Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
தன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்!
சிலருக்கு பார்த்ததும் காதல் மலரும், இன்னும் சிலருக்கு பழக பழக காதல் பூக்கும். அப்படித் தான் திரை நட்சத்திரங்கள் பலருக்கு காதல் மலர்ந்து, திருமணம் வரை சென்று, இன்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.
காதலுக்கு கண்ணில்லை, காதல் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் வரலாம். அதில் சிலருக்கு பார்த்ததும் காதல் மலரும், இன்னும் சிலருக்கு பழக பழக காதல் பூக்கும். அப்படித் தான் நம் திரை நட்சத்திரங்கள் பலருக்கு காதல் மலர்ந்து, திருமணம் வரை சென்று, இன்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
பொதுவாக காதல் ஜோடி என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போன்றவர்கள் தான். இவர்களது ஜோடிப் பொருத்தம் திரைப்படத்தில் மட்டும் காண்பதற்கு அற்புதமாக இல்லை, நிஜ வாழ்க்கையிலும் தான். மேலும் இதுப்போன்று நம் தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகள் ஒன்றாக நடித்ததில் இருந்து காதல் மலர்ந்து திருமணம் செய்துள்ளனர். இக்கட்டுரையில் அந்த பிரபலங்களின் பட்டியல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

எம்.ஜி.ஆர் - ஜானகி
இந்த தம்பதிகள் 1967 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகள் மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜானகி அவர்கள் தனியாகத் தான் இருந்தார். பின் 1988 ஆம் ஆண்டு, மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

சரண்யா மற்றும் பொன்வண்ணன்
நம் அனைவருக்குமே அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை சரண்யா அவர்களைத் தெரியும். இவர் பெரும்பாலும் வில்லன் கதாப்பாரத்தில் நடிக்கும் நடிகர் பொன்வண்ணன் அவர்களை 1965 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் புலிமான், பசும்பொன், கருத்தம்மா போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ஸ்நேகா மற்றும் பிரசன்னா
ஸ்நேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிகள் 2012 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவர்கள் இருவரும் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு, பிரியாணி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா
பாக்யராஜ் ஒரு திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பூர்ணிமா பல தென்னிந்திய மொழிகளில் நடிகையாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் முந்தாணை முடிச்சு, டார்லிங், டார்லிங் டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த தம்பதிகள் 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யா சிவக்குமார் மற்றும் ஜோதிகா
சூர்யா, ஜோதிகா திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்ததோடு, சந்தோஷத்தையும் அளித்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது, அவர்களது ரசிகர் ரசிகைகளுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. சூர்யா-ஜோதிகா 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தில் தான் சந்தித்தனர். முதல் படத்திலேயே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து விட்டது. பின் 2006-இல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகள் காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன், உயிரிலே கலந்தது போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ராதிகா மற்றும் சரத்குமார்
நடிகை ராதிகா, சரத்குமாரை மூன்றாவது கணவராக திருமணம் செய்துள்ளார் மற்றும் சரத்குமாருக்கு இவர் இரண்டாவது மனைவி ஆவார். இந்த தம்பதிகள் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் மற்றும் இவர்கள் இருவருமே தங்களது குழந்தைகளுடன் தான் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கணவன் மனைவியான இவர்கள் இருவரும் நம்ம அன்னாச்சி, சென்னையில் ஒரு நாள், நானே ராஜா நானே மந்திரி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

அஜித்குமார் மற்றும் ஷாலினி
ஒரே துறையில் இருந்து கொண்டு உறவுகளைப் பராமரிப்பது என்பது கடினமான விஷயம். குறிப்பாக நடிகர், நடிகையாக இருந்தால், இன்னும் சிரமம். அஜித் மற்றும் ஷாலினி பல வருடங்களாக காதலித்தனர் மற்றும் தங்கள் காதலை ரகசியமாக பல வருடங்களாக வைத்திருந்தனர். இந்த ஜோடிக்கு அமர்களம் திரைப்படத்தில் தான் காதல் மலர்ந்தது. இவர்கள் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் ஷாலினி திரைத்துறையை விட்டு விலகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

க்ரிஷ் மற்றும் சங்கீதா
க்ரிஷ் மற்றும் சங்கீதா 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பல வருடங்களாக காதலித்து வந்தனர். ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்த இவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்து, காதல் மலர ஆரம்பித்ததாம்.

ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா
வந்தனா மற்றும் ஸ்ரீகாந்த் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை அனைவருக்கும் தெரியும். ஆனால் வந்தனாவைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் இருவரும் நம்பியார் என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இப்படத்தில் வந்தனா ஃபேஷன் டிசைனர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

குஷ்பு மற்றும் சுந்தர்.சி
நடிகை குஷ்பு, இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சுந்தர்.சி அவர்களை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை குஷ்பு சுந்தர்.சி திரைப்படங்களில் நடித்ததில் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்து, காதல் மலர்ந்தது. அதன் பின்னரே அந்த தம்பதியினர் தங்கள் திருமணத்தை அறிவிக்க முடிவு செய்தனர்.



Click it and Unblock the Notifications











