இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...

ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, தூங்கும் போது நாம் காணும் சில கனவுகள் நாம் பணக்காரர் ஆகப் போவதைக் குறிக்கும். கனவு அறிவியலின் படி, நாம் காணும் சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளின் அறிகுறியாகவும் உள்ளன.

கனவு சாஸ்திரத்தில், ஒவ்வொரு கனவிற்கும் சில அர்த்தம் உள்ளது. சாஸ்திரத்தின் படி, கனவில் காணும் அனைத்துமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் கனவில் காணும் சில விஷயங்கள், பண வரவின் அறிகுறியாக கருதப்படுகிறது. கனவு உலகமானது நிஜ உலகில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. நாம் தூங்கும் போது இந்த கனவு உலகிற்கு செல்கிறோம். சில சமயம் நமக்கு வரும் கனவானது நம் ஆழ்மனதின் எண்ணமாக அல்லது ஆசையாக இருக்கும். ஆனால் நாம் காணும் ஒவ்வொரு கனவும் நனவாக வேண்டும் என்ற அவசியமில்லை.

Seeing These Things In Your Dream Is A Sign Of Going To Be Rich Soon

ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, தூங்கும் போது நாம் காணும் சில கனவுகள் நாம் பணக்காரர் ஆகப் போவதைக் குறிக்கும். கனவு அறிவியலின் படி, நாம் காணும் சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளின் அறிகுறியாகவும் உள்ளன. சில சமயங்களில் அந்த கனவுகள் நல்லவையாகவோ, சில நேரங்களில் அவை மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். இப்போது ஒருவரது கனவில் என்னென்ன விஷயங்களை கண்டால், பணக்காரர் ஆக வேண்டுமென்ற கனவு நனவாகும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளக்கு

விளக்கு

உங்களின் கனவில் தீபம் எரிவது போன்று தென்பட்டால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் கனவில் விளக்கை காண்பது உங்களைத் தேடி நிறைய பணம் வரப் போகிறது என்பதற்கான அறிகுறி.

காதணி

காதணி

நீங்கள் தூங்கும் போது கனவில் காதணிகளை காண்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம். எனவே இந்த கனவு வந்த நாளில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மோதிரம்

மோதிரம்

கனவு சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் கனவில் மோதிரம் அணிவதைக் கண்டால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கனவில் மோதிரம் வருவது லட்சுமி தேவியின் அருள் உங்கள் மீது உள்ளது என்று அர்த்தம்.

பாம்பு

பாம்பு

கனவில் பாம்பு வந்தாலே பலரும் அச்சம் கொள்வதுண்டு. ஆனால் ஒருவரது கனவில் பணம் வைக்கும் பெட்டிக்கு அருகே பாம்பைக் கண்டால், அது பணம் உங்களைத் தேடி வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

பால்

பால்

நீங்கள் உங்கள் கனவில் பால் குடிப்பது போன்று காண்கிறீர்களா?அப்படியானால் உங்கள் கையில் பணம் அதிகம் சேரப் போகிறது, நீங்கள் பணக்காரர் ஆவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

தங்கம்

தங்கம்

கனவில் தங்கத்தைக் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தங்கம் லட்சுமி தேவி இருக்கும் பொருளாகும். இந்த தங்கம் ஒருவரது கனவில் வந்தால், அவருக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் உள்ளது என்றும், அவர் விரைவில் பணக்காரர் ஆகப் போகிறார் என்றும் அர்த்தம்.

ரோஸ்

ரோஸ்

ஒருவர் தனது கனவில் ரோஸ் அல்லது தாமரைப் பூவைக் கண்டால், லட்சுமி தேவியின் அருள் பொழியப் போகிறது என்று அர்த்தம். ஏனெனில் ரோஜா, தாமரை ஆகிய இரண்டுமே லட்சுமி தேவிக்குரிய மலர்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, August 19, 2022, 18:10 [IST]
Desktop Bottom Promotion