Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
Today Rasi Palan 16 March 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் சிறு முயற்சியில் பெரும் வெற்றியைப் பெறலாம்...
இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 16ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 16ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருந்தாலும், உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். இன்று பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:20 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் கவனமாக இருக்க வேண்டும். சில பொறாமை கொண்ட சக ஊழியர்கள் உங்கள் பெயரைக் கெடுக்க முயற்சி செய்யலாம். வியாபாரிகள் லாபம் ஈட்ட இன்று கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவிடுவதன் மூலம் அலுவலக பதற்றத்தைக் குறைத்திட முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 7:20 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். வியாபாரிகளின் பொருளாதார பிரச்சனை தீரும். இன்று உங்கள் தடைப்பட்ட எந்த ஒரு வேலையும் முடியும். உங்கள் தற்போதைய வேலையில் திருப்தி இல்லை என்றால், வேலையை மாற்ற இதுவே சரியான நேரம். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரியம் கொடுக்க நினைத்தால், இன்று நல்ல நாள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, வீட்டில் வயதானவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். வேலையில், இன்று கலவையான முடிவுகளைத் தரும். நீங்கள் கடினமாக உழைத்தால், உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பெரிய செலவுகளை செய்வதற்கு முன்பு கவனமாக சிந்தியுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 5:15 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வேலை மற்றும் குடும்பம் இரண்டிற்கும் சமமான கவனம் செலுத்த முடியும். உங்களின் அனைத்து வேலைகளும் திட்டப்படியே முடிவடையும். தொழிலதிபர்கள் பெரும் நிதி ஆதாயத்தைப் பெறலாம். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். உத்தியோகஸ்தர்களின் நிலையும் வலுவாக இருக்கும். அலுவலகத்தில் பெரிய மரியாதையைப் பெறலாம். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்களுக்கு மது மற்றும் சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இருந்தால், விரைவில் அதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4:20 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, காதல் விஷயத்தில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் காதல் திருமண ஆசை விரைவில் நிறைவேறும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். விரைவில் நீங்கள் அதன் சரியான முடிவைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் சங்கடப்பட வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் ஒரு பெரிய வாடிக்கையாளரை சமாளிக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் நிறைய பேரம் பேச வேண்டியிருக்கும். உங்களுக்கு இதயம் தொடர்பான நோய் ஏதேனும் இருந்தால், கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று திடீர் செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். இன்று உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். உங்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம். அலுவலகத்தில், உங்கள் வேலையை மிக வேகமாக முடிக்க அறிவுறுத்தப்படுவீர்கள். காலதாமதம் உங்கள் சிரமங்களை அதிகரிக்கலாம். தொழிலதிபர்கள் வியாபார மாற்றத்தை பற்றி யோசித்தால், இந்த நேரத்தில் நீங்கள் அதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் உறவில் மனகசப்பை ஏற்படுத்தும் எதையும், கோபத்தில் செய்யாதீர்கள். அலுவலகத்தில், உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று மேலதிகாரி உங்களுக்கு சில கூடுதல் பணிகளையும் வழங்கலாம். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, நிலுவையில் உள்ள பழைய பணிகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், ஓய்விற்கு நேரம் ஒதுக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, வேலையில் உங்கள் நிலை நன்றாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். இப்படி தொடர்ந்து உழைத்தால், விரைவில் பெரிய அளவில் முன்னேறலாம். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். சிறிய முயற்சியில் பெரிய வெற்றியைப் பெறலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் பெரிய கவலை நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, தொழிரதிபர்கள் இன்று அவசரமாக எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பாக இருக்கும். இருப்பினும், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் சிந்திக்காமல் செலவு செய்தால், உங்கள் எதிர்கால திட்டங்களில் தடைகள் ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இழப்பு சாத்தியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு இன்று உங்களுக்குக் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் சில புதிய பொருளாதார திட்டங்களையும் செய்யலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பெற்றோரின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். இன்று குடும்பத்துடன் சிறிய பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், இன்றே முடிக்க முயற்சி செய்யுங்கள். திடீரென்று முதலாளி உங்கள் படைப்புகளை மதிப்பாய்வு செய்யலாம். வியாபாரிகள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பு வெற்றி பெறும். பண விஷயத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யுங்கள். நல்ல ஆரோக்கியத்திற்காக உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை



Click it and Unblock the Notifications











