Just In
- 3 hrs ago
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- 10 hrs ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- 11 hrs ago
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 11 hrs ago
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
Don't Miss
- News
அதிக கல்லூரிகள் கொண்ட மாநிலங்கள்.. டாப் 5 இடங்களில் தமிழகம் இல்லை.. யாருக்கு முதலிடம் தெரியுமா
- Sports
"பயந்ததை போலவே நடக்குதே".. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுக்த அட்டகாச முடிவு!
- Movies
AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நவராத்திரியில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டின் சாரதா நவராத்திரி செப்டம்பர் 26 அம் தேதி தொடங்குகிறது. நவராத்திரியின் 9 நாட்களிலும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் மிகவும் சிறப்பாக வழிபடப்படுகின்றன. நவராத்திரியின் முதல் நாளில் கலசம் நிறுவப்பட்டதும், கிரக நிலைகளால் நவராத்திரி காலமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த பொற்காலமாக இருக்கும். ஏனெனில் நவராத்திரியில் சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருளுடன், துர்கா தேவியின் ஆசியும் கிடைப்பதால், பலவிதமான நன்மைகளைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
துர்கா தேவியின் அருளால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறப் போகிறார்கள். திருமணமானவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தை அனுபவிப்பார்கள். நவராத்திரி நாட்களில் மேஷ ராசிக்காரர்கள் சிலருக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்
நவராத்திரி காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். முக்கியமாக துர்கா தேவியின் முழு அருளும் கிடைக்கும். இக்காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களின் கடின உழைப்பினால் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவராத்திரி காலத்தில் துர்கையின் அருள் முழுமையாக கிடைப்பதால், இக்கால கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இக்காலத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்களின் நேர்மறையான அணுகுமுறையால் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் வரன் தேடி வந்து, திருமணம் கைகூடும்.

விருச்சிகம்
துர்கா தேவியின் ஆசியால் விருச்சிக ராசிக்காரர்களின் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சொத்துக்களால் நற்பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன்ன உறவு வலுபெறும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிதி நிலை வலுவாகும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். துர்கையின் அருளால் இக்காலத்தில் பணியிடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எந்த துறையில் இருந்தாலும் அதில் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். நவராத்திரி காலத்தில் நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருப்பதை உணர்வீர்கள். முக்கியமாக இக்காலத்தில் எந்த புதிய வேலையைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.