Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சூரிய பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரங்க கையில பணம் அதிகம் சேரப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஏப்ரல் மாதத்தில் மேஷம் ராசிக்கு சூரியன் செல்லும் போது சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், அதிக பணமும் கிடைக்கும்.
நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரிய பகவான் மாதந்தோறும் ராசியை மாற்றுவது வழக்கம். அப்படி அவர் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் சுப வீட்டில் இருந்தால், வேலை, கௌரவம், பணம் போன்றவை கிடைக்கும்.

மேஷம் ராசிக்கு சூரியன் செல்லும் போது சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், அதிக பணமும் கிடைக்கும். இப்போது மேஷம் செல்லும் சூரியனால் மே 15 ஆம் தேதி வரை எந்த ராசிக்காரர்களின் கையில் அதிக பணம் சேரப்போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால், வாழ்வின் பல அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அரசு துறையில் இருப்பவர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமான வளர்ச்சிக்கான வலுவான வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, மிகவும் வலுவாக இருப்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டில் இருந்து ஆதாயமடைவார்கள். ஏற்கனவே வெளிநாட்டில் பணிபுரிந்து வருபவர்கள், இக்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். திடீர் பண வரவைப் பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் நல்ல பண ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவாகும். தொழிலில், நீங்கள் எதிரிகளிடமிருந்து ஆதாயமடைவீர்கள். பணியிடத்தில் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் நீங்கள் தொடர்பில் இருப்பீர்கள். வணிகர்களுக்கு தொழிலை விரிவுப்படுத்த பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால், நல்ல புகழைப் பெறுவார்கள். வேலை செய்பவர்கள் முன்னேறுவார்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் அல்லது அரசுத் துறையில் இருப்பவர்களும் இந்தப் பெயர்ச்சியால் சாதகமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். வேலையில் இருந்தால், உங்கள் சம்பளம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியால் 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு நல்ல தாக்கம் இருக்கும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களிடமிருந்து ஆலோசனையைப் பெற விரும்புவார்கள். தொழில் ரீதியாக இது உங்களுக்கு மிகவும் சாதகமான நேரம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் பலன் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கான வழிகளும் திறக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக அடைவார்கள். தொழில் சிறப்பாக இருக்கும். முன்பு செய்த முதலீடுகள் தற்போது உங்களுக்கு நிதிப் பலன்களைத் தரும். சில பண ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது மற்றும் உங்கள் துணையின் அதிர்ஷ்டமும் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
