Just In
- 6 hrs ago
பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா? அப்ப இந்த சாக்லேட் ஃபேஸ் பேக்கை போடுங்க..
- 7 hrs ago
பெண்களே! உங்க முன்னாள் காதலன் மீண்டும் உங்கள காதலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 7 hrs ago
இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?
- 8 hrs ago
வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கணுமா? அப்ப குரு பூர்ணிமா அன்னிக்கு இத தானம் பண்ணுங்க..
Don't Miss
- News
மம்தா பானர்ஜி வீட்டில் ‘பதுங்கியது’ யார்? கிடைக்காத துப்பு -விசாரிக்க சிறப்பு புலானாய்வு படை அமைப்பு
- Finance
ஜகா வாங்கிய டிக்டாக்.. அமெரிக்கா, ஐரோப்பிய திட்டங்கள் கைவிட்டது..!
- Movies
பிரம்மாண்ட பட்ஜெட்டுடன் கனவுப்படத்தில் களமிறங்கும் இயக்குநர் ஷங்கர்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
- Sports
இரண்டு தவறுகளால் மொத்தமாக போச்சு..தோல்வி குறித்து டிராவிட் கருத்து..சீனியர்களுக்கு மறைமுக எச்சரிக்கை
- Automobiles
சிட்டி ஹைப்ரிட் மாடல் வந்த நேரம்... இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனத்திற்கு ஏறுமுகம்... மேட்டர் என்னனு தெரியுமா
- Technology
108எம்பி மெயின் கேமரா: மாஸ் காட்டும் Infinix நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்: எப்போது அறிமுகம்?
- Travel
ஸ்டார்கேஸிங் செய்து இரவை இனிமையாக கழிக்க வேண்டுமா? இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்களுக்கு சனி பகவானின் அருள் இருந்தா, இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுமாம்.. அது என்ன?
நவகிரகங்களில் சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். சனி பகவானுக்கு யாரை பிடிக்குமோ, அவருடைய வாழ்வில் செல்வம், பெருமை மற்றும் புகழில் எந்த குறைவும் ஏற்படாது. ஜோதிடத்தின் படி, சனி பகவானால் யாரேனும் ஆசீர்வதிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் நடக்கவிருந்தாலோ, அது சில அறிகுறிகளை வெளிக்காட்டும். சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். இத்தகைய சனி பகவானின் கோபத்திற்கு ஒருவர் ஆளானால், அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவே சனி பகவானின் அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைத்தால், அவர் வாழ்க்கையில் செல்வம், புகழ், ஆடம்பரம் போன்றவற்றில் ஒருபோதும் குறைவிருக்காது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவானின் அருளை ஒருவர் பெற்றிருந்தாலோ அல்லது பெறவிருந்தாலோ, அவர் சில அறிகுறிகளை உணரத் தொடங்குவார். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

சனிக்கிழமைகளில் செருப்பு திருடு போவது
பொதுவாக கோவிலுக்கு சென்றால் காலணிகள் திருடுப் போகும். ஆனால் சனிக்கிழமைகளில் கோவிலுக்கு செல்லும் போது உங்களின் காலணிகள் திருடு போகிறதா? அப்படியானால் சனி பகவானின் அருள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். சனிக்கிழமைகளில் திருடு போகும் காலணிகள், சனி பகவானின் ஆசியைக் குறிக்கும் மற்றும் அதிர்ஷ்ட கதவு திறக்கவிருப்பதைக் குறிக்கிறது.

திடீரென்று பணம் கிடைக்கும்
உங்களுக்கு திடீரென்று எங்கிருந்தோ பணம் கிடைத்தால் மற்றும் அதிக உழைப்பில்லாமல் பணக்காரராகத் தொடங்கினால், அது மிகவும் நல்ல அறிகுறி. இதற்கு சனி பகவானின் அருள் கிடைத்துள்ளது என்று அர்த்தம். இத்தகையவர்கள் வாழ்க்கையில் பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டுமானால், ஏழை எளியோருக்கு, ஆதரவற்றவர்களுக்கு தானம் செய்யுங்கள் மற்றும் உதவுங்கள். இதனால் சனி பகவானின் அருள் எப்போதும் கிடைக்கும்.

மரியாதை உயரும்
சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்க ஆரம்பிக்கிறதா? அப்படியானால் சனி பகவானின் கருணை உங்கள் மீது உள்ளது என்பதற்கான அறிகுறி. சனி பகவானின் ஒருவரின் செயலால் மகிழ்ச்சி அடைந்தால், சமூகத்தில் அந்நபரின் நிலை மற்றும் மரியாதை அதிகரிக்க தொடங்கும். இப்படி உங்கள் வாழ்வில் நிகழ்ந்தால், சனி பகவானுக்கு நன்றி கூறி அவரை வணங்குங்கள்.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
சனி பகவானின் அருளைப் பெற்றவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக ஆரோக்கியமாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு எவ்விதமான ஆரோக்கிய பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலோ, சனி பகவான் உங்களிடம் கருணை காட்டுகிறார் என்று அர்த்தம். மேலும் இத்தகையவர்கள் நோயாளிகளுக்கு நன்கொடை அளிப்பதும், உதவுவதும் நல்லது.