Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
தந்தேராஸ் நாளில் வக்ர நிவர்த்தியாகும் சனி: யாருக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு சிரமமாகவும் இருக்கும் தெரியுமா?
தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டு சனி பகவான் ஏப்ரல் மாதத்தில் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்று, பின் வக்ர நிலையில் மீண்டும் மகர ராசியை அடைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்நாள் தான் தந்தேராஸ். தந்தேராஸ் நாளில் மக்கள் குபேர லட்சுமி பூஜையை செய்வதோடு, தங்கம், வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்களை வாங்குவார்கள். ஏனெனில் இந்நாள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.

தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிகளுக்கு சனியுடன், குபேரனின் அருளும் கிடைக்கும். இதனால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். இப்போது தந்தேராஸ் நாளில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கும் என்பதைக் காண்போம்.

சனி மற்றும் குபேரனின் அருளைப் பெறும் ராசிக்காரர்கள்:
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தந்தேராஸ் மற்றும் தீபாவளி சிறப்பானதாக இருக்கும். அதோடு சனி வக்ர நிவர்த்தி அடைவதால், மேஷ ராசிக்காரர்கள் சனியின் அருளால் நற்பலனைப் பெறுவார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும். நிதி ரீதியாகவும் நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வலுவான பொருளாதார நிலையால் பணப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி பல நன்மைகளை வாரி வழங்கும். செல்வம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதால், பணப் பிரச்சனைகள் நீங்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களைச் தேடி நற்செய்திகள் வரும்.

சனி வக்ர நிவர்த்தி 2022
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சனி மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். ஆனால் தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைந்து மகர ராசியில் நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். இந்த மகர ராசியில் சனி பகவான் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்கு செல்வார்.

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அது அனைத்து ராசிகளிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் மகர ராசியில் வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான், லேசான செல்வாக்கைக் கொண்டிருப்பார். ஆனால் அக்டோபர் 23 ஆம் தேதிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சனியால், ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மீது சனி வலுவான செல்வாக்கைக் கொண்டிருப்பார். இதில் ஏழரை சனியால் சிரமப்படும் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த சனி வக்ர நிவர்த்தியானது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிக தீங்கை விளைவிக்கும்.



Click it and Unblock the Notifications
