Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மகா சிவராத்திரியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
மகா சிவராத்திரியில் உருவாகும் திரிகிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான விரதம் தான் மகா சிவராத்திரி. என்ன தான் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாளில் தான் சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விரதமானது 2023 பிப்ரவரி 18 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் கும்ப ராசியில் சனியுடன் மற்ற இரண்டு கிரகங்களும் சேர்ந்து திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றன. மேலும் இந்த நாளில் தான் சனி பிரதோஷமும் வருவதால், இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது.

மகா சிவராத்திரியில் உருவாகும் திரிகிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது மற்றும் மற்றும் எந்த கிரகங்களால் திரிகிரக யோகம் உருவாகிறது என்பதைக் காண்போம்.

2023 மகா சிவராத்திரியில் திரிகிரக யோகம்
2023 பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்படும் மகா சிவராத்திரி நாளில், கும்ப ராசியில் சனி, சூரியனுடன், சந்திரனும் இணைகிறார்கள். எனவே இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கும்பத்தில் திரிகிரக யோகம் உருவாகிறது. அதுவும் இது மகா சிவராத்திரி நாளில் நிகழ்வதால் இது ஒரு அரிய நிகழ்வு. இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலம், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் தாக்கம் சற்று குறைவதோடு, சிவனின் அருளால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மகா சிவராத்திரியில் உருவாகும் திரிகிரக யோகத்தின் போது மேஷ ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும். இதுவரை உங்களின் ஏதேனும் முக்கியமான பணிகள் நிலுவையில் இருந்தால், அது இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். அதோடு இந்த காலகட்டத்தில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இன்னும் சிறப்பான பலன்களைப் பெற மேஷ ராசிக்காரர்கள் நீரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது பொருளாதார நிலை மேம்படுத்துவதோடு, பணிபுரிபவர்கள் தங்களில் துறைகளில் வெற்றியைக் காண்பார்கள். முக்கியமாக வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இது பேச்சு மற்றும் செல்வத்தின் வீடாகும். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் திடீரென்று பணத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பேச்சு தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறப் போகிறது. புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
