Latest Updates
-
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம்
Teddy Day 2023: உங்க லவ்வரோட ராசிப்படி எந்த கலர் டெடி பியரை வாங்கி கொடுக்கணும் தெரியுமா?
உங்கள் காதலருக்கு எந்த நிற டெடி பியரை வாங்கிக் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்படியானால் அவர்களின் ராசிக்கேற்ற நிறத்தில் டெடி பியரை வாங்கிக் கொடுங்கள்.
Teddy Day 2023: காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, அதாவது பிப்ரவரி 07 முதல் காதலர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் கொண்டாடப்படுகிறது. அவை ரோஸ் டே, ப்ரோப்போஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, கிஸ் டே, ஹக் டே, கடைசி நாள் தான் வேலெண்டைன்ஸ் டே/காதலர் தினம். இந்த ஒவ்வொரு நாளும் காதலைக் குறிக்கும் மற்றும் காதலை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதில் பிப்ரவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படுவது தான் டெடி டே. இந்த டெடி டேயில், காதலிப்பவர்கள் தங்கள் காதலன்/காதலிக்கு டெடி பியரை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம். பொதுவாக டெடி பியரானது அன்பானவருக்கு பரிசளிக்க ஏற்ற இனிமையான பொருள். இந்த மென்மையான பொம்மைகள் ஒருவரது அன்பை உணர வைக்கும். எவ்வளவு டென்சன் இருந்தாலும், மென்மையான பட்டுப் போன்ற டெடி பியரை அணைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தால், அது மனதை ரிலாக்ஸ் செய்து முகத்தில் புன்னகையைக் கொண்டு வரும்.
உங்கள் காதலருக்கு எந்த நிற டெடி பியரை வாங்கிக் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்படியானால் அவர்களின் ராசிக்கேற்ற நிறத்தில் டெடி பியரை வாங்கிக் கொடுங்கள். இதனால் உங்கள் இருவருக்கும் உள்ள பிணைப்பு இன்னும் அதிகரிக்கும்.

மேஷம்
உங்கள் காதலன்/காதலி மேஷ ராசியைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு சிவப்பு நிற டெடி அல்லது இதயத்தைக் கொண்டவாறான பெரிய அளவிலான டெடி பியரை வாங்கி கொடுக்கலாம். இது நீங்கள் அவர்களை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.

ரிஷபம்
உங்கள் காதலர் ரிஷப ராசியை சேர்ந்தவரா? அவர்களுக்கு டெடி டே தினத்தில் சர்ப்ரைஸ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அவர்களுக்கு டெடி தினத்தன்று அடர் பிங்க் நிற டெடி பியரை வாங்கிக் கொடுக்கலாம்.

மிதுனம்
உங்கள் காதலன்/காதலி மிதுன ராசிக்காரரா? அப்படியானால் அவர்களுக்கு டெடியை தேர்ந்தெடுப்பது சற்று சிரமமானது தான். ஆனால் இவர்களுக்கு நீலம் அல்லது பழுப்பு நிற டெடியை வாங்கிக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் ஊதா நிற டெடியை வாங்கிக் கொடுக்கலாம்.

கடகம்
உங்கள் காதலன்/காதலி கடக ராசிக்காரரா? இந்த ராசியின் அதிபதி சந்திரன் என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு வெள்ளை நிற டெடி பியரை வாங்கிக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும்.

சிம்மம்
உங்கள் வாழ்க்கைத் துணை சிம்ம ராசிக்காரரா? இந்த ராசியின் அதிபதி சூரியன். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு அடர் சிவப்பு நிற டெடி பியரை வாங்கிக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும். அடர் நிறமானது நீங்கள் அவர்கள் எவ்வளவு ஆழமாக நேசிக்கிறீர்கள் என்பதை உணர வைக்கும்.

கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவரா உங்கள் வாழ்க்கைத் துணை? அப்படியானால் அவர்களுக்கு டெடி டே அன்று பச்சை நிற டெடி பியரை வாங்கி பரிசாக கொடுப்பது சிறந்ததாக இருக்கும். பச்சை நிறமானது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்.

துலாம்
உங்கள் காதலன்/காதலி துலாம் ராசியைச் சேர்ந்தவரா? அப்படியென்றால் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பிங்க் நிற டெட பியரை வாங்கிக் கொடுங்கள். இது எவ்வளவு கடினமான காலத்திலும் நீங்கள் அவர்களுட்ன் இருப்பீர்கள் என்பதை உணர்த்தும்.

விருச்சிகம்
உங்கள் வாழ்க்கைத் துணை விருச்சிக ராசிக்காரரா? அப்படியானால் அவர்களுக்கு டெடி டே அன்று அடர் நீல நிற டெடி பியரை வாங்கி கொடுங்கள். இந்த நிறமானது அவர்களுடன் ஒரு நித்திய பிணைப்பை ஏற்படுத்தும்.

தனுசு
தனுசு ராசிக்காரரா உங்கள் காதலன்/காதலி? அப்படியானால் அவர்களுக்கு ஒரு டெடி பியர் மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதாது. ஏனெனில் அவர்களுக்கு பலவண்ணங்கள் கொண்ட டெடி பியரை வழங்க வேண்டும். அதற்கு பல வண்ணங்களில் சிறு சிறு டெடி பியரை வாங்கி, அவற்றை நன்கு பேக்கிங் செய்து கொடுங்கள். இதனால் அவர்கள் உண்மையிலேயே ஆச்சரியப்படுவதோடு, உங்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.

மகரம்
உங்கள் வாழ்க்கைத் துணை மகர ராசியா? அப்படியானால் அவர்களுக் பீச் அல்லது பிங்க் நிற டெடி பியர் தான் சிறந்ததாக இருக்கும். முக்கியமாக இவர்களுக்கு பெரிய அளவிலான டெடி பியரை வாங்கிக் கொடுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரரா உங்கள் வாழ்க்கைத் துணை? அவர்களுக்கு டெடி டே அன்று எந்த நிற டெடி பியரை பரிசளிப்பது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் டஸ்கி ப்ரௌன் நிற டெடி பியரை வாங்கிக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும்.

மீனம்
உங்கள் காதலன்/காதலி மீன ராசியைச் சேர்ந்தவரா? அவர்களுக்கு டெடி பியர் வாங்கிக் கொடுக்க விரும்பினால், நீல நிற சாயத்தைக் கொண்ட டெடி பியரை வாங்கிக் கொடுங்கள்.



Click it and Unblock the Notifications
