Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
சனி-சூரிய சேர்க்கையால் மார்ச் 15 வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகுது..
2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதன் பின் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனால் கும்ப ராசியில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியனும், நீதிமான் சனி பகவானும் ஒரே ராசியில் ஒன்றாக பயணிப்பது, இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் சனியும், சூரியனும் மகன் தந்தை உறவைக் கொண்டிருந்தாலும், எதிரி கிரகங்களாக இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

அந்த வகையில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். அதன் பின் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனால் கும்ப ராசியில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது 2023 மார்ச் 15 வரை நீடித்திருக்கும். இப்போது கும்பத்தில் சனி-சூரிய சேர்க்கையால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய-சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையேயான உறவு வலுபெறும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய-சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலம் நன்றாக இருக்கும். நிதி ரீதியாக, இக்காலம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்வது நல்ல பலனைத் தரும். வேலை மற்றும் வியாபாரத்தில் சில சிரமங்களை சந்தித்தாலும், வெற்றி காண்பீர்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக சுமாராக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு முக்கியமான முதலீட்டையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பணியில் சில சவால்களை சந்திக்க நேரிடும். புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். திருமணமானவர்கள் இக்காலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் உடல்நலம் நன்றாக இருக்கும். பழைய முதலீடுகளால் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவீர்கள். வியாபாரிகள் தங்கள் கூட்டாளருடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. கடன் வாங்க அல்லது கொடுக்க நேரிடும். வேலை அல்லது வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் தங்கள் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இழப்பைத் தவிர்க்க திட்டமிட்டு வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பங்கு சந்தையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் தங்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் மன ரீதியான அல்லது உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் பண பிரச்சனை அதிகம் இருக்காது. முதலீடுகளை செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வேலை அல்லது வியாபாரம் செய்பவர்கள், தங்கள் வேலையில் பெரிய லாபத்தைக் காணலாம். திருமணமான தம்பதிகள் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த பெரிய முதலீடுகளையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வேலை மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எந்த ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகளை சந்திக்கலாம். செலவுகளை பார்த்து செய்ய வேண்டும். முதலீடு செய்வதாக இருந்தால், அதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பண இழப்பு ஏற்படலாம். வேலை அல்லது வியாபாரம் செய்பவர்கள் இந்த காலத்தில் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலையைத் தொடங்காமல் இருப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பேச்சால் உறவில் சிக்கல்கள் அதிகரிக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலையைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி-சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வேலை அல்லது வியாபாரத்தில் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திருமணமான தம்பதிகளிடையே விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications