Latest Updates
-
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்!
இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா உடனே மாத்துங்க... இல்லன்னா அது உங்களை ஏழையாக்கிடும்...
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழக்கங்கள் இருக்கும். நமது ஒவ்வொரு பழக்கமும், நடத்தையும் ஒவ்வொரு கிரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழக்கங்கள் இருக்கும். நமது ஒவ்வொரு பழக்கமும், நடத்தையும் ஒவ்வொரு கிரகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே தான் உங்களின் நடத்தை ஒவ்வொன்றும் உங்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் சாஸ்திரத்தின் படி நடந்து கொள்ளாமல் இருந்தால் அல்லது பழக்கவழக்கங்களானது மோசமானதாக இருந்தால், அதன் விளைவாக ஒருவரது நிதி நிலை பலவீனமாகி, அவர் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிட்டு, வறுமையை நோக்கி செல்ல வேண்டியிருக்கும்.

இது தவிர சில பழக்கவழக்கங்கள் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவிக்கு கோபத்தை வரவழைத்து, அதன் விளைவாக பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க வைப்பதோடு, ஏழையாக்கும். இப்போது ஒருவரை ஏழையாக்கக்கூடிய அந்த பழக்கவழக்கங்கள் என்னவென்பதைக் காண்போம்.

படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவது
நீங்கள் படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் உடனே அப்பழக்கத்தை உடனே தவிர்த்திடுங்கள். ஏனெனில் படுக்கையில் அமர்ந்து உணவு உண்பது வாஸ்து சாஸ்திரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. இம்மாதிரியான பழக்கம் வீட்டில் எதிர்மறையைக் கொண்டு வருவதோடு, குடும்பத்தின் மகிழ்ச்சியையும், அமைதியையும் பாதிக்கும். அதே வேளையில் வீட்டின் வறுமையும் மேலோங்கும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் பணம் கொடுப்பது
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்போதும் யாருக்கும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பணம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் கடன் சுமை தான் அதிகரிக்கும். அதோடு வீட்டின் மகிழ்ச்சியும், செழிப்பும் குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தூங்கும் முன் சமையலறையை அசுத்தமாக வைப்பது
எப்போதும் வீட்டின் சமையலறையானது சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக இரவு தூங்கும் முன் சமையலறையில் உள்ள பாத்திரங்களை கழுவி விட்டு, சமைலறையை சுத்தமாக வைத்துவிட்டு தான் தூங்க வேண்டும். ஒருவேளை அசுத்தமாக வைத்திருந்தால், நமக்கு அன்னத்தை வழங்கும் அன்னபூரணி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதோடு, வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி, வாஸ்து குறைபாடு கொண்ட வீடாக காணப்படும்.

இரவில் துணி துவைப்பது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, இரவு நேரத்தில் துணி துவைப்பது நல்லதாக கருதப்படுவதில்லை. இரவு நேரத்தில் துணி துவைத்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவியிருக்கும். ஏனெனில் இரவு நேரத்தில் தான் எதிர்மறை சக்திகள் அதிகம் உலாவிக் கொண்டிருக்கும். இந்நிலையில் இரவு நேரத்தில் துணி துவைக்கும் போது, அந்த வீட்டில் உள்ளோர் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் இரவு நேரத்தில் வெளியே துணியை காய போட்டால், அந்த ஆடைகளில் எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருக்கும். பின் அந்த ஆடைகளை அணியும் போது, அவர்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து, எந்தவொரு விஷயத்திலும் வெற்றி கிடைக்காமல் தோல்வியை சந்திக்க நேரிடும்.

இரவில் வீட்டை பெருக்குவது
நிறைய பேர் இரவு நேரத்தில் வீட்டை பெருக்குவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் வாஸ்துப்படி, துடைப்பத்தில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டை பெருக்கும் போது, லட்சுமி தேவி கோபப்படுவதோடு, வாஸ்து கடவுள்களும் கோபப்படுவார்கள். எனவே இந்த தவறை இனிமேல் செய்யாதீர்கள். இல்லாவிட்டால், வீட்டில் வறுமை வரத் தொடங்கும்.



Click it and Unblock the Notifications
