Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஜோதிடத்தின் படி இந்த மசாலா பொருட்கள் உங்கள் கிரக நிலைகளை பலப்படுத்தி வளமான வாழ்வளிக்குமாம்!
இந்திய மசாலாப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அதனை சரியாக பயன்படுத்துவதன் மூலம் கிரகங்களை வலிமைப்படுத்தி நல்ல பலனைக் கொடுக்கும்.
இந்தியாவின் மசாலா பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதற்கு காரணம் அவற்றின் நறுமணமும் அவை உணவிற்கு வழங்கும் வித்தியாசமான சுவையும்தான். உணவுப்பொருள் என்பதையும் தாண்டி இந்திய மசாலாப்பொருட்கள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனால்தான் அவை பல ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய மசாலாப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அதனை சரியாக பயன்படுத்துவதன் மூலம் கிரகங்களை வலிமைப்படுத்தி நல்ல பலனைக் கொடுக்கும். வேத ஜோதிடத்தின் படி, சில இந்திய மசாலாப் பொருட்கள் பலவீனமான கிரக இயக்கங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படலாம், அவை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தப் பதிவில் எந்தெந்த மசாலா பொருட்கள் கிரக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் சுக்கிர கிரகம் பலப்படுகிறது. மதியம் அல்லது இரவு உணவிற்கு பிறகு கற்கண்டுடன் சேர்த்தோ அல்லது இல்லாமலோ இதனை சாப்பிடுவது அமிலத்தன்மை அல்லது குமட்டல் பிரச்சினையை நீக்குகிறது, நீங்கள் வெளியில் செல்லும்போது வெல்லத்துடன் பெருஞ்சீரகம் சாப்பிடுங்கள், இதைச் செய்வதன் மூலம் உங்கள் வேலையை சரியாக முடிக்க உங்களின் செவ்வாய் கிரக நிலை உதவும்.

இலவங்கப்பட்டை
ஒருவரின் செவ்வாய் மற்றும் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அவர்கள் தண்ணீரில் இலவங்கப்பட்டை மற்றும் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது உங்கள் உடலில் சக்தியை அதிகரிக்கும் மற்றும் குளிர்காலத்தில் இருமலை குறைக்க உதவியாக இருக்கும்.

மிளகாய்
உங்கள் ஜாதகத்தின் சூரியனும்,சந்திரனும் உங்களுக்கு அனுகூலமான பலன்களை வழங்க மிளகாய் சாப்பிட வேண்டும். இது இருமலை குறைப்பதுடன், நம் நினைவாற்றலையும் அதிகரிக்கும். மேலும் நீங்கள் வீட்டில் எந்தவிதமான மோசமான விளைவுகளும் ஏற்படாமல் இருக்க ஒரு தாமிர பாத்திரத்தில் மிளகாயை போட்டு அதனை உணவு மேசையின் மீது வைக்கவும். இது உங்கள் வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை ஆற்றலைத் தடுக்கும்.

பார்லி
பார்லி சாப்பிடுவது உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடும். குறிப்பாக பார்லியை தொடர்ந்து சாப்பிடுவது கல் பிரச்சினைகள் ஒருபோதும் வராது. புதன் கிரகத்தின் தாக்கத்தை அதிகரிக்கவும், பலப்படுத்தவும் பார்லி உதவும்.

ஏலக்காய்
ராகு-கேதுவில் யாருக்காவது சிக்கல் இருந்தால், பச்சை ஏலக்காயை பாலில் போட்டு கொதிக்க வைத்து 6 வாரங்கள் குடித்தால், பிரச்சினை தீர்க்கப்படும். ஆரோக்கியத்தை பராமரிக்க அல்லது கால்சியத்திற்காக பால் குடிக்க விரும்புவோருக்கு இது உதவியாக இருக்கும், ஆனால் பால் குடித்த பிறகு செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மஞ்சள்
மஞ்சளின் அற்புத குணங்களை நாம் அனைவரும் அறிவோம், மஞ்சள் உட்கொள்வதன் மூலம் குருவின் நிலை நன்றாகிறது, மேலும் நீங்கள் மஞ்சளை நூலில் கட்டி கழுத்தில் அணியலாம், இது ஒரு நல்ல பலனைத் தரும். மஞ்சள் கொண்டு பால் குடிப்பதால் கீல்வாதம், எலும்புகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிறந்த முடிவு கிடைக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.



Click it and Unblock the Notifications