Today Rasi Palan 20 November 2022: இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்... உஷாரா இருங்க...

இன்று மீன ராசியின் பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 20 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மீன ராசியின் பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று சற்று செலவுகள் நிறைந்த நாளாக காணப்படும். இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். இப்படி தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், வரும் நாட்களில் நீங்கள் பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் உங்களை இன்று ஆட்டிப்படைக்கும். குழந்தைகளின் கல்வி அல்லது உடல்நிலை குறித்து நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் முழுமையடையாமல் இருக்கும் வேலைகளால் சில சிக்கல்கள் உண்டாகலாம். இதனால் முதலாளியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். உங்களது நீண்ட கால கடின உழைப்பு இன்று நிச்சயமாக வெற்றி பெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேவையற்ற கவலைகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:35 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சில பெரிய மற்றும் முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படலாம். அதனால் இன்று நீங்கள் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய நேரிடலாம். வியாபாரிகள் இன்று தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நாளின் பிற்பகுதியில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த நட்பால் அனுகூலுமும் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலை ஏற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு ஏதாவது சிறப்பாக வாங்கி கொடுக்க எண்ணினால் இன்று அதற்கு ஏற்ற நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவு விஷயத்தில் அலட்சியத்தைத் தவிர்த்து, கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றமான நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சியின் பலனாக நிதி நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வருமான ஆதாயங்கள் கிடைக்க பெறுவீர்கள். உங்களை சுற்றிலும் மகிழ்ச்சியற்றவர்கள் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். இது உங்களிடம் எதிர்மறை எண்ணத்தை அதிகரிக்க செய்திடும். நிதி விஷயத்தில் கவனமாக செயல்பட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலையில் இன்று நாட்டத்தை உணர மாட்டீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலவும் பிரச்சனைகள், உங்கள் தொழில் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். இல்லையெனில், சிரமங்கள் அதிகரிக்கலாம். வணிகர்கள் இன்று புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் அதைத்த தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று அமைதியற்ற நாளாக இருக்கக்கூடும். உங்களின் தேவையற்றி கோபமே உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாளாக தடைப்பட்ட பண வரவையும் இன்று பெற்றிடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இன்று சாதகமான சூழல் நிலவும். இன்று உங்கள் முதலாளியிடமிருந்தும் சில நல்ல ஆலோசனைகளை நீங்கள் பெறலாம். இப்போது விரும்பாத வேலையை செய்து கொண்டிருந்தால், மனதிற்கு பிடித்த வேலை செய்வதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும். அதற்கு நீங்கள் உங்களால் முடிந்ததை முயற்சி செய்ய வேண்டியது அவசியம். வியாபாரிகள் ஏற்றத்தை காண வேண்டுமெனில் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். திருமணமானவர்கள் இன்று தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கலாம். குடும்பத்தாருடன் வெளியே செல்லலாம். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். எப்படியிருந்தாலும், நல்ல கிரக அமைப்புகள் இருப்பதால் உங்கள் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. உத்தியோகஸ்தர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசித்து கொண்டிருந்தால், விரைவில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வணிகர்கள் இன்று கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய தினம் உங்கள் எதிரிகள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, உங்களின் முக்கிய வேலையைத் தடுக்க முயற்சிக்கலாம். இன்று அவசரப்பட்டு எந்த வேலையும் செய்ய வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். நீண்ட காலத்திற்கு பிற்கு, உங்களுக்கென சிறிது நேரத்தை ஒதுக்க முடியும். நீங்கள் சில காரணங்களால் வீட்டை விட்டு விலகி வாழ்ந்தால், குடும்பத்தினருடனும் நேரம் ஒதுக்க வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார கண்ணோட்டத்தில் இன்று உங்களுக்கு கலவையான நாளாகவே இருக்கும். அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுபடுத்தினால் நல்லது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். வணிகர்களுக்கு இன்று புதிய முதலீட்டிற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீட்டின் சரியான பலனைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், இன்று வீட்டில் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடனான உறவில் இணக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதி நிறைந்த நாளாக இருக்கும். இதனால் இன்று நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று திடீர் பண வரவிற்கான வாய்ப்பும் உண்டு. இதுதவிர நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணத்தையும் திரும்ப பெறலாம். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். இன்று அவர்களும் உங்கள் வேலையைப் பாராட்டலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் நீண்ட கால நிதி பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் நல்ல மனநிலையில் இருப்பார். உங்களுக்கு நீரிழிவு பிரச்சனை இருந்தால் இன்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வீட்டின் அலங்காரத்தை மாற்றுவதற்காக நிறைய பணத்தை செலவு செய்யலாம். இருப்பினும், உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதிகப்படியான ஆர்வத்தில் தேவைக்கு அதிகமாக செலவு செய்து விடாதீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அத்தகைய சூழலில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்படும் உங்கள் பழக்கமே உங்கள் திருமண வாழ்க்கையில் முரண்பாடுகளை அதிகரிக்க செய்திடும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரி சில முக்கியமான வேலைகளை ஒப்படைத்தால், அதை சரியான நேரத்தில் செய்து முடிப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். அலட்சியமாக செயல்பட்டால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும். வியாபாரிகள் இன்று பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு இடுப்பு அல்லது முதுகில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் வீட்டில் சிறிய விருந்திற்கு ஏற்பாடு செய்யலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று உங்கள் நிதி நிலையும் நன்றாக இருக்கும். பணம் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்வதற்கு இன்று ஏற்ற நாளாக இருக்கும். திருமணமானவர்களுக்கு சில காலமாக வாழ்க்கைத் துணையுடன் மனசங்கடம் இருந்துவந்தால், அவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்து மனம் விட்டு பேசுங்கள். அதே போல் உங்கள் துணையின் மனதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வேலையின் அடிப்படையில், இன்று கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். இல்லையெனில், உங்கள் முதலாளி உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள நேரிடும். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் எந்தவொரு முடிவு எடுப்பதிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டு வருவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சற்று சவாலான நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, நீங்கள் வீண் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். நீங்கள் பொறுமை இழந்தால், அதன் பின்விளைவால் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக தேவையான சில பொருட்களை வாங்கி கொடுக்கலாம். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். வணிகர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெரிய லாபம் வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். சில நாட்களாக உங்கள் உடல்நிலை சரியில்லை என்றால், அலட்சியமாக இருக்காதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாளின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். காலை விடிந்தவுடனே சில நல்ல செய்திகள் வீடு தேடி வரலாம். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவீர்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்களின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில் இன்று ஏற்ற இறக்கங்கள் எதுவும் இருக்காது. இன்று ஏதேனும் பெரிய செலவுகளை செய்ய திட்டமிட்டிருந்தால், அதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அரசு ஊழியர்களின் முன்னேற்ற கனவு நனவாக போகிறது. உங்கள் கடின உழைப்பு வெற்றியடைய போகிறது. சில்லறை வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் உங்களுக்கு சாதகமான முடிவுகளையே கொடுக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். வியாபாரிகள், வணிகம் தொடர்பான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய தினம் எந்தவொரு ஆபத்தான முடிவையும் எடுக்காதீர்கள். நன்கு யோசித்து எடுத்து முடிவுகளால் சிறந்த பலனைப் பெற்றிடலாம். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சிறப்பான சலுகைகள் கிடைக்கலாம். தொடர்ந்து கடினமாக உழைத்தால், உங்கள் இலக்கை விரைவில் அடையலாம். நிதி நிலையைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்க இன்று ஏற்ற நாள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனஅமைதியும் நிலவும். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நீங்கள் உங்கள் பெற்றோருடன் நேரம் செலவிட வாய்ப்பைப் பெறலாம். அவர்களிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம். சில காலமாக ஆரோக்கியம் சரியில்லை என்றால், இன்று ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, November 20, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion