Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
வீட்டில் சிவலிங்கம் வைத்தால் இந்த விஷயங்களை செய்யாதீங்க.. இல்லன்னா கஷ்டங்கள் அதிகரிக்கும்...
வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வணங்கக்கூடாது என்பதில்லை. இருப்பினும் வீட்டில் சிவலிங்கத்தை வைப்பதற்கு சில விதிகள் உள்ளன. இந்த விதிகளை மீறினால் அது ஒருவரின் பாவத்தை அதிகரிப்பதோடு, வாழ்வில் நிறைய சிக்கல்களை உருவாக்கும்.
மும்மூர்த்திகளுள் அழிக்கும் கடவுள் தான் சிவபெருமான். இவர் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். சிவபெருமானின் தீவிர பக்தர்கள் இவ்வுலகில் ஏராளமானோர் உள்ளனர். பொதுவாக சிவபெருமானை வழிபட மக்கள் கோவில்களுக்கு தான் செல்ல வேண்டும். ஏனெனின் சிவலிங்கத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்பர்.

ஆனால் சிவனின் பக்தர்கள் சிவபெருமான வழிபட தங்களின் வீடுகளில் சிவலிங்கத்தை நிறுவுகின்றனர். வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வணங்கக்கூடாது என்பதில்லை. இருப்பினும் வீட்டில் சிவலிங்கத்தை வைப்பதற்கு சில விதிகள் உள்ளன. இந்த விதிகளை மீறினால் அது ஒருவரின் பாவத்தை அதிகரிப்பதோடு, வாழ்வில் நிறைய சிக்கல்களை உருவாக்கும். இப்போது வீட்டில் சிவலிங்கம் இருக்கும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம்.

சரியான இடத்தில் வைக்கவும்
சிவலிங்கத்தை வீட்டில் தொடர்ந்து வழிபட முடியாத இடத்தில் வைக்காதீர்கள். அதோடு சிவலிங்கம் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக சிவன் வைக்கும் இடமானது வசதியாக அமர்ந்து சிவனை வழிபடும் வகையில் இருக்க வேண்டும்.

மஞ்சள் கூடாது
என்ன தான் மஞ்சள் பெண்களின் அழகை அதிகரிக்கும் ஓர் அழகுப் பொருளாகவும், மருத்துவ குணம் நிறைந்த பொருளாக இருந்தாலும், சிவனுக்கு மஞ்சளை படைக்ககூடாது என்பது தெரியுமா? எனவே தெரியாமல் கூட சிவலிங்கத்தின் மேல் மஞ்சளை தடவாதீர்கள்.

குங்குமம் கூடாது
சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்ய விரும்புபவர்கள், குங்குமத்தை மறந்தும் லிங்கத்தின் மீது தடவாதீர்கள். ஏனெனில் ஒரு பெண்ணின் கோரிக்கைகளில் கணவனின் நீண்ட ஆயுளுடன் குங்குமமும் தொடர்புடையதாக கருதப்படுகிறது. சிவன் ஒரு அழிக்கும் கடவுள். எனவே சிவலிங்கத்தின் மீது ஒருபோதும் குங்குமத்தை பூசக்கூடாது.

தங்கம், வெள்ளி
வீட்டில் வைக்கப்படும் சிவலிங்கம் எப்போதும் தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் இருக்க வேண்டும். சிவலிங்கத்தின் மீது பானையில் இருந்து விழுதும் நீர்த்துளிகள் தொடர்ந்து லிங்கத்தின் மீது கொட்ட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

துளசி இலைகள்
துளசி இலைகளை சிவலிங்கத்திற்கு படைக்கக்கூடாது. வேண்டுமானால் வில்வ இலைகளைக் கொண்டு சிவலிங்கத்திற்கு பூஜைகளை செய்யலாம். அதுமட்டுமின்றி, தினமும் அதிகாலையில் எழுந்து குளித்த பிறகு சிவலிங்கத்திற்கு சந்தனம் இட வேண்டும்.

தேங்காய் நீர்
சிவலிங்கத்தின் மீது தேங்காயை நீரால் அபிஷேகம் செய்யக்கூடாது. ஆனால் தேங்காயை படைக்கலாம். அதேப்போல் தாழம் பூ, சம்பங்கி அல்லது செண்பக பூக்களைக் கொண்டு சிவலிங்கத்திற்கு பூஜைகளை செய்யக்கூடாது. ஏனெனில் இந்த பூக்கள் சிவபெருமானால் சபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications