Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
பிப்ரவரி மாசத்துல இந்த 4 ராசிக்காரங்களுக்கு பண வரவு அமோகமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 பிப்ரவரி மாத கிரக மாற்றங்களால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, பண வரவும் சிறப்பாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் வரப்போகிறது. இம்மாதத்தில் நடக்கவிருக்கும் கிரக பெயர்ச்சிகளால் பிப்ரவரி மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் பல பெரிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றவிருக்கின்றன. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் நல்ல அல்லது கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் பிப்ரவரி 04 ஆம் தேதி புதன் வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணிக்க உள்ளார். பின்னர் பிப்ரவரி 13 அன்று சூரியன் கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி செவ்வாய் மகர ராசிக்கும், பிப்ரவரி 27 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்கும் இடம் மாறுகின்றன. இந்த கிரக மாற்றங்களால் 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, பண வரவும் சிறப்பாக இருக்கும். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கும். இம்தத்தில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் மரியாதை கூடும. உயர் அதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் கடின உழைப்பிற்கான முழு பலனைப் பெறுவார்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சாதகமானதாக இருக்கும். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் நற்செய்திகளைப் பெறுவார்கள். உங்களின் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைக் காண்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். சம்பளம் வாங்குபவர்களுக்கு இம்மாதம் நல்ல வெற்றி கிடைக்கும். பயணங்களால் பண ஆதாயம் உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களே! நிதியைப் பெறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். பல மூலங்களில் இருந்து பணம் வருவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஒன்றிற்கு மேற்பட்ட மூலங்களில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள். இம்மாதத்தில் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டைத் தேடி வரும். உங்களின் புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். வியாபாரம் மற்றும் தொழில் என இரண்டிலுமே முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைக் கொண்டிருப்பீர்கள். இது உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
