Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி-சுக்கிர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு செம ஜாக்பாட் அடிக்கப்போகுது..
30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் இந்த சனி, சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்து பயணிக்கும். இப்படி கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்தால், அதை கிரக சேர்க்கை என்று அழைப்பார்கள். 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல கிரக சேர்க்கைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் மற்றொரு கிரக சேர்க்கை கும்ப ராசியில் நிகழவுள்ளது. அதாவது 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் சென்றுள்ளார்.

அதே வேளையில் 2023 ஜனவரி 22 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் கும்ப ராசியில் சனி, சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் இந்த சனி, சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. பொதுவாக சனியும், சுக்கிரனும் நண்பர்களாக கருதப்படுகிறார்கள். நண்பர்கள் இருவரும் 30 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக இணைந்து பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி, சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இது வருமான வீடாகும். எனவே இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முதலீடு செய்த பணத்தால் நல்ல லாபத்தைக் காணப் போகிறார்கள். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். குறிப்பாக பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த சனி, சுக்கிர சேர்க்கையால் செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி, சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் கடின உழைப்பிற்கான நல்ல பலனைப் பெறுவார்கள். சனியின் அருளால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் வசதியும், ஆடம்பரமும் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். தொழிலை வியாபாரத்தை நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி, சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் இனிமையாக இருக்கும். திருமண பேச்சுகள் வீட்டில் பேசப்பட்டு வந்தால், விரைவில் திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் கூட்டு தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி, சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மார்கெட்டிங், விற்பனை போன்ற வேலையில் இருப்பவர்கள், தங்கள் பேச்சை இனிமையாக வைத்திருந்தால், இக்காலத்தில் நல்ல சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
