Latest Updates
-
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்!
அக்டோபரில் 3 கிரகங்களின் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு அமோகமா இருக்கப் போகுது...
துலாம் ராசியில் 3 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதால், பல ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது எந்த ராசிக்காரர்கள் 3 கிரகங்களின் சேர்க்கையால் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. மேலும் 3 கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக பயணிக்கவுள்ளன. ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கை பல தற்செயல்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக சிலரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் பின் அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 26 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார். இப்படி துலாம் ராசியில் 3 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதால், பல ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது எந்த ராசிக்காரர்கள் 3 கிரகங்களின் சேர்க்கையால் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
புதன், சூரியன், சுக்கிரனின் சேர்க்கை காலமானது மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய பண பலன்களைத் தரும். ஏனெனில் மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் இந்த 3 கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் இமேஜ் மேம்படும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதியுள்ளவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக புதனின் நிலையால், நற்பலன்கள் கிடைக்கும். அதுவும் கடன் வாங்கியிருந்தால், அதை இக்காலத்தில் திருப்பி செலுத்திவிடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளன. இதனால் இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். பழைய பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
