Latest Updates
-
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
மகர ராசியில் சனி வக்ர நிவர்த்தியாவதால் 2023 ஜனவரி வரை இந்த 5 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...
சனி 2022 அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் மீண்டும் பயணிக்கவுள்ளார். சனி வக்ர நிவர்த்தி அடைவதால், நற்பலன்கள், கெடு பலன்கள் என இரண்டுமே கிடைக்கலாம்.
ஜோதிடத்தின் படி, நமது வாழ்வில் என்ன நடந்தாலும், அதற்கும் கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் ராசிகளுக்கும் தொடர்புண்டு. அதனால் தான் கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நவகிரகங்களில் சனியின் தாக்கம் தான் மனித வாழ்வில் அதிகம் உள்ளது. இந்த கிரகம் மிகவும் மெதுவாக நகர்வதால், இதன் தாக்கம் நீண்ட காலம் இருக்கும்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசிக்கு சென்ற சனி, ஜூன் 5 ஆம் தேதி கும்பத்தில் வக்ரமானார். அதன் பின் ஜூலை 12 ஆம் தேதி வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து மகரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி 2022 அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் மீண்டும் பயணிக்கவுள்ளார். சனி வக்ர நிவர்த்தி அடைவதால், நற்பலன்கள், கெடு பலன்கள் என இரண்டுமே கிடைக்கலாம். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதி சனி. இந்த சனி 10 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனையால் சற்று கஷ்டப்படுவீர்கள். முக்கியமாக நிதி பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

கடகம்
கடக ராசியின் 8 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதி சனி. இந்த சனி 7 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழப்பை சந்திக்க நேரிடும்.

கன்னி
கன்னி ராசியின் 5 மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி. இந்த சனி 5 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் மாணவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் பணி மாற்றம் செய்ய நினைத்தால், அதை இக்காலத்தில் செய்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தனுசு
ஜோதிடத்தின் படி, தனுசு ராசியின் 3 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதி சனி. இந்த சனி 2 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். சிலர் தங்களின் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டின் அதிபதி சனி. இந்த சனி 12 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களின் சகோதர மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.



Click it and Unblock the Notifications
