Latest Updates
-
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
வெள்ளிக்கிழமைகளில் 'இத' செஞ்சா லட்சுமி தேவியின் அருள் கிடைத்து வறுமை நீங்கி செல்வம் பெருகுமாம்..
லட்சுமி தேவியை வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. இந்த கிழமையில் லட்சுமியை வழிபட்டால், லட்சுமி தேவியின் அருளைப் பெற்று வீட்டில் செல்வம் பெருகும், வறுமை நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் செழிப்போடு வாழலாம்.
கிழமைகளிலேயே வெள்ளிக்கிழமை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. மத நூல்களில், செல்வத்திற்குரிய கடவுளான லட்சுமி தேவியை வழிபட ஒருசில வழிமுறைகள் உள்ளன. அதில் லட்சுமி தேவியை வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. இந்த கிழமையில் லட்சுமியை வழிபட்டால், லட்சுமி தேவியின் அருளைப் பெற்று வீட்டில் செல்வம் பெருகும், வறுமை நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் செழிப்போடு வாழலாம்.

மேலும் வெள்ளிக்கிழமை வெள்ளி/சுக்கிரனுக்கு உரியதாகவும் கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமான நிலையில் இருந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம் சுக்கிரனை வலுப்படுத்தி நற்பலன்களைப் பெறலாம். நீங்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற நினைத்தால், பின்வரும் விஷயங்களை வெள்ளிக்கிழமைகளில் செய்யுங்கள்.

விரதம் இருக்கவும்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியை முழு மனதுடன் வழிபடுங்கள். அதுவும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருங்கள். இதனால் பலவீனமான சுக்கிரனால் பெறும் அசுப பலன்களைத் தவிர்க்கலாம்.

ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்யவும்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழக்கமாக ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்தால், சுக்கிரனின் நிலை வலுவாகி, குறுகிய காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். மேலும் வீட்டில் பணம் வரத் தொடங்கும்.

வெள்ளை நிற ஆடை அணியவும்
வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்த பின் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து லட்சுமி தேவியை வணங்கி, லட்சுமி தேவியின் பல்வேறு ஸ்ரீ வடிவங்களைக் கண்டு, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வந்தால், வீட்டில் சந்தோஷமும், செல்வமும் எளிதில் பெருகும்.

பசு நெய் தானம்
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் பசுவின் சுத்தமான நெய்யை தானம் செய்யுங்கள். இதனால் சுக்கிரன் வலுவாகி, செல்வ செழிப்போடு வாழலாம்.

எறும்புகளுக்கு சர்க்கரை வழங்கவும்
உங்கள் வேலை, வியாபாரம் அல்லது வேறு எந்த வேலைகளிலும் தடைகள் இருந்தால், வெள்ளிக்கிழமைகளில் கருப்பு எறும்புகளுக்கு சர்க்கரையை வழங்குங்கள். இதனால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும்.

காதல் பறவை படங்கள்
வீட்டில் கணவன்-மனைவி இடையே உறவில் பிரச்சனைகள் இருந்தால், வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டின் படுக்கை அறையில் காதல் பறவைகளின் படத்தை வையுங்கள். இதனால் உறவுகளில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, உறவு வலுவாகும்.

பிங்க் நிற ஆடைகள்
வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை மற்றும் பிங்க் நிற ஆடைகளை அணிவது சந்திரனை சாந்தமாக்கும் மற்றும் இது லட்சுமி தேவியை மகிழ்விக்கும். முடிந்தால், ஒரே நிறத்தில் கைக்குட்டைகளைப் பயன்படுத்துங்கள்.

தாமரை, சங்கு
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவிக்கு தாமரை மலர்கள், சங்குகள், மாலைகள், மக்கானா ஆகியவற்றை படைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவை வழிபடவும்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமி தேவி மற்றும் ஸ்ரீ விஷ்ணுவை பய பக்தியுடன் வழிபடுங்கள். இதனால் லட்சுமி தேவி சந்தோஷமடைந்து, உங்களுக்கு பல வழிகளில் செல்வம் சேர அருள் வழங்குவார். மேலும் பணி மற்றும் வியாபாரத்தில் நாளுக்கு நாள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

எங்கும் எப்போதும் பெண்களை மதிக்கவும்
இறுதியாக ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிப்பு மரியாதையுடன் நடத்த வேண்டும். இது பலவீனமான சுக்கிரனின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து உங்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், செல்வம் மற்றும் சிறப்பின் காரணியான சுக்கிரன் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிப்பார்.



Click it and Unblock the Notifications
