Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மார்ச் மாசத்துல இந்த 4 ராசிக்காரங்க கையில பணம் அதிகம் சேருமாம்.. உங்க ராசி என்ன?
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பொறுத்து, மார்ச் மாதத்தில் 4 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் வந்து சேருமாம்.
மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் தொடங்கினால் பலரது மனதிலும் எழும் ஒரு பொதுவான கேள்வி, இந்த மாதமாவது போதுமான பணம் கையில் நிற்குமா என்பது தான். நீங்கள் உங்கள் மனதில் இம்மாதிரியான கேள்வியை கேட்டுள்ளீர்களா? ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பொறுத்து, மார்ச் மாதத்தில் 4 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் வந்து சேருமாம். அதே வேளையில், பல ராசிக்காரர்கள் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்போது 2022 மார்ச் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மார்ச் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டின் அதிபதியான சூரியன் 9 ஆவது வீட்டில் இருப்பதால், உங்களுக்கு ரகசிய பண ஆதாயம் கிடைக்கும். ராகு உங்கள் வீட்டின் 11 ஆவது வீட்டில் இருப்பதால், வருமானம் உயர வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள், பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம். முதலீடு செய்வதற்கு இது சாதகமான மாதம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கும் மார்ச் மாதத்தில் நல்ல பண வரவு உண்டு. உங்கள் ஜாதகத்தில் 7 ஆது வீட்டில் சனி இருந்து, 8 ஆவது வீட்டில் சனியின் முழு பார்வையும் விழுவதால், ரகசியமாக பணம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதே வேளையில் வணிகம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். 9 ஆவது வீட்டில் ராகு இருப்பதால், இதுவரை கைக்கு வராமல் தடைப்பட்ட பணம் இம்மாதத்தில் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் மார்ச் மாதம் அற்புதமான மாதம். இம்மாதத்தில் ரகசியமாக பணம் கிடைக்கும். இதுவரை கைக்கு வரவேண்டி வராமல் இருக்கும் பணம் இம்மாதத்தில் எவ்வித தடையும் இல்லாமல் எளிதில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குருவின் நிலையினால் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த பணம் மீண்டும் நல்ல லாபத்தில் செல்ல ஆரம்பிக்கும்.

மீனம்
மார்ச் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல மகிழ்ச்சியைத் தரும் மாதமாக இருக்கும். இம்மாதத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. மாதத்தின் தொடக்கத்தில் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. சனி 11 ஆவது வீட்டில் இருப்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் இம்மாதத்தில் பணத்தை அதிகம் சேமிக்க முடியும். மேலும் செலவுகள் கட்டுப்படுத்தப்படும். இதுவரை முதலீடு செய்ததில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
