For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு நல்ல வேலையே கிடைக்கலையா? அப்ப இந்த கோவில்களுக்கு போயிட்டுவாங்க... உடனே வேலை கிடைக்குமாம்!

|

தற்போதுள்ள நவீன பிஸியான காலகட்டத்தில் வேலை என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஒவ்வொரு மக்களும் வாழ்வதற்கான வருமானத்தை வேலை பார்ப்பதன் மூலமாகத்தான் சம்பாதிக்கிறார்கள். ஆதலால், வேலை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியம். இது உங்கள் திறன் மற்றும் சுயமரியாதையோடு சம்பத்தப்பட்டது. வேலையில் இருப்பதன் மூலம் நீங்கள் மக்களுடன் பழகவும், உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கவும், ஒரு நோக்கத்துடன் வாழவும், உங்களுக்கு ஒரு அடையாளத்தை அளிக்கவும் உதவுகிறது. வேலை வாழ்க்கை மற்றும் அதன் சிக்கல்கள் பற்றிய ஆழமான பார்வையை அளிக்கிறது. இதைத் தவிர, சமூக ரீதியாக, வேலை இல்லாததால் ஏற்படும் பின்விளைவுகள் உங்கள் மன உறுதியைக் குறைக்கலாம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

உங்களில் பலர், கல்வித் தகுதிகளும், போதிய அனுபவமும் இருந்தபோதும் வேலை கிடைக்காமல் இருப்பதால், விரக்தியின் விளிம்பில் இருப்பீர்கள். நீங்கள் ஏன் கடவுளின் நம்பிக்கை கொள்ளக்கூடாது? ஆம், தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட நான்கு கோயில்களுக்கு நீங்கள் சென்று வந்தால், உங்களுக்கு வேலை கிடைக்குமாம். வேலைவாய்ப்பைப் பெற மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக இக்கோயில்களில் தரிசித்த ஏராளமான மக்களுக்கு பலன் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜம்புகேஸ்வரர் கோவில்

ஜம்புகேஸ்வரர் கோவில்

உங்களுக்கு வேலையில் மாற்றம் கிடைக்க வேண்டும் என்றாலும், அடுத்த நல்ல வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வர வேண்டும் என்று நினைத்தாலும் உடனே, திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு செல்லுங்கள். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது 'நீர்' அல்லது தண்ணீரைக் குறிக்கிறது. வேலை தேடுபவர்கள் அல்லது வேலை மாற நினைப்பவர்கள் ஜம்புகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டால், கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தங்கள் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும், வேலை வாங்குவதற்கு இங்கு பூஜை செய்து வழிபாடுவார்களாம். வேலை கிடைத்ததும், அவர்கள் கோயிலுக்குச் சென்று சேலை அல்லது நன்கொடைகளை நன்றி செலுத்துவதற்காக வழங்குவதாகக் கூறப்படுகிறது.

ஆதி கும்பேஸ்வரர் கோவில்

ஆதி கும்பேஸ்வரர் கோவில்

மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர் கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சைவ துறவிகளால் போற்றப்படும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவபெருமான் பார்வதி தேவிக்கு 36 கோடி மந்திரத்தின் சக்தியுடன் தனது வடிவத்தின் பாதியை வழங்கியதாக அறியப்படுகிறது. இது பார்வதி தேவியின் சக்தியை கூட்டி, மந்திர பீடேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். சிறந்த தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கும் பக்தர்கள், இந்தக் கோயிலுக்குச் சென்று அபிஷேகம், அர்ச்சனை போன்றவற்றைச் செய்கிறார்கள். தங்கள் விருப்பம் நிறைவேறியவுடன், ஆதி கும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வஸ்திரம் அல்லது பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்கள்.

பார்த்தசாரதி கோவில்

பார்த்தசாரதி கோவில்

ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் மட்டுமே விஷ்ணு மீசையுடன் காட்சியளிக்கிறார். அதனால், இது மீசை பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படும். விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில், சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர், ராமர், கஞ்சேந்திரவரதராஜா, ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய விஷ்ணுவின் ஐந்து அவதாரங்களையும் கொண்ட ஒரே கோயில் இதுவாகும். யோக நரசிம்மர் கல்வி மற்றும் ஞானத்தை வழங்குவதாக அறியப்படுகிறது. சிறந்த வேலை வாய்ப்பு அல்லது தொழில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் பக்தர்கள், அவரை இங்கு திருமஞ்சனம் என்ற சடங்கு செய்து வழிபடுகின்றனர். யோக நரசிம்மருக்கு சக்கரை பொங்கலை பிரசாதமாக வழங்குகிறார்கள்.

உயர் பதவிகள் கிடைக்கும்

உயர் பதவிகள் கிடைக்கும்

தேவலோகத்தின் இந்திரன் என்றும் அழைக்கப்படும் தேவேந்திரன் மகாபலி சக்ரவர்த்தியால் தோற்கடிக்கப்பட்டு தேவலோகத்தை இழந்தார். அவர் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்ததன் காரணமாக, விஷ்ணு மகாபலியை வென்று இந்திரனுக்கு வேலையையும் பதவியையும் கொடுத்தார். எனவே, இந்த கோவிலில் பூஜையை செய்து வழிபடுபவர்களுக்கு இழந்த வேலை(கள்) மீண்டும் கிடைக்கும் என்றும், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும், கருடாழ்வார் உத்யோக (எழும் நிலை) நிலையில் உள்ள ஒரே தலம் இதுவாகும். இங்குள்ள நான்கு கரங்களைக் கொண்ட கருடனை வழிபடுவது பக்தர்களுக்கு உயர்ந்த நிர்வாகப் பதவிகளை வழங்குகின்றது.

திருவெள்ளியங்குடி கோவில்

திருவெள்ளியங்குடி கோவில்

திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ திருத்தலமாகும். பல்லவர்களால் கட்டப்பட்ட ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் சாய்ந்த நிலையில் காணப்படும் புஜங்க ஷயனா தெய்வம் உள்ளது. இது வைணவ மரபின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இந்திரன், மன்னன் மகாபலியுடன் நடந்த போரில் தோல்வியடைந்ததால் தனது ராஜ்யத்தை இழந்தார், அதற்காக அவர் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தார். இதன் விளைவாக மகாபலி, தேவலோகத்திலிருந்து தோற்கடிக்கப்பட்டு, இந்திரனின் நிலை மீண்டும் மீட்கப்பட்டது. ஆதலால், பக்தர்கள் இழந்த வேலைகளை மீண்டும் பெறவும், வேலை வாய்ப்பு பெறவும், தொழில் முன்னேற்றம் அடையவும் இந்த ஆலயம் பிரபலமாக உள்ளது.

பொறுப்புத் துறப்பு: இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானது. இதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Temples In Tamilnadu That Will Help You To Land Your Dream Job in tamil

Here are the list of Temples In Tamilnadu That Will Help You To Land Your Dream Job in tamil.
Story first published: Friday, November 18, 2022, 14:44 [IST]
Desktop Bottom Promotion