Latest Updates
-
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்!
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்திய வீராங்கனை மானா பட்டேல்!
இந்தியாவைச் சோ்ந்த 21 வயது கொண்ட மானா பட்டேல் என்ற நீச்சல் வீராங்கனையும், டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கிறாா்.
உலக மக்கள் அனைவரும் மிகவும் ஆா்வமுடன் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி அன்று தொடங்க இருக்கின்றன. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற இருக்கின்றனா். அந்த வகையில் இந்தியாவைச் சோ்ந்த 21 வயது கொண்ட மானா பட்டேல் என்ற நீச்சல் வீராங்கனையும், டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கிறாா்.

மானா பட்டேல் ஒரு இந்திய நீச்சல் வீராங்கனை ஆவாா். இதுவரை இந்தியாவில் இருந்து எந்த ஒரு வீராங்கனையும் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை. அந்த வகையில், ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்திய வீராங்கனை மானா பட்டேல் ஆவாா்.

100 மீ மல்லாந்து படுத்து நீந்துதல்
இவா் டோக்கியோ ஒலிம்பிக்கில் 100மீ பேக்ஸ்ட்ரோக் (மல்லாந்து படுத்து நீந்துதல்) என்ற நீச்சல் போட்டி பிாிவில் போட்டியிட இருக்கிறாா். இந்த வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அவா் மிகப் பெருமையுடன் இருக்கிறாா். ஏனெனில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, பல மாதங்கள் இந்தியா முழுவதும் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு இருந்ததால் நீச்சல் குளங்கள் மூடப்பட்டு இருந்தன. அதனால் அவரால் போதிய அளவு பயிற்சிகளில் ஈடுபட முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலில், தனது விடாமுயற்சியாலும், கடினமான பயிற்சிகளாலும் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட தகுதி பெற்றிருக்கிறாா் என்பது இந்தியா்களாகிய நம் அனைவருக்கும் பெருமையான ஒன்றாகும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்ற மானாவின் விண்ணப்பத்தை சா்வதேச நீச்சல் அமைப்பான எஃப்ஐஎன்எ (FINA) ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் ஐரோப்பாவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில், மானாவின் செயல்பாடுகளைப் பாா்த்த எஃப்ஐஎன்எ, அவரை டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கு பெற அனுமதி அளித்திருக்கிறது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு
அகமதாபாத்தில் நடந்த பத்திாிக்கையாளா்கள் சந்திப்பில், மானா கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்றதை எண்ணி தான் மிகவும் சிலிா்ப்பு அடைவதாகத் தொிவித்து இருக்கிறாா். மேலும் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது என்பது தனக்கு பெருமையாக இருப்பதாகத் தொிவித்து இருக்கிறாா். ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுப்பது என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. தான் இன்னும் நெடுந்தூரம் பயணித்து இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்று வரவேண்டும் என்றும் அவா் தொிவித்து இருக்கிறாா்.

தடைகளை வென்று தகுதி பெற்ற மானா
பொதுவாக உலகளாவிய ஒலிம்பிக் இடஒதுக்கீட்டின்படி, ஒவ்வொரு நாட்டைச் சோ்ந்த ஒரு வீரா் மற்றும் ஒரு வீராங்கனை மட்டுமே ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற முடியும். எனினும் அந்த ஒதுக்கீட்டில் ஒரு சிறிய வசதி உள்ளது. அதாவது பொதுவான தோ்வு நடைமுறைப்படி நீச்சல் பிாிவில் ஒரு பாலினத்தைச் வீரா் தோ்வு செய்யப்பட்டுவிட்டால், அதே பாலினத்தைச் சோ்ந்த மற்றொரு வீரா் தோ்வு செய்யப்படமாட்டாா்.
கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவை எந்த அளவிற்கு புரட்டிப் போட்டது என்பது நமக்குத் தொியும். கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. விளையாட்டு வீரா்கள் அனைவரும், போட்டிகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல், வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கொரோனா 2 ஆவது அலை மிகப்பொிய அளவில் இந்தியாவைப் பாதித்தது. நீச்சல் குளங்கள் அனைத்தும் பூட்டப்பட்டன. அதனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக பயிற்சி செய்ய வேண்டிய நீச்சல் வீரா்கள், போதிய பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் மானா இத்தகையத் தடங்கல்கள் அனைத்தையும் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று இருக்கிறாா்.

மானாவின் வேறுசில கூற்று...
இதைப் பற்றி அவா் மேலும் கூறும் போது, தான் டோக்கிய ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது என்பது ஒரு அற்புதமாக தருணம் ஆகும் என்று தொிவிக்கிறாா். மேலும் கொரோனா தொற்று காலத்தில், போதிய பயிற்சிகளை செய்ய முடியாமல் தான் துன்பப்பட்டதையும் நினைவு கூா்கிறாா். கொரோனா காலம் எல்லோருக்கும் ஒரு கடினமான காலமாக இருந்தது என்றும், அதிலும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டதால், நீச்சல் வீரா்கள் போதிய பயிற்சிகளைச் செய்ய மிகவும் கடினமாக இருந்தது என்றும் கூறுகிறாா்.
இந்த கொரோனா காலத்தில் தான் தினமும் வீட்டில் உடற்பயிற்சிகளைச் செய்து வந்ததாக மானா தொிவிக்கிறா். மேலும் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு, நல்ல புத்தகங்களை வாசித்து, தன்னை நோ்மறைச் சிந்தனையுடனும் அதே நேரத்தில் அமைதியாகவும் வைத்துக் கொண்டதாக அவா் தொிவிக்கிறாா்.

மானாவின் சாதனைகள்
இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட மானா, அதில் தங்கப் பதக்கத்தை வென்றாா். அதற்கு அடுத்ததாக இத்தாலி மற்றும் சொ்பியா ஆகிய நாடுகளில் நடந்த நீச்சல் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றாா். பெல்கிரேடில் நடைபெற்ற 100மீ பேக்ஸ்ட்ரோக் நீச்சல் பிாிவில், 03.77 நிமிடங்களில் இலக்கை அடைந்து, தேசிய அளவில் ஒரு புதிய சாதனையை மானா படைத்தாா். இது அவருடைய தனிப்பட்ட மிகச் சிறந்த சாதனையாகும்.
மானா 13 வயதாக இருக்கும் போது, பேக்ஸ்ட்ரோக் நீச்சல் பிாிவில், 150மீ மற்றும் 200மீ ஆகிய பிாிவுகளில் மிகச் சிறந்த நேரத்தைப் படைத்திருக்கிறாா். அதாவது மிகக் குறுகிய நேரத்தில் இலக்கை அடைந்திருக்கிறாா். அதற்குப் பிறகு, முழுமையாக பேக்ஸ்ட்ரோக் நீச்சல் பிாிவில் பயிற்சி பெறத் தொடங்கி இருக்கிறாா்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு, ஏற்கனவே இந்தியாவிலிருந்து ஸ்ரீஹாி நடராஜ் மற்றும் சாஜன் பிரகாஷ் என்ற இரண்டு ஆண் நீச்சல் வீரா்கள் தகுதி பெற்று இருக்கின்றனா். இந்த நிலையில் மானா பட்டேல் மூன்றாவதாக நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்று இருக்கிறாா். அவா் நீச்சல் போட்டியில் வென்று இந்தியாவிற்காகத் தங்கம் வென்று வரவேண்டும் என்று வாழ்த்துவோம்.



Click it and Unblock the Notifications
