Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
சூரிய பெயர்ச்சியால் மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நிறைய லாபம் கிடைக்கப் போகுது..
2023 மார்ச் 15 முதல் குருவுடன் மீன ராசியில் சூரியன் ஒன்றாக பயணிப்பதால், இந்த சூரிய பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள்.
Sun Transit In Pisces On 15 March 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், மாதந்தோறும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். மேலும் சூரிய பெயர்ச்சியின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் தற்போது சனி ஆளும் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மார்ச் 15 ஆம் தேதி குரு ஆளும் மீன ராசிக்கு சூரியன் நுழையவுள்ளார். இந்த சூரிய பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாகவும், சில ராசிக்காரர்களுக்கு சற்று மோசமானதாகவும் இருக்கலாம்.

ஆனால் குருவுடன் மீன ராசியில் சூரியன் ஒன்றாக பயணிப்பதால், இந்த சூரிய பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது 2023 மார்ச் 15 ஆம் தேதி மீனம் செல்லும் சூரியனால் அதிக லாபத்தைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இக்காலம் மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு காணப்படும். பழைய முதலீடுகளால் இந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைக் காணலாம். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். இந்த காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். உங்களின் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். இக்காலகட்டத்தில் வேலை-வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் நல்ல ஆதாயமும் கிடைக்கும். மேலும் வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கு இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது நல்ல பலனை அளிக்கக்கூடியதாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
