சம்பந்தப்பட்ட விபத்துகள் ஏற்பட்டால் அது காதல் விவகார சிக்கல்களைக் குறிக்கும்.

பொறி வைப்பது போல கனவு
நீங்கள் ஒரு பொறியை அமைப்பது போல கனவு காண்பது என்பது உங்கள் திட்டங்களை செயல்படுத்த நீங்கள் மோசமான தந்திரங்களை பயன்படுத்துவதன் அறிகுறியாகும். நீங்கள் ஒரு மிருகத்தை ஒரு வலையில் பிடித்தீர்கள் என்று கனவு காண்பது இலக்கு நிறைவு மற்றும் வெற்றியைக் குறிக்கிறது. வெறும் பொறியை பார்ப்பது தோல்வி மற்றும் நோயின் அறிகுறியாகும். நீங்கள் பொறியில் சிக்கிக்கொள்வது போல கனவு கண்டால் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படபோவதைக் குறிக்கும்.

குழந்தைகள் பற்றிய கனவு
கனவில் குழந்தைகள் அழுவது போல கனவு வருவது துரதிர்ஷ்டம் மற்றும் வரப்போகும் கஷ்டங்களை குறிக்கிறது. மகிழ்ச்சியான, சுத்தமான குழந்தை உங்கள் உறவு மேலும் நெருக்கத்தை அதிகரிக்கும் என்பதன் அர்த்தம். ஒரு பெண் தான் ஒரு குழந்தைக்கு பாலூட்டுவது போல கனவு கண்டால் அவர்களின் நெருங்கிய உறவு அவர்களுக்கு துரோகம் செய்யப்போகிறார்கள் என்பதன் அர்த்தம்.

நோய் பற்றிய கனவு
உங்கள் நோய் குணப்படுத்த முடியாதது போல கனவு வந்தால் நீங்கள் இப்போது இருக்கும் உறவில் இருந்து விலகப் போவதன் அர்த்தம் ஆகும். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சிதான் கிடைக்கும்.

துரதிர்ஷ்டம் இருப்பது போல கனவு காண்பது
ஒரு வினோதமான வெளிச்சத்தை கனவு காண்பது எதிர்காலத்தில் துன்பம், முறிவு மற்றும் சங்கடத்தை முன்னறிவிக்கிறது. ஒளிரும் முகத்தின் பார்வையைப் பெறுவது உங்கள் அவசர கவனம் தேவைப்படும் முடிக்கப்படாத பரிவர்த்தனைகளைக் குறிக்கிறது. நீங்கள் துரதிர்ஷ்டவசமானவர் என்று கனவு காண்பது உங்கள் எதிர்காலத்தில் சிறந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. மற்றொருவர் துரதிர்ஷ்டசாலியாக இருப்பது போல கனவு காண்பது அவரின் தோல்வியை குறிக்கிறது.

பாம்பை பற்றி கனவு காண்பது
உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிலுவையில் உள்ள சூழ்நிலையைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை பாம்புகள் பற்றிய கனவு கூறுகிறது. சிலசமயம் இதுபோன்ற கனவுகள் உங்களுக்கு பாலியல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதையும் குறிக்க வாய்ப்புள்ளது. பாம்பு உங்கள் வாழ்க்கையில் இதயமற்ற, கொடூரமான, துரோகியான ஒருவரைக் குறிக்க முடியும். நேர்மறையான பக்கத்தில் பாம்பு புத்திசாலித்தனம், மாற்றம் மற்றும் புரிதலை குறிக்கிறது.

மாயாஜால கனவுகள்
நீங்கள் கனவில் மாயாஜாலங்கள் செய்வது போல கனவு வருவது எதிர்காலத்தில் வரப்போகும் பல வெற்றிகளை குறிக்கிறது. இது கற்பனை மற்றும் இலக்குகளை வெற்றிகரமாக அடைவதையும் குறிக்கும். உங்கள் கனவில் மற்றவர்கள் மாயாஜாலம் செய்வதைப் பார்ப்பது உங்கள் முயற்சிகள் உங்களுக்கு மிகுந்த செழிப்பைக் கொடுக்கும் என்பதைக் குறிக்கிறது. சூனியம் பற்றி கனவு காண்பது உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் தவறான வழிகளை பயன்படுத்தியிருப்பதைக் குறிக்கிறது. இது தீங்கிழைக்கும் வஞ்சகத்தையும் குறிக்கும்.

முயல் பற்றிய கனவு
முயலை கனவில் பார்ப்பது நல்ல சகுனமாகும், ஏனெனில் இது அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. முயல் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கை இப்போது இருப்பதை விட சிறப்பாக மாறப்போவதை குறிக்கிறது. வெள்ளை முயலை கனவில் பார்ப்பது உங்கள் காதல் பொய்யானது என்றும் அதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் குறிக்கிறது. பல முயல்களை பார்ப்பது குழந்தை பிறக்கப் போவதற்கான அறிகுறியாகும்.



Click it and Unblock the Notifications











