For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 24ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 24 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 24ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீணட காலமாக தடைப்பட்ட உங்களின் வேலையை செய்து முடிப்பதற்காக கடினமாக உழைத்துக்கொண்டிருந்தால், இன்று நீங்கள் வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஒருவேளை இன்று முதலாளி உங்கள் கடின உழைப்பைக் கவனிக்கலாம். இன்று வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. பண விஷயத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். இன்று நீங்கள் கூர்மையான பொருட்களைக் கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகளை முதலாளி உங்களிடம் ஒப்படைத்திருந்தால், தவறுகள் செய்வதைத் தவிர்க்கவும். வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பண விஷயத்தில் இன்று நல்ல நாள் அல்ல. இன்று நீங்கள் பெரிய பண பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இடைவெளி அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், வேலைப்பளுவால் சோர்வாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் இலக்கு சார்ந்த வேலையைச் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்களின் அனைத்து வேலைகளும் மிக எளிதாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று குழந்தைகளுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நாளின் இரண்டாம் பகுதியில் திடீரென்று சில நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உடல் ஆரோக்கியமாக இருக்க, முதலில் மனரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:15 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, நீங்கள் வியாபாரம் செய்தால் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மற்றவர்களின் விஷயங்களில் அதிகம் தலையிடாதீர்கள். பண விஷயத்தில் இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் வருமானம் உயரக்கூடும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, பண விஷயங்களில் நீங்கள் அலட்சியமாக இருக்காதீர்கள். குறிப்பாக மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். சில கடினமான பணிகள் உங்களிடம் ஒப்படைக்கலாம். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் எதையும் ஏற்பாடு செய்யலாம். தாயின் உடல்நிலை குறித்த அக்கறை அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் தாயின் உடல்நிலையை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகச் சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் அலுவலகத்தில் ஒரு முக்கியமான திட்டத்திற்கு தலைமை தாங்கினால், உங்கள் செயல்திறனில் முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைவார். வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுப்பெறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: இரவு 11:45 மணி முதல் மாலை 4 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் நல்ல நாளாக இருக்காது. குறிப்பாக உத்தியோகஸ்தர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். இன்று நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஒரு வித்தியாசமான சூழ்நிலையில், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 8:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, வியாபாரிகள் இன்று ஆபத்தான முடிவு எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகம் புறம் பேசுவதைத் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் உங்களின் நிதி முயற்சிகள் வெற்றியடையும். உங்களுக்கு திடீர் பண வரவிற்கு வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியமாக இருக்க, இரவில் லேசான உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களின் பணிச்சுமை திடீரென அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கூட்டு வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். இன்று வீட்டின் சூழல் சரியாக இருக்காது. உங்கள் இளைய உடன்பிறப்புடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். முன்னோர் சொத்து தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பதன் மூலம் நீங்கள் விரைவில் நிதிப் பலனைப் பெறுவீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உத்தியோகஸ்தர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். வணிகர்கள் இன்று லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:15 மணி முதல் காலை 10 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் உணவு சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்தால், நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வியாபாரமும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக காத்திருந்தால், நீங்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். சரியான நேரம் வரும்போது நிச்சயம் முன்னேறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று முதுகு தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் குறையலாம். எனவே, கோபத்தில் எந்த வேலையையும் செய்யாதீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக செலவு செய்தால், உங்கள் எதிர்கால திட்டங்களில் தடைகள் ஏற்படலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்டபலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் காலை 9 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 24 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 24 January 2023 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Tuesday, January 24, 2023, 5:10 [IST]
Desktop Bottom Promotion