Latest Updates
-
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஓஹோ-ன்னு இருக்கப்போகுது..!
இந்த ஆண்டு குரு சூரிய சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் நிகழவுள்ளது. அதில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைகிறார்.
Sun Jupiter Conjunction In Aries 2023: நவகிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் சூரியன் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுகிறார். மங்களகரமான கிரகமான குரு ஆண்டிற்கு ஒருமுறை, அதாவது 12 மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் அதிர்ஷ்டம், நம்பிக்கை, வெற்றி, வளர்ச்சி, வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

மேலும் சூரியன் சிம்ம ராசியின் அதிபதி, குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட இவ்விரு கிரகங்களின் சேர்க்கையும் மேஷ ராசியில் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த கிரக சேர்க்கைகளின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குரு-சூரிய சேர்க்கை
இந்த ஆண்டு குரு சூரிய சேர்க்கை ஏப்ரல் மாதத்தில் நிகழவுள்ளது. அதில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைகிறார். அதற்கு முன் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைகிறார். இதனால் ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் குரு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் மிகவும் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் இக்காலத்தில் எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் வெற்றி காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை காண்பார்கள். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாகவும், இனிமையாகவும் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் கூட்டு தொழில் செய்ய நினைப்போருக்கு இக்காலகட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக இக்காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். முக்கியமாக கையில் பணம் அதிகம் சேரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, விரும்பிய வேலை கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதே வேளையில் செலவுகளும் அதிகமாக இருக்கும். முடிந்தவரை பணத்தை அதிகம் செலவு செய்யாமல், சேமிக்க முயற்சி செய்ய வேண்டும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். இதுவரை திருமணத்தில் தடைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அது நீங்கி, நல்ல திருமண வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications