For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பயணங்கள் சாத்தியமாகும்...

இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 28 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

|

Today Rasi Palan - 28 March 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 28 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். வேலை விஷயமாக இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், தடைப்பட்ட உங்கள் வணிகத் திட்டத்தை மீண்டும் தொடங்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்ர்கள் இன்று அலுவலகத்தில் தங்கள் வேலையை மிகவும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் தலைமைத்துவத் திறனின் பலத்தால், உங்கள் முதலாளியிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமாக சாப்பிடுவதோடு, உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

திருமண வாழ்வில் சாதகமற்ற சூழ்நிலை காணப்படும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டை வரலாம். நீங்கள் இந்த விவகாரத்தை பெரிதாக்க அனுமதித்தால், உங்கள் வீட்டின் அமைதி கெடலாம். உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்கள் அதிகம் தலையிட விடாதீர்கள். உங்கள் நல்லது கெட்டது உங்களுக்கு தான் தெரியும். வேலையின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் தேவையற்ற செலவுகளைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும். அதிகப்படியான காரமான உணவைத் தவிர்க்கவும். இல்லையெனில், வயிறு தொடர்பான ஒரு நாள்பட்ட நோய் தோன்றலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

அலுவலகச் சூழல் நன்றாக இருக்கும். அனைத்து வேலைகளையும் மிக வேகமாக முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளும் உங்கள் கடின உழைப்பால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்கள் இன்று பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்களும் இன்று எதிர்பார்த்த பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. துணையுடன் தகராறு ஏற்படலாம். சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லையெனில், உங்களுக்குள் மனக்கசப்பு அதிகரிக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் திடீரென்று ஒரு பழைய நண்பரை சந்திக்கலாம். உங்களைப் பற்றிய பழைய நல்ல நினைவுகள் மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்படும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கடகம்

கடகம்

தொழிலதிபர்கள் பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடலாம். விரைவில் உங்கள் பணி வேகமெடுக்கும். சில புதிய வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான வாய்ப்பு தேடி வரும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும், உங்கள் எல்லா முடிவுகளையும் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்றைய நாள் பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். இன்று பணத்தைப் பற்றிய உங்கள் கவலை சற்று அதிகமாகும். உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை அமைதியாக வைத்திருக்க, வெளி பதற்றத்தை வீட்டில் கொண்டு வராமல் இருப்பது நல்லது. இன்று உங்கள் கை அல்லது கால்களில் காயம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் உறவில் இடைவெளியை ஏற்படுத்தும் எதையும் செய்யாதீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். வேலையுடன், அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும். பண விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆடம்பரத்திற்காக அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். இது தவிர, கடன் வாங்குவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வேலையைப் பற்றி பேசும்போது, ​அலுவலகத்தில் உங்கள் முதலாளியின் முன்பு சரியாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். கோபப்படுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று நீங்களே பிரச்சனையை உருவாக்கி கொள்வீர்கள். உங்களுக்கு முதுகு அல்லது இடுப்பு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். உட்கார்ந்த நிலையில் தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை

கன்னி

கன்னி

அலுவலகத்தில், ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படலாம். உங்களை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. எனவே நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று வணிகர்களுக்கு சில புதிய வழிகள் திறக்கப்படலாம். உங்கள் வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரிய வாடிக்கையாளர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இன்றைய நாள் நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் புதிய வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், விரைவில் உங்கள் திட்டம் நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். இருப்பினும், நீங்கள் அவர்களை மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைத்தால் நல்லது. உங்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனை இருந்தால், மிகவும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று வணிகர்களுக்கு ஒரு பெரிய சவால் ஏற்படலாம். இருப்பினும், இதுபோன்ற பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் அவற்றை உறுதியாக எதிர்கொள்ள வேண்டும். இன்று சிறிய முடிவை கூட புத்திசாலித்தனமாக எடுத்தால் நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அதிகம் கேலி பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், வீண் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற விஷயங்கள் அலுவலகத்தில் உங்கள் பெயரைக் கெடுக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் துணையுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்லலாம். உங்கள் உடல்நிலை சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

பழைய குடும்பக் கடன் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம். அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். இருப்பினும், உங்கள் பங்கில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும். விரைவில் நீங்கள் நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்களுடன் உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். உங்களுடன் அதிக நேரம் செலவிட உங்கள் வாழ்க்கைத் துணை விரும்பலாம். நீங்கள் அவர்களை ஏமாற்றாமல் இருப்பது நல்லது. உடல்நிலையில் சரிவுக்கான அறிகுறிகள் உள்ளன.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

தனுசு

தனுசு

இன்று உங்களின் விலைமதிப்பற்ற பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், அவை திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் இருக்கும். உங்கள் பெற்றோரின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் துணை மிகவும் நல்ல மனநிலையில் இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி முயற்சி வெற்றியடையலாம். பழைய சொத்தை விற்க நினைத்தால் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நீங்கள் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். அதே போல் உங்கள் மீது அதிக வேலை அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மகரம்

மகரம்

வியாபாரிகள் சில புதிய வேலைகளைத் தொடங்க விரும்பினால், உங்கள் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த நேரம் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நம்பிக்கையைப் பார்த்து, உங்கள் முதலாளி மிகவும் ஈர்க்கப்படலாம். விரைவில் நீங்களும் முன்னேறலாம். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்பத்தார் தரப்பால் துன்பம் வர வாய்ப்பு உண்டு. உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நன்கு யோசித்த பிறகு உங்கள் நிதி முடிவுகளை எடுத்தால், விரைவில் உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நீங்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று, வாகனத்தை ஓட்டும் போது போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒரு சிறிய கவனக்குறைவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வணிகர்கள் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் பயணத் திட்டங்களை மேற்கொண்டால், அது உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் முழு உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தங்கள் வேலையைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். சோம்பேறித்தனத்தை கைவிட்டு நேரத்தைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று உங்கள் துணை உங்களுக்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய முடியும். உங்களுக்கிடையில் காதல் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மீனம்

மீனம்

உங்களுக்கு குழந்தையின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடிப்பீர்கள். இது தவிர, சில காரணங்களால் உங்கள் சம்பளம் நீண்ட காலமாக தடைப்பட்டிருந்தால், இன்று நல்ல செய்தி வருவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வணிகர்கள் பண விஷயத்தில் எந்தவிதமான ஆபத்தான முடிவு எடுப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படும். நாளின் இரண்டாம் பகுதியில், திடீரென சிறிது தூரம் பயணிக்க நேரிடும். உங்கள் பயணம் வேலை தொடர்பானதாக இருக்கலாம். வேலையுடன், உங்கள் ஆரோக்கியமும் உங்களுக்கு சமமாக முக்கியமானது. நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், வாழ்க்கையில் முன்னேறும் உங்கள் கனவு முழுமையடையாமல் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 28 March 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 28 march 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Sunday, March 27, 2022, 19:41 [IST]
Desktop Bottom Promotion