மரணத்தைப் பற்றிய சில பயங்கரமான மூடநம்பிக்கைகள்!

ஒருவரது மரணத்திற்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த மரணம் பல வினோதமான மூடநம்பிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.

மரணம் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும். நாம் என்ன தான் செய்தாலும், மரணத்தில் இருந்து எவராலும் தப்ப முடியாது. அதனால் தான் என்னவே அது அனைவரும் அச்சம் கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. ஒருவரது மரணத்திற்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த மரணம் பல வினோதமான மூடநம்பிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.

Scary Superstitions About Death

கீழே மரணத்துடன் தொடர்புடைய மிகவும் பொதுவான மற்றும் வினோதமான மூடநம்பிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் நம்பமுடியாதவாறு இருந்தாலும், தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மிகவும் பயங்கரமானவையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரே நேரத்தில் மூன்று மரண செய்திகள்

ஒரே நேரத்தில் மூன்று மரண செய்திகள்

மரணம் ஒரே நேரத்தில் மூன்று பேரை வேட்டையாடும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆகவே, நீங்கள் நேசித்தவரின் மரணம் குறித்த செய்தியைக் கேட்டால், விரைவில் மேலும் இரண்டு பேரின் மரண செய்தியையும் கேட்கலாம். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த மூடநம்பிக்கை உலகின் பெரும்பாலான நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.

ஒரே குச்சியில் மூவர் சிகரெட் பிடித்தால் மரணம்

ஒரே குச்சியில் மூவர் சிகரெட் பிடித்தால் மரணம்

இது மிகவும் விசித்திரமான ஒரு மூடநம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையானது இரண்டு பெரிய போர்களுக்குப் பின் பிரபலமாகிவிட்டது. இந்த மூடநம்பிக்கையின் படி, மூன்று பேர் ஒரே தீக்குச்சியில் சிகரெட்டைப் பிடிக்கக்கூடாது. அப்படி பிடித்தால், அக்குச்சியின் மூலம் சிகரெட்டை பற்ற வைத்த மூன்றாம் நபர் விரைவில் இறந்துவிடுவார்.

பறவைகள் மற்றும் மரணம்

பறவைகள் மற்றும் மரணம்

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களை நீங்கள் பார்த்திருந்தால், பறவைகள் எவ்வளவு பயமுறுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். பல கலாச்சாரங்களில், ஆந்தைகள் மற்றும் காகங்கள் மரணத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன. ஒரு ஆந்தை இரவில் உங்கள் தலைக்கு மேல் வேட்டையாடினால், மரணம் உங்கள் அருகில் உள்ளது என்று அர்த்தம். ஆந்தைகளைப் போன்றே காகங்களும் மரணத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. அடிக்கடி ஆறு காகங்களை ஒரே நேரத்தில் பார்ப்பது, மரணம் பெரும்பாலும் அருகில் இருப்பதைக் குறிக்கிறது.

மரணத்தின் பட்டாம்பூச்சி

மரணத்தின் பட்டாம்பூச்சி

மெக்சிகன் பிளாக் விட்ச், மரணத்தின் பட்டாம்பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை பூச்சி ஒருவரது வீட்டில் காணப்பட்டால், சமீபத்தில் இறந்த ஒருவர் அந்த வீட்டில் உள்ளோரை சந்திக்க வந்திருக்கலாம் அல்லது அந்த வீட்டில் நோய்வாய்ப்பட்ட ஒருவர் இறக்கப் போகிறார் என்று தென் அமெரிக்க மக்கள் நம்புகின்றனர்.

முடியில் வசிக்கும் இறந்த ஆத்மா

முடியில் வசிக்கும் இறந்த ஆத்மா

விசித்திரமான இந்த மங்கோலிய சடங்கு நிச்சயம் உங்கள் முடிகளை வெட்டுவதற்கு முன் இரண்டு முறை யோசிக்க வைக்கலாம். இந்த மூடநம்பிக்கையின் படி, இறந்து சுற்றித் திரியும் ஆத்மாக்கள் ஒருவரின் தலைமுடியில் பற்றிக் கொண்டு வசிக்கத் தொடங்குகின்றன. எனவே மங்கோலிய மக்கள் பலர், தங்களின் முடியை வெட்டுவதற்கு முன் ஒரு சூரிய மருத்துவரை அணுகி, அவர்களின் முடியில் ஏதேனும் ஆத்மா இருக்கிறதா என்று சோதித்து, பின் வெட்டுவார்களாம். ஒருவேளை இவ்வாறு சோதிக்காமல்ஆத்மா ஒட்டியிருக்கும் போதே முடியை வெட்டினால், விரைவில் இறந்துவிடுவார்களாம்.

பிரட்டுக்கு இடைப்பட்ட இடைவெளி மரணத்தைக் குறிக்கிறது

பிரட்டுக்கு இடைப்பட்ட இடைவெளி மரணத்தைக் குறிக்கிறது

இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான ஒரு மூடநம்பிக்கை தான் இது. இங்கிலாந்தில் உள்ள மக்கள், புதிதாக வேக வைத்த பிரட்டை வெட்டும் போது, அதற்குள் ஒரு வெற்று இடத்தைக் கண்டால், அது அந்த பிரட் உள்ள மேஜையில் இருக்கும் ஒருவருக்கு மரணம் வரக்போகிறது என்பதை குறிப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் வெற்று இடம் ஒரு சவப்பெட்டியைக் குறிக்கக்கூடியதாம்.

பெருவிரலை மடக்கவும்

பெருவிரலை மடக்கவும்

ஜப்பானில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு மூடநம்பிக்கை தான் இது. ஜப்பானில் பெருவிரல் "பெற்றோர் விரல்" என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எனவே ஜப்பானிய மக்கள் ஒரு மயானத்தைக் கடந்து செல்லும் போது, அவர்கள் தங்களின் கட்டைவிரலை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அது மரணத்தில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாக நம்புகின்றனர்.

மற்றொரு பிரபலமான மூடநம்பிக்கை ஒன்றும் உள்ளது. அது மயானத்தைக் கடக்கும் போது, மூச்சை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால், அலைந்து திரியும் ஆத்மாக்கள் உடலினுள் நுழைந்துவிடுமாம்.

மரணத்துடன் தொடர்புடைய சீடார் மரம்

மரணத்துடன் தொடர்புடைய சீடார் மரம்

பல சமூகங்கள் சீடார் மரத்தை மரணத்துடன் தொடர்புபடுத்துகின்றன. சிலரின் கூற்றுப்படி, ஒருவர் சிறிய சீடார் மரத்தை வேறு இடத்தில் பிடுங்கி நட முயற்சிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், நீங்கள் மரணத்தை அழைக்கிறீர்கள் என்று அர்த்தமாம்.

கேக்கை எரிப்பது

கேக்கை எரிப்பது

பிரட் மற்றும் கேக் இரண்டிற்கும் மரணத்துடன் ஒரு வித்தியாசமான தொடர்பு இருப்பதாக தெரிகிறது. கிறிஸ்துமஸ் அன்று கேக்கை எரிப்பது மிகவும் மோசமான சகுனமாக கருதப்படுகிறது. அதுவும் கேக்கை எரிக்கும் நபரைத் தேடி மரணம் வரும். எனவே இந்த கிறிஸ்துமஸ் அன்று நீங்கள் கேக்கை எரிப்பது பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், உடனே அதைத் தவிர்த்திடுங்கள்.

ஆண்குறி நம்பிக்கை

ஆண்குறி நம்பிக்கை

இது மிகவும் விசித்திரமான ஒரு மூடநம்பிக்கை. இந்த துருக்கிய மூடநம்பிக்கையின் படி, ஒரு பெண் ஆண்குறி பற்றி கனவு கண்டால், நெருங்கிய ஆண் நண்பர் விரைவில் இறக்கக்கூடும். இந்த அபத்தமான மூடிநம்பிக்கை எவ்வவாறு உருவானது என்பது யாருக்கும் தெரியாது.

மேலே கொடுக்கப்பட்டுள்ளன மூடி நம்பிக்கைகளைப் படிக்கும் போது, நாம் எவ்வளவு அபத்தமாக நம்பிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. எனவே இந்த முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை நம்புவதை கைவிட்டு, மரணம் வரும் போது அதை ஏற்றுக் கொள்ளுங்க.ள

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 8, 2020, 16:28 [IST]
Desktop Bottom Promotion