Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சனி அமாவாசை அன்று இதை செய்தால் பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகுமாம்...
ஜோதிடத்தின் படி, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்களை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பலவிதமான தொல்லைகளால் அவதிப்படுவார்கள்.
2021 சனி அமாவாசை டிசம்பர் 04 ஆம் தேதி ஆகும். இந்த நாளில் தான் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆகும். மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சூரிய கிரகணம் சனி அமாவாசை நாளில் நிகழ்கிறது. சனி அமாவாசை என்பது சனிக்கிழமையில் வரும் அமாவாசை ஆகும்.
சனி பகவான் ஒரு நீதிமான். ஒருவர் கெட்டது செய்தால் அவருக்கு கெடு பலன்களையும், நல்லது செய்தால் நல்ல பலன்களையும் தரக்கூடியவர். எனவே தவறு செய்யாதவர்கள் சனி பகவானைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் சனி பகவான் தேவையில்லாமல் யாரையும் துன்புறுத்துவதில்லை.

ஜோதிடத்தின் படி, சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனி அமாவாசை நாளில் தான தர்மங்களை செய்வது நல்லதாக கூறப்படுகிறது. சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் பலவிதமான தொல்லைகளால் அவதிப்படுவார்கள். அதில் வேலையில் தடங்கல், பணப் பிரச்சனை, எந்த வேலையையும் எளிதில் முடிக்க முடியாமை, திடீர் காயங்கள் அல்லது தொடர்ச்சியான இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீங்கள் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இதிலிருந்து விடுபட சனி அமாவாசை நாளில் சனி பகவானுக்கு உரிய பொருட்களை தானமாக வழங்குவது சிறந்த வழியாகும்.
இப்போது சனி அமாவாசை நாளில் எவற்றையெல்லாம் தானமாக வழங்கினால் சனி பகவானின் தாக்கம் குறையும் என்பதைக் காண்போம்.

நல்லெண்ணெய்
சனி பகவானின் கடுமையான தாக்கம் அல்லது தோஷம் நீங்க, ஒரு பௌலில் நல்லெண்ணெயை எடுத்து, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த பௌலுடன் எண்ணெயை சனி பகவான் கோவிலில் வைக்க வேண்டும். ஏனெனில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் மிகவும் பிடிக்கும் என்பதால், இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சி அடைவதாக நம்பப்படுகிறது.

கருப்பு உளுத்தம் பருப்பு
முழு கருப்பு உளுத்தம் பருப்பு ஒரு கருப்புத் துணியில் கட்டி, அதை வெள்ளிக்கிழமை இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் அல்லது அருகில் வைத்து தூங்க வேண்டும். பின் மறுநாள் சனிக்கிழமை அன்று அந்த உளுத்தம் பருப்பு மூட்டையை சனி பகவான் கோவிலில் வைக்க வேண்டும். இதனால் சனியின் தாக்கம் குறையும்.

ஆண்டிமினி
ஒரு கருப்பு ஆண்டிமினியை வாங்கி, அதை தலை முதல் கால் வரை 9 முறை வைத்து எடுத்து, நிலத்தில் புதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சனி தோஷம் மற்றும் சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

சனி மந்திரம்
'ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌண் சஷ்ண்யே நமஹ்' என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் சனியின் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இவ்வாறு சனி பகவானை மனதில் நினைத்து சொல்வதன் மூலம், சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

சனியின் பாதங்கள்
ஒருவரது ஜாதகத்தில் சனியின் தாக்கம் இருந்தால், அவர்கள் எப்போதும் சனி பகவானை தொழும் போது, சனியின் பாதங்களைத் தான் பார்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சனி பகவானின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து தொழாதீர்கள்.



Click it and Unblock the Notifications